Wednesday, June 16, 2010

தியாகராஜ கிருதி - ராம நீவாது3கொந்து3வோ - ராகம் கல்யாணி - Rama Nivadukonduvo - Raga Kalyani

பல்லவி
ராம நீவாது3கொந்து3வோ கொனவோ
1தொலி மா நோமு 22லமெடுலதோ3

அனுபல்லவி
நா மனஸுன நீயந்து3 ப்ரேம மீரக3னு
நம்மினாமனுசு சால 3திரிகெ33மு கானி
நிஜமனுசு (ராம)

சரணம்
சரணம் 1
4வ ஸாக3ரமுன கலுகு3 பா34லண்டக-
யுண்டு3டகவிவேக மானவுல செலிமி-
யப்33குண்டு3டகு அவனியந்து3 கலுகு3
வேதா33ம மர்மமு தெலிஸி நவ நீரத3 நிப4 தே3
நம்மினதி3 சாலுனனுசு (ராம)


சரணம் 2
பத்3து3 தப்பக3னுயுண்டு34க்துலகு நித்ய ஸுக2மு
கத்33னுசு பலிகின பெத்33ல நம்மி
முத்3து3 காரு நீ ரூபமுனு 4மோத3முதோ த்4யானிஞ்சுசுனே
ப்ரொத்3து3 போ-க3டி3னாமு கானி பூர்ண ஸ1ஸி1 வத3ன ஸ்ரீ (ராம)


சரணம் 3
நீ ஜபமே தி3க்கு கானி நீரஜ லோசன மாகு
வாஜி கரி த4னமுலு வரமு காது3ரா
5ஜாஜி ஸும த4ரண 6பூ4ஜா மனோஹர ஸ்ரீ த்யாக3-
ராஜ நுத ப3ஹு ரவி தேஜ மா தப்புலெஞ்சக (ராம)


பொருள் - சுருக்கம்
  • இராமா!
  • கார்முகில் நிகருடலோனே!
  • முழு மதி வதனத்தோனே!
  • கமலக்கண்ணா! மல்லிகை மலரணியும், புவிமகள் மனம் கவர்வோனே! தியாகராசன் போற்றும், வெகு பரிதிகள் ஒளியோனே!

    • நீ ஆதரிப்பாயோ, மாட்டாயோ?
    • முந்தைய எமது நோன்பின் பயனெத்தகையதோ?

      • எனது மனத்தினில், உன்னிடம் காதல் மீர நம்பினோமென, மிக்குத் திரிந்தோம்; ஆயினும்,

    • (அஃது) உண்மையென, நீ ஆதரிப்பாயோ, மாட்டாயோ?

      • பிறவிக் கடலினில் உண்டாகும் தொல்லைகள் தீண்டாது இருப்பதற்கும்,
      • விவேகமற்ற மானவர்களின் நட்பு கூடாதிருப்பதற்கும்,

    • புவியினில் உள்ள வேத, ஆகமங்களின் மருமம் அறிந்து, நம்பினது போதுமென, நீ ஆதரிப்பாயோ, மாட்டாயோ?

      • விரதம் தவறாதிருக்கும் தொண்டர்களுக்கு, நிலையான சுகம் உண்டெனப் பகர்ந்த பெரியோரை நம்பி,
      • எழில் வடியும் உனதுருவத்தினைக் களிப்புடன் தியானித்துக்கொண்டே, பொழுது கழித்தோமேயன்றி,

    • நீ ஆதரிப்பாயோ, மாட்டாயோ?

      • உனது ஜெபமே திக்கு; அன்றி, எமக்கு குதிரை, யானை, செல்வங்கள் வேண்டுதல் இல்லையய்யா;

    • எமது தவறுகளை எண்ணாது, நீ ஆதரிப்பாயோ, மாட்டாயோ?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ராம/ நீவு/-ஆது3கொந்து3வோ/ கொனவோ/
    இராமா/ நீ/ ஆதரிப்பாயோ/ மாட்டாயோ/

    தொலி/ மா/ நோமு/ ப2லமு/-எடுலதோ3/
    முந்தைய/ எமது/ நோன்பின்/ பயன்/ எத்தகையதோ/


    அனுபல்லவி
    நா/ மனஸுன/ நீயந்து3/ ப்ரேம/ மீரக3னு/
    எனது/ மனத்தினில்/ உன்னிடம்/ காதல்/ மீர/

    நம்மினாமு/-அனுசு/ சால/ திரிகெ33மு/ கானி/
    நம்பினோம்/ என/ மிக்கு/ திரிந்தோம்/ ஆயினும்/

    நிஜமு/-அனுசு/ (ராம)
    (அஃது) உண்மை/ யென/ இராமா நீ...


    சரணம்
    சரணம் 1
    4வ/ ஸாக3ரமுன/ கலுகு3/ பா34லு/-அண்டக/
    பிறவி/ கடலினில்/ உண்டாகும்/ தொல்லைகள்/ தீண்டாது/

    உண்டு3டகு/-அவிவேக/ மானவுல/ செலிமி/
    இருப்பதற்கும்/ விவேகமற்ற/ மானவர்களின்/ நட்பு/

    அப்33க/-உண்டு3டகு/ அவனியந்து3/ கலுகு3/
    கூடாது/ இருப்பதற்கும்/ புவியினில்/ உள்ள/

    வேத3/-ஆக3ம/ மர்மமு/ தெலிஸி/ நவ/ நீரத3/ நிப4/ தே3ஹ/
    வேத/ ஆகமங்களின்/ மருமம்/ அறிந்து/ புதிய/ கார்முகில்/ நிகர்/ உடலோனே/

    நம்மினதி3/ சாலுனு/-அனுசு/ (ராம)
    நம்பினது/ போதும்/ என/ நீ ஆதரிப்பாயோ...


    சரணம் 2
    பத்3து3/ தப்பக3னு/-உண்டு3/ ப4க்துலகு/ நித்ய/ ஸுக2மு/
    விரதம்/ தவறாது/ இருக்கும்/ தொண்டர்களுக்கு/ நிலையான/ சுகம்/

    கத்3து3/-அனுசு/ பலிகின/ பெத்33ல/ நம்மி/
    உண்டு/ என/ பகர்ந்த/ பெரியோரை/ நம்பி/

    முத்3து3/ காரு/ நீ/ ரூபமுனு/ மோத3முதோ/ த்4யானிஞ்சுசுனே/
    எழில்/ வடியும்/ உனது/ உருவத்தினை/ களிப்புடன்/ தியானித்துக்கொண்டே/

    ப்ரொத்3து3/ போ-க3டி3னாமு/ கானி/ பூர்ண/ ஸ1ஸி1/ வத3ன/ ஸ்ரீ/ (ராம)
    பொழுது/ கழித்தோமே/ யன்றி/ முழு/ மதி/ வதனத்தோனே/ ஸ்ரீ/ ராம நீ...


    சரணம் 3
    நீ/ ஜபமே/ தி3க்கு/ கானி/ நீரஜ/ லோசன/ மாகு/
    உனது/ ஜெபமே/ திக்கு/ அன்றி/ கமல/ கண்ணா/ எமக்கு/

    வாஜி/ கரி/ த4னமுலு/ வரமு/ காது3ரா/
    குதிரை/ யானை/ செல்வங்கள்/ வேண்டுதல்/ இல்லையய்யா/

    ஜாஜி/ ஸும/ த4ரண/ பூ4ஜா/ மனோஹர/ ஸ்ரீ த்யாக3ராஜ/
    மல்லிகை/ மலர்/ அணியும்/ புவிமகள்/ மனம் கவர்வோனே/ ஸ்ரீ தியாகராசன்/

    நுத/ ப3ஹு/ ரவி/ தேஜ/ மா/ தப்புலு/-எஞ்சக/ (ராம)
    போற்றும்/ வெகு/ பரிதிகள்/ ஒளியோனே/ எமது/ தவறுகளை/ எண்ணாது/ இராமா நீ...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - தொலி மா - தொலி நா : அனுபல்லவியிலும், சரணங்களிலும் கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கருத்திற்கொண்டு 'தொலி மா' ஏற்கப்பட்டது.

    2 - எடுலதோ3 - எடுலதி3யோ.
    3 - திரிகெ33மு - திரிகே3மு.
    4 - மோத3முதோ - மோத3முன.
    5 - ஸும த4ரண - ஸும த4ர.
    6 - பூ4ஜா மனோஹர - பூஜா மனோஹர : 'பூ4ஜா மனோஹர' என்பதே சரியான சொல்லாகும்.

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்
    5 - ஜாஜி ஸும த4ரண - மல்லிகை மலரணியும் - இது இராமனையோ, சீதையினையோ குறிப்பதாகக் கொள்ளலாம்.

    புவிமகள் - சீதை

    Top


    Updated on 16 Jun 2010
  • No comments: