Thursday, June 17, 2010

தியாகராஜ கிருதி - ராம ராம ராம நாபை - ராகம் கல்யாணி - Rama Rama Rama Napai - Raga Kalyani

பல்லவி
ராம ராம ராம நாபை நீ த3
ராகயுண்ட3வச்சுனா ஓ ராம

சரணம்
சரணம் 1
தனயுனி ஏ 1ஜாதியைன ப்3ரோவனி
தல்லியு பு4வினி கலதா3 ஓ ராம (ராம)


சரணம் 2
2தனகு தானு வஞ்சன சேஸுகொனு
4னவந்துடு3 3கலடா3 ஓ ராம (ராம)


சரணம் 3
இலனு நிஸ்1சயமுக3 நீவு லேனி
தாவெந்தை3னனு கலதா3 ஓ ராம (ராம)


சரணம் 4
ஸுதுனி மாடகு தல்லி தண்ட்3ருலு
அஸூய படு3ட கலதா3 ஓ ராம (ராம)


சரணம் 5
4ப்3ரஹ்ம நிஷ்டு2டை3ட்டியா க4னுனிகி
ப்ரப3ல வஞ்சன கலதா3 ஓ ராம (ராம)


சரணம் 6
தொல்லி ஜேயு 5கர்மமனுப4விம்பகனு
தோயுவாரு கலரா ஓ ராம (ராம)


சரணம் 7
6கனக தருணுலாஸ லேனி ஸம்ஸாருலு
கலலைனனு கலரா ஓ ராம (ராம)


சரணம் 8
நிர்விகார ஸ்ரீ த்யாக3ராஜுனிகி
நின்னு வினா கலரா ஓ ராம (ராம)


பொருள் - சுருக்கம்
இராமா! மாற்றமற்றோனே!

  • என்மீது உனது தயை வாராதிருக்கலாகுமா?
    • மகவை, எந்த இனமாகிலும், காவாத தாய், புவியினில் உண்டா?
    • தனக்குத் தானே வஞ்சனை செய்துகொள்ளும் செல்வந்தன் உளனா?
    • இப்புவியினில், உறுதியாக, நீயில்லாத இடம் எங்காவது உளதா?
    • மக்களின் சொல்லுக்கு, தாய் தந்தையர் வெறுப்படைவதுண்டா?
    • பிரமத்தினில் நிலைப்போனாகிய அந்த மேலோனுக்கு, பெரும் வஞ்சனை உண்டா?
    • முன் செய் வினைகளினை அனுபவிக்காது தப்புவோருளரா?
    • பொன், பெண்ணாசை யற்ற சமுசாரிகள், கனவிலாகிலும், உளரா?
    • தியாகராசனுக்கு, உன்னையன்றி எவருமுளரா?

  • என்மீது உனது தயை வாராதிருக்கலாகுமா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ நாபை/ நீ/ த3ய/
இராமா/ இராமா/ இராமா/ என்மீது/ உனது/ தயை/

ராக/-உண்ட3வச்சுனா/ ஓ ராம/
வாராது/ இருக்கலாகுமா/ ஓ இராமா/


சரணம்
சரணம் 1
தனயுனி/ ஏ/ ஜாதியைன/ ப்3ரோவனி/
மகவை/ எந்த/ இனமாகிலும்/ காவாத/

தல்லியு/ பு4வினி/ கலதா3/ ஓ ராம/ (ராம)
தாய்/ புவியினில்/ உண்டா/ ஓ இராமா/


சரணம் 2
தனகு/ தானு/ வஞ்சன/ சேஸுகொனு/
தனக்கு/ தானே/ வஞ்சனை/ செய்துகொள்ளும்/

4னவந்துடு3/ கலடா3/ ஓ ராம/ (ராம)
செல்வந்தன்/ உளனா/ ஓ இராமா!


சரணம் 3
இலனு/ நிஸ்1சயமுக3/ நீவு/ லேனி/
இப்புவியினில்/ உறுதியாக/ நீ/ இல்லாத/

தாவு/-எந்தை3னனு/ கலதா3/ ஓ ராம/ (ராம)
இடம்/ எங்காவது/ உளதா/ ஓ இராமா/


சரணம் 4
ஸுதுனி/ மாடகு/ தல்லி/ தண்ட்3ருலு/
மக்களின்/ சொல்லுக்கு/ தாய்/ தந்தையர்/

அஸூய/ படு3ட/ கலதா3/ ஓ ராம/ (ராம)
வெறுப்பு/ அடைவது/ உண்டா/ ஓ இராமா/


சரணம் 5
ப்3ரஹ்ம/ நிஷ்டு2டை3ன/-அட்டி/-ஆ/ க4னுனிகி/
பிரமத்தினில்/ நிலைப்போனாகிய/ அத்தகைய/ அந்த/ மேலோனுக்கு/

ப்ரப3ல/ வஞ்சன/ கலதா3/ ஓ ராம/ (ராம)
பெரும்/ வஞ்சனை/ உண்டா/ ஓ இராமா/


சரணம் 6
தொல்லி/ ஜேயு/ கர்மமு/-அனுப4விம்பகனு/
முன்/ செய்/ வினைகளினை/ அனுபவிக்காது/

தோயுவாரு/ கலரா/ ஓ ராம/ (ராம)
தப்புவோர்/ உளரா/ ஓ இராமா/


சரணம் 7
கனக/ தருணுல/-ஆஸ/ லேனி/ ஸம்ஸாருலு/
பொன்/ பெண்/ ஆசை/ யற்ற/ சமுசாரிகள்/

கலலைனனு/ கலரா/ ஓ ராம/ (ராம)
கனவிலாகிலும்/ உளரா/ ஓ இராமா/


சரணம் 8
நிர்விகார/ ஸ்ரீ த்யாக3ராஜுனிகி/
மாற்றமற்றோனே/ ஸ்ரீ தியாகராசனுக்கு/

நின்னு/ வினா/ கலரா/ ஓ ராம/ (ராம)
உன்னை/ அன்றி/ (எவரும்) உளரா/ ஓ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - கலடா3 - க3லதா3.

5 - அனுப4விம்பகனு - அனுப4விஞ்சகனு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஜாதி - இவ்விடத்தில் இச்சொல் இனத்தினைக் குறிக்கும்.

2 - தனகு தானு வஞ்சன - தனக்குத் தானே வஞ்சனை - 'ராமா, நான் உன்னவன்; என்னை நீ காவாதிருத்தல், உன்னை, நீயே வஞ்சனை செய்துகொள்வது போலாகும்' என்கிறார் தியாகராஜர்.

4 - ப்3ரஹ்ம நிஷ்டு2டை3 - பிரமத்தில் நிலைத்திருப்போனாகிய - பிரமத்தினில் நிலைத்திருப்போனுக்கு, எத்தகைய மயக்கமும் இருப்பதற்கில்லை. அதனால், அவனுக்கு, ஏதும் வஞ்சனைகளும் கிடையாது. ஆனால், உலக ரீதியில், அவனுக்கு இடைஞ்சல்கள், அல்லல்கள் ஏற்படலாம். அவற்றினை, அவன் பொருட்படுத்தமாட்டான். எனவே, தியாகராஜர், 'ப்ரப3ல' (பெரும்) என்ற சொல்லினை இணைத்துள்ளார் என்று நான் கருதுகின்றேன். ஆயினும், தியாகராஜர், யாரை 'பிரமத்தில் நிலைத்திருப்போன்' என்று கூறுகின்றார்? மேலும், அவனுடைய நிலையினை, எங்ஙனம் இறைவனின் கருணையினைக் கோருதலுடன் இணைப்பது, என்று விளங்கவில்லை. 'பிரமத்தில் நிலைப்போன்' என்று தன்னைத் தானே கூறிக்கொள்கின்றாரா?

Top

6 - கனக தருணுலாஸ கலலைனனு லேனி - பொன், பெண்ணாசை கனவிலும் இல்லாத - இந்த சொற்களுக்கு, இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம். 'பொன், பெண்ணாசை கனவிலும் இல்லாதவன் உண்டா?' என்றும், 'பொன், பெண்ணாசை இல்லாதவன் கனவிலும் உண்டா?' என்றும். இச்சொல் உள்ள இடத்தினைக் கருத்தினில் கொண்டு, இரண்டாவதாகக் கூறப்பட்டதே பொருந்தும்.

தியாகராஜர், தான் 'விழிப்பு நிலை'யில் யாவற்றினையும் துறந்தாலும், கனவினில், 'வாசனை'கள் எனப்படும் சுவையுணர்ச்சியினால் அத்தகைய ஆசைகள் ஏற்படுவதனைத் தவிர்க்க இயலாது என்று கூறுவதாகப் பொருள் கொள்ளலாம்.

மாறாக, 'தானும் ஒரு சமுசாரியே, தனக்கும் அத்தகைய ஆசைகள் உண்டு' என்று கூறுவதாகப் பொருள் கொள்ளலாம். ஆயினும், தியாகராஜர் பல கீர்த்தனைகளில், தனக்கு உலகத்தினில், எந்த ஆசைகளும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகின்றார். 'வத்33னேவாரு' என்ற ஷண்முகப்ரியா ராக கீர்த்தனையினை நோக்கவும்.

Top

தியாகராஜரின் கீர்த்தனைகள் பெரும்பாலானவை, அவர், ராமனுடன் நடத்தும், ஒருதலை உரையாடலேயாகும் (monologue). இத்தகைய உரையாடலை அவர் தன் வாழ்நாள் முழுதும் நடத்தியிருப்பதாக அவருடைய கீர்த்தனைகளினின்று விளங்குகின்றது. எனவே, இந்த கீர்த்தனை அவருடைய வாழக்கையின் ஒர் படியாக (evolutionary step) கொள்ளலாம்.

மாறாக, பக்தி நெறியில், 'தன்னைத் தானே இகழ்தல்' (ஆத்ம க3ர்ஹண) என்ற முறையும் உண்டு. அதன்படி, தொண்டன், தன்னைத் தானே இழிவாக உணர்ந்து, இறைவன் தன்னைக் கைத்தூக்கி விடுவோனாகக் கருதி, வேண்டுதல் வழக்கம். அந்த முறையினைச் சேர்ந்ததாகவும் கொள்ளலாம்.

Top

ஆதி சங்கரர், தமது சிவானந்த லஹரியில் (20-வது செய்யுள்) கூறுவது -

"எவ்வமயும், மையலெனும் அடவியினில், கன்னியரின் முலை முகடுகளில் உலவும்,
ஆசையெனும் கிளைகளினில் தாவிக் கொண்டும், அங்குமிங்கும் திரிந்துகொண்டும்,
மிக்கு சபலமுடைத்த, எனது இதயமெனும் குரங்கினை, ஏ கபாலி! இரந்துண்போனே!
உறுதியாக, பக்தியினால் கட்டி, ஓ சிவனே! உன்னுடைய ஆளுகையில் கொணர்வாய்."
(ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

Top

ஆதி சங்கரர், இந்த கீர்த்தனையில் கூறப்பட்ட, 'பிரமத்தினில் நிலைத்திருப்பவர்'. அவருக்கு இத்தகைய மையல் இருப்பதற்கில்லை. ஆயினும், அத்தகைய பெரியோர், தமது தொண்டர்கள் மற்றும் பாமர மக்களின் மன நிலையினை உணர்ந்து, அவர்களுக்காக, தம்மை அந்நி்லைகளில் இருத்தி, இத்தகைய தோத்திரங்களை இயற்றியுள்ளனர். எனவே, 'பொன், பெண்ணாசை' என்ற இந்த கீர்த்தனைச் சொற்களையும் அந்த வகையினில் கொள்ளலாம்.

தப்புவோர் - தள்ளுவோர் எனவும் கொள்ளலாம்
சமுசாரி - உலகோர்

Top


Updated on 18 Jun 2010

No comments: