Saturday, June 19, 2010

தியாகராஜ கிருதி - வச்சுனு ஹரி - ராகம் கல்யாணி - Vacchunu Hari - Raga Kalyani - Prahlada Bhakti Vijayam

பல்லவி
வச்சுனு ஹரி நின்னு ஜூட3 வச்சுனு ஹரி நின்னு ஜூசி
மெச்சுனு ஹரி நின்னு ஜூசி (வ)

அனுபல்லவி
1குச்சித விஷயாது32சிச்சு ரீதியெஞ்சி நீவு
ஹெச்சுகா3னு மா ஸ்வாமினி மச்சிகதோ நுதியும்பு (வ)

சரணம்
சரணம் 1
தீ4ருனி ஸீதா ராமாவதாருனி ஸகல லோகாதா4ருனி
நிஜ ப4க்த 3மந்தா3ருனி நுதியிம்பவய்ய (வ)


சரணம் 2
4ன்யுனி வேல்புலலோ மூர்த4ன்யுனி ப்ரதி லேனி
லாவண்யுனி பரம காருண்யுனி நுதியிம்பவய்ய (வ)


சரணம் 3
ஏ ஜப தபமுலகு ராடு3 யாஜனாது3லகு ராடு3
ராஜிகா3 நுதியிஞ்சு த்யாக3ராஜ நுதுனி ஈ வேள (வ)


பொருள் - சுருக்கம்
அய்யா!

  • வருவான், அரியுன்னைக் காண;
  • வருவான், அரியுன்னைக் கண்டு மெச்சுவான்;
  • அரியுன்னைத் தேடி வருவான்.

  • இழிந்த விடயங்களினை நெருப்பு போன்றெண்ணி, நீ உயர்வாக, நமது இறைவனைக் காதலுடன் போற்றுவாய்;

    • தீரனை,
    • சீதா-ராமனாக அவதரித்தவனை,
    • அனைத்துலக ஆதாரமானவனை,
    • உண்மையான தொண்டர்களின் மந்தாரத்தினை,

    • மங்களமானவனை,
    • கடவுளரில் தலைசிறந்தோனை,
    • ஈடற்ற அழகனை,
    • மிக்கு கருணையுடையோனைப்

  • போற்றுவாயய்யா.

  • எந்த ஜப, தவங்களுக்கும் வாரான்;
  • வேள்விகளுக்கும் வாரான்.

  • முழு மனதுடன் போற்றுவாய், தியாகராசன் போற்றுவோனை, இவ்வேளை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வச்சுனு/ ஹரி/ நின்னு/ ஜூட3/ வச்சுனு/ ஹரி/ நின்னு/ ஜூசி/
வருவான்/ அரி/ உன்னை/ காண/ வருவான்/ அரி/ உன்னை/ கண்டு/

மெச்சுனு/ ஹரி/ நின்னு/ ஜூசி/ (வ)
மெச்சுவான்/ அரி/ உன்னை/ தேடி/ வருவான்...


அனுபல்லவி
குச்சித/ விஷய-ஆது3ல/ சிச்சு/ ரீதி/-எஞ்சி/ நீவு/
இழிந்த/ விடயங்களினை/ நெருப்பு/ போன்று/ எண்ணி/ நீ/

ஹெச்சுகா3னு/ மா/ ஸ்வாமினி/ மச்சிகதோ/ நுதியும்பு/ (வ)
உயர்வாக/ நமது/ இறைவனை/ காதலுடன்/ போற்றுவாய்/


சரணம்
சரணம் 1
தீ4ருனி/ ஸீதா/ ராம/-அவதாருனி/ ஸகல/ லோக/-ஆதா4ருனி/
தீரனை/ சீதா/-ராமனாக/ அவதரித்தவனை/ அனைத்து/ உலக/ ஆதாரமானவனை/

நிஜ/ ப4க்த/ மந்தா3ருனி/ நுதியிம்பு/-அய்ய/ (வ)
உண்மையான/ தொண்டர்களின்/ மந்தாரத்தினை/ போற்றுவாய்/ அய்யா/


சரணம் 2
4ன்யுனி/ வேல்புலலோ/ மூர்த4ன்யுனி/ ப்ரதி/ லேனி/
மங்களமானவனை/ கடவுளரில்/ தலைசிறந்தோனை/ ஈடு/ அற்ற/

லாவண்யுனி/ பரம/ காருண்யுனி/ நுதியிம்பு/-அய்ய/ (வ)
அழகனை/ மிக்கு/ கருணையுடையோனை/ போற்றுவாய்/ அய்யா/


சரணம் 3
ஏ/ ஜப/ தபமுலகு/ ராடு3/ யாஜன-ஆது3லகு/ ராடு3/
எந்த/ ஜப/ தவங்களுக்கும்/ வாரான்/ வேள்விகளுக்கும்/ வாரான்/

ராஜிகா3/ நுதியிஞ்சு/ த்யாக3ராஜ/ நுதுனி/ ஈ/ வேள/ (வ)
முழு மனதுடன்/ போற்றுவாய்/ தியாகராசன்/ போற்றுவோனை/ இந்த/ வேளை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - குச்சித - குத்ஸித : 'குத்ஸித' என்ற சம்ஸ்கிருத சொல்லின், தெலுங்கு வடிவம், 'குச்சித' ஆகும்.

Top

மேற்கோள்கள்
2 - சிச்சு ரீதி - நெருப்பு போன்று - பாகவத புராணத்தினில் (9-வது புத்தகம், 19-வது அத்தியாயம்), யயாதி, தனது மனைவியிடம், காமத்தின் தன்மையினைப் பற்றி கூறுவது -

"காமம், அதனை அனுபவிப்பதனால், தணிவதில்லை;
நெருப்பினில் இட்ட நெய்யென மென்மேலும் கொழுந்துவிட்டெரியும்."(14)

3 - மந்தா3ருனி - மந்தாரம் - விரும்பியதையளிக்கும் கற்பதரு.

Top

விளக்கம்
இந்தப் பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' எனும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும். இதனில், கடலரசன், பிரகலாதனுக்கு, இறைவன் நேரில் தோன்றுவதற்கு, அவனைத் துதிக்க வேண்டுகின்றான்.

விடயங்கள் - புலன் நுகர்ச்சிப் பொருட்கள்

Top


Updated on 19 Jun 2010

No comments: