வரத3 ராஜ நினு கோரி வச்சிதி ம்ரொக்கேரா
அனுபல்லவி
ஸுருலு முனுலு பூ4-ஸுருலு சுட்டி சுட்டி ஸேவிஞ்சே (வ)
சரணம்
1வர கி3ரி வைகுண்ட2மட வர்ணிம்ப தரமு காத3ட
நிர்ஜருலனு 2தாரகலலோ சந்த்3ருடை3 மெரயுது3வட
வர த்யாக3ராஜ நுத 3க3ருட3 ஸேவ 4ஜூட3 (வ)
பொருள் - சுருக்கம்
வானோர், முனிவர்கள், அந்தணர்கள் திரும்பத்திரும்ப, வலம் வந்து, சேவிக்கும் வரதராஜா! தியாகராசனால் போற்றப் பெற்ற மேலோனே!
- உன்னைக் கோரி வந்தேன்; வணங்கினேனய்யா!
- உயர் (அத்தி) கிரி வைகுண்டமாம்;
- வருணிக்க இயலாதாம்;
- மூப்பற்றோரெனும் விண்மீன்களுள் மதியாகத் திகழ்கின்றாயாம்;
- கருட சேவையினைக் காண உன்னைக் கோரி வந்தேன்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வரத3 ராஜ/ நினு/ கோரி/ வச்சிதி/ ம்ரொக்கேரா/
வரதராஜா/ உன்னை/ கோரி/ வந்தேன்/ வணங்கினேனய்யா/
அனுபல்லவி
ஸுருலு/ முனுலு/ பூ4-ஸுருலு/ சுட்டி சுட்டி/ ஸேவிஞ்சே/ (வ)
வானோர்/ முனிவர்கள்/ அந்தணர்கள்/ திரும்பத்திரும்ப, வலம் வந்து/ சேவிக்கும்/ வரதராஜா...
சரணம்
வர/ கி3ரி/ வைகுண்ட2மு-அட/ வர்ணிம்ப/ தரமு காது3-அட/
உயர்/ (அத்தி) கிரி/ வைகுண்டமாம்/ வருணிக்க/ இயலாதாம்/
நிர்ஜருலு/-அனு/ தாரகலலோ/ சந்த்3ருடை3/ மெரயுது3வு-அட/
மூப்பற்றோர்/ எனும்/ விண்மீன்களுள்/ மதியாக/ திகழ்கின்றாயாம்/
வர/ த்யாக3ராஜ/ நுத/ க3ருட3/ ஸேவ/ ஜூட3/ (வ)
மேலான/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ கருட/ சேவையினை/ காண/ வரதராஜா..
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - தாரகலலோ - தாரகமுலலோ
4 - ஜூட3 - ஜூசி : 'ஜூட3' சரியான சொல்லாகும்.
Top
மேற்கோள்கள்
1 - வர கி3ரி - வரதராஜ பெருமாள் கோயில், 'அத்திகிரி' எனப்படும் யானை உருவிலான ஓர் குன்றின் மீது அமைந்துள்ளது. இறைவனுக்கு 'தேவராஜ பெருமாள்' என்றும் பெயருண்டு. முதலில், வரதராஜன், அத்தி மரத்தினால் செய்யப்பட்டதாகவும், அதனால் 'அத்தியூரான்' என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுவர். இந்த தலத்தில், கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்ததனால், 'வரதராஜன்' என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர். வரதராஜ பெருமாள் கோயில்.
அத்திமரத்தினால் செய்யப்பட்ட 'அத்திகிரி வரதர்' 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்களுக்கு பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுவதாகவும், கடைசியாக 1979-ல் அங்ஙனம் நடந்ததாகவும், அடுத்து 2019-ல் நடக்கும் என்று கூறப்படுகின்றது. அத்திகிரி வரதர்.
3 - க3ருட3 ஸேவ - கருடசேவையினையின் போது இறைவன் சிறிது நேரம் மறைந்துபோன சம்பவம் குறித்து இங்கு காணவும்.
Top
விளக்கம்
வரதராஜன் - காஞ்சீபுரம்
அத்திகிரி - கோவில் அமைந்துள்ள குன்றின் பெயர்
மூப்பற்றோர் - வானோர்
Top
Updated on 09 Jun 2010
No comments:
Post a Comment