வாஸுதே3வயனி வெட3லினயீ
தௌ3வாரிகுனி கனரே
அனுபல்லவி
வாஸவாதி3 ஸுர பூஜிதுடை3
வாரிஜ நயனுனி மதி3னி தலசுசுனு (வா)
சரணம்
சரணம் 1
நீரு காவி தோ3வதுலனு கட்டி
நிடலமுனனு ஸ்ரீ சூர்ணமு பெட்டி
ஸாரி வெட3லியீ ஸப4லோ ஜுட்டி
ஸாரெகு ப3ங்க3ரு கோலனு பட்டி (வா)
சரணம் 2
1மாடி மாடிகினி மீஸமு து3வ்வி
மன்மத2 ரூபுடு3 தானனி க்ரொவ்வி
தா3டி தா3டி படு3சுனு
தானிவ்வித4ம்பு3ன பலுகுசு பக பக நவ்வி (வா)
சரணம் 3
பா3கு3 மீர நடனமு ஸேயுசுனு
பதித பாவனுனி தா வேடு3சுனு
ராக3 தாள க3துலனு பாடு3சுனு
த்யாக3ராஜ ஸன்னுதுனி பொக3டு3சுனு (வா)
பொருள் - சுருக்கம்
- 'வாசுதேவா' யென்று புறப்பட்ட இந்த வாயிற் காப்போனைக் காணீரே!
- வாசவன் முதலான வானோரால் தொழப் பெற்றோனாகிய, கமலக்கண்ணனை உள்ளத்தினில் நினைத்துக்கொண்டு,
- 'வாசுதேவா' யென்று புறப்பட்ட இந்த வாயிற் காப்போனைக் காணீரே!
- நீர்க்காவி வேட்டி கட்டி,
- நெற்றியினில் திருமண்ணிட்டு,
- திரும்பத் திரும்ப, இந்த அவையினிற் சுற்றி,
- எவ்வமயமும், பொற் கோலினைப் பற்றி,
- நீர்க்காவி வேட்டி கட்டி,
- 'வாசுதேவா' யென்று புறப்பட்ட இந்த வாயிற் காப்போனைக் காணீரே!
- அடிக்கடி, மீசையினை முறுக்கி,
- மன்மத உருவத்தோன் தானெனச் செருக்கி,
- தாண்டித் தாண்டிக் குதித்து,
- தானிவ்விதமெனப் பகர்ந்து, வாய்விட்டுச் சிரித்து,
- அடிக்கடி, மீசையினை முறுக்கி,
- 'வாசுதேவா' யென்று புறப்பட்ட இந்த வாயிற் காப்போனைக் காணீரே!
- ஒயில் மீர நடனமாடிக்கொண்டு,
- வீழ்ந்தோரை மீட்போனை, தான் வேண்டிக்கொண்டு,
- இராக, தாள, கதிகளில் பாடிக்கொண்டு,
- தியாகராசன் நன்கு போற்றுவோனைப் புகழ்ந்துகொண்டு,
- ஒயில் மீர நடனமாடிக்கொண்டு,
- 'வாசுதேவா' யென்று புறப்பட்ட இந்த வாயிற் காப்போனைக் காணீரே!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வாஸுதே3வ/-அனி/ வெட3லின/-ஈ/
'வாசுதேவா'/ யென்று/ புறப்பட்ட/ இந்த/
தௌ3வாரிகுனி/ கனரே/
வாயிற் காப்போனை/ காணீரே/
அனுபல்லவி
வாஸவ/-ஆதி3/ ஸுர/ பூஜிதுடை3/
வாசவன்/ முதலான/ வானோரால்/ தொழப் பெற்றோனாகிய/
வாரிஜ/ நயனுனி/ மதி3னி/ தலசுசுனு/ (வா)
கமல/ கண்ணனை/ உள்ளத்தினில்/ நினைத்துக்கொண்டு/ 'வாசுதேவா'...
சரணம்
சரணம் 1
நீரு/ காவி/ தோ3வதுலனு/ கட்டி/
நீர்/ காவி/ வேட்டி/ கட்டி/
நிடலமுனனு/ ஸ்ரீ சூர்ணமு/ பெட்டி/
நெற்றியினில்/ திருமண்/ இட்டு/
ஸாரி வெட3லி/-ஈ/ ஸப4லோ/ ஜுட்டி/
திரும்பத் திரும்ப/ இந்த/ அவையினிற்/ சுற்றி/
ஸாரெகு/ ப3ங்க3ரு/ கோலனு/ பட்டி/ (வா)
எவ்வமயமும்/ பொற்/ கோலினை/ பற்றி/ 'வாசுதேவா'...
சரணம் 2
மாடி மாடிகினி/ மீஸமு/ து3வ்வி/
அடிக்கடி/ மீசையினை/ முறுக்கி/
மன்மத2/ ரூபுடு3/ தானு/-அனி/ க்ரொவ்வி/
மன்மத/ உருவத்தோன்/ தான்/ என/ செருக்கி/
தா3டி/ தா3டி/ படு3சுனு/
தாண்டி/ தாண்டி/ குதித்து/
தானு/-இவ்வித4ம்பு3ன/ பலுகுசு/ பக பக/ நவ்வி/ (வா)
தான்/ இவ்விதமென/ பகர்ந்து/ வாய்விட்டு/ சிரித்து/ 'வாசுதேவா'...
சரணம் 3
பா3கு3/ மீர/ நடனமு/ ஸேயுசுனு/
ஒயில்/ மீர/ நடனம்/ ஆடிக்கொண்டு/
பதித/ பாவனுனி/ தா/ வேடு3சுனு/
வீழ்ந்தோரை/ மீட்போனை/ தான்/ வேண்டிக்கொண்டு/
ராக3/ தாள/ க3துலனு/ பாடு3சுனு/
இராக/ தாள/ கதிகளில்/ பாடிக்கொண்டு/
த்யாக3ராஜ/ ஸன்னுதுனி/ பொக3டு3சுனு/ (வா)
தியாகராசன்/ நன்கு போற்றுவோனை/ புகழ்ந்துகொண்டு/ 'வாசுதேவா'...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மாடி மாடிகினி - மாடி மாடிகி.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இந்தப் பாடல் பிரகலாத பக்தி விஜயம் என்ற நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும். பிரகலாதனை, அவனுடைய தந்தையின் ஆட்கள், நாகபாசத்தினால் பிணைத்துக் கடலில் எறிந்தனர். அவனை, கடலரசன் காப்பாற்றி, நாகபாசங்களினின்று விடுவித்து, தனது நகரத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரும் நோக்கத்துடன், நகரத்தினை அலங்கரிக்குமாறு உத்தரவிடுகின்றான். அந்த ஆணையின்படி, வாயிற்காப்போன், அலங்காரங்கள் செய்துவிட்டு, அங்கு ஓர் நாடகம் அரங்கேறிக் கொண்டிருப்பதனைக் கண்டு, அதன் விவரங்கள் அறியவேண்டி, அவைக்குள் நுழைந்து, நாடக இயக்குனரிடம் இது குறித்து விசாரிக்க வரும் காட்சியினை தியாகராஜர் இந்தப் பாடலில் சித்தரிக்கின்றார்.
வாசவன் - இந்திரன்
திருமண் - வைணவர்கள் இடும் நெற்றிச் சின்னம்
வீழ்ந்தோரை மீட்போன் - அரி
தியாகராசன் நன்கு போற்றுவோன் - அரி
Top
Updated on 21 Jun 2010
2 comments:
அன்புள்ள கோவிந்தன் அவர்களே,
அனுபல்லவியில்
“பூஜிதுடை3 என்பதற்கு தொழப் பெற்றோனாகிய என்று பொருள் கொடுத்துள்ளீர். பூஜிதுடை என்பதற்கு தொழப் பெற்றோனாகி என்று தானே பொருள்.
தொழப் பெற்றோனாகிய என்பதற்கு பூஜிதுடைன- பூஜிதுடௌ – பூஜிதுடகு- இம்மூன்றில் ஏதாவது ஒன்று தானே சரி, இது வேறுபாடுகளில் - (Pathanthara) உள்ளதா?
வணக்கம்
கோவிந்தஸ்வாமி
திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,
நீங்கள் கூறுவது உண்மையே. இங்கு பூஜிதுடைன அல்லது பூஜிதுடௌ அல்லது பூஜிதுடகு என்றுதான் இருக்கவேண்டும். ஆனால் அத்தகைய வேறுபாடு காணப்படவில்லை, நான் நோக்கிய புத்தகங்களில். எனவேதான் இந்த பொருள் கொடுத்தேன்.
வணக்கம்
வே கோவிந்தன்.
Post a Comment