Monday, June 21, 2010

தியாகராஜ கிருதி - ஸி1வே பாஹி மாம் - ராகம் கல்யாணி - Sive Pahi Mam - Raga Kalyani

பல்லவி
1ஸி1வே பாஹி மாம் அம்பி3கே
ஸ்1ரித ப2ல தா3யகி

அனுபல்லவி
2கவேரஜோத்தர தீர வாஸினி
காத்யாயனி த4ர்ம ஸம்வர்த4னி (ஸி1)

சரணம்
சரணம் 1
ஸ்வபா4வமௌ நீ ப்ரபா4வமு
மஹானுபா4வுராலைன பா4ரதிகி பொக33
பா4ரமையுண்ட3 பா4வஜாராதி
பா4ம நேனெந்த பா4க்3ய தா3யகி (ஸி1)


சரணம் 2
3கலார்த2மிதி31ஸி1 4கலா த4ரி 5உப-
வலாரி
மாயா விலாஸினி
ஸகலாக3ம நுதே 64ளாரியன ஸு14
2லாலொஸகு3 பரம லாலனம்முன (ஸி1)


சரணம் 3
சராசர-மயீ கராரவிந்த3முன
7ராம சிலுகனு பி3ரான பூனி
பராகுக3 ஜூட3 ராது3 ஸ்ரீ ரகு4-
வராப்துட3கு3 8த்யாக3ராஜ வினுதே (ஸி1)


பொருள் - சுருக்கம்
 • சிவையை! அம்பிகையே! நம்பினோருக்குப் பயனருள்பவளே!
 • காவேரியின் வடகரையில் உறைபவளே! காத்தியாயினியே! அறம் வளர்த்த நாயகியே!
 • காமனின் எதிரியின் இல்லாளே! பேறருள்பவளே!
 • மதிப் பிறையணிபவளே! உபேந்திரனின் மாயை வடிவே! அனைத்து ஆகமங்களாலும் போற்றப் பெற்றவளே!
 • சராசர மயமானவளே! இரகுவரனுக்கு இனியோனாகிய, தியாகராசனால் போற்றப் பெற்றவளே!

 • என்னைக் காப்பாய்.

  • இயற்கையான உனது பெருமையினை, மேன்மை பொருந்தியவளாகிய, பாரதிக்கும் புகழக் கடினமாயிருக்க, நானெம்மாத்திரம்?
  • இமைப்பொழுதாகிலும், 'இஃது பலே' யெனும் வகையில் நற்பயனருள்வாய், மிக்கு கனிவுடன்.
  • கர கமலத்தினில் பசுங்கிளியினை யேந்தி(யுள்ள நீ), அசட்டையாக நோக்கலாகாது.

 • விரைவிலென்னைக் காப்பாய்.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸி1வே/ பாஹி/ மாம்/ அம்பி3கே/
சிவையை/ காப்பாய்/ என்னை/ அம்பிகையே/

ஸ்1ரித/ ப2ல/ தா3யகி/
நம்பினோருக்கு/ பயன்/ அருள்பவளே/


அனுபல்லவி
கவேரஜ/-உத்தர/ தீர/ வாஸினி/
காவேரியின்/ வட/ கரையில்/ உறைபவளே/

காத்யாயனி/ த4ர்ம ஸம்வர்த4னி/ (ஸி1)
காத்தியாயினியே/ அறம் வளர்த்த நாயகியே/


சரணம்
சரணம் 1
ஸ்வபா4வமௌ/ நீ/ ப்ரபா4வமு/
இயற்கையான/ உனது/ பெருமையினை/

மஹானுபா4வுராலு/-ஐன/ பா4ரதிகி/ பொக33/
மேன்மை பொருந்தியவள்/ ஆகிய/ பாரதிக்கும்/ புகழ/

பா4ரமை/-உண்ட3/ பா4வஜ/-அராதி/
கடினமாக/ இருக்க/ காமனின்/ எதிரியின்/

பா4ம/ நேனு/-எந்த/ பா4க்3ய/ தா3யகி/ (ஸி1)
இல்லாளே/ நான்/ எம்மாத்திரம்/ பேறு/ அருள்பவளே/


சரணம் 2
கலா/-அர்த2மு/-இதி3/ ஸ1ஸி1/ கலா/ த4ரி/
இமைப்பொழுது/ ஆகிலும்/ இஃது/ மதி/ பிறை/ அணிபவளே/

உப/-வல/-அரி/ மாயா/ விலாஸினி/
உப/-வலனின்/ எதிரி (இந்திரனின்)/ மாயை/ வடிவே/

ஸகல/-ஆக3ம/ நுதே/ ப4ளாரி/-அன/
அனைத்து/ ஆகமங்களாலும்/ போற்றப் பெற்றவளே/ 'பலே'/ யெனும் (வகையில்)/

ஸு142லாலு/-ஒஸகு3/ பரம/ லாலனம்முன/ (ஸி1)
நற்பயன்/ அருள்வாய்/ மிக்கு/ கனிவுடன்/


சரணம் 3
சர/-அசர/-மயீ/ கர/-அரவிந்த3முன/
சர/ அசர/ மயமானவளே/ கர/ கமலத்தினில்/

ராம சிலுகனு/ பி3ரான/ பூனி/
பசுங்கிளியினை/ விரைவில்/ ஏந்தி(யுள்ள நீ)/

பராகுக3/ ஜூட3 ராது3/ ஸ்ரீ ரகு4-வர-/
அசட்டையாக/ நோக்கலாகாது/ ஸ்ரீ ரகுவரனுக்கு/

ஆப்துட3கு3/ த்யாக3ராஜ/ வினுதே/ (ஸி1)
இனியோனாகிய/ தியாகராசனால்/ போற்றப் பெற்றவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
6 - 4ளாரி - எல்லா புத்தகங்களிலும், 'ப4லாரி' என்றே கொடுக்கப் பட்டுள்ளது. சரியான தெலுங்கு சொல், 'ப4ளா', 'ப4ளார', 'ப4ளாரி' ஆகும்.

8 - த்யாக3ராஜ - ஸ்ரீ த்யாக3ராஜ.

Top

மேற்கோள்கள்
1 - ஸி1வே - சிவையே. சக்தி வழிபாட்டினில், அம்மைக்கு 'சிவா' என்றோர் பெயர்.

2 - கவேரஜ - 'கவேர' மன்னனின் புதல்வி - காவேரி (காவிரி) - காவேரியின் தோற்றம் பற்றி அறியவும்.

3 - கலார்த2மு - 'கலா' என்ற சமஸ்கிருத சொல், ஒரு நாளின் 1/900 -வது பகுதி (1.6 நிமிடம்) அல்லது 1/1800-வது பகுதி (0.8 நிமிடம்) அல்லது 2.45 நிமிடத்தினைக் குறிக்கும்.

Top

4 - கலா த4ரி - பிறை அணிபவள் - சக்தி வழிபாட்டின்படி, அம்மை, சிவன் போன்று, பிறை அணிவதாகக் கூறப்படும்.

5 - உப-வலாரி - 'விருத்திரன்' என்ற அரக்கனின் உடன்பிறந்தோனாகிய, 'வல'னை, இந்திரன் கொன்றான். அதனால், இந்திரனுக்கு 'வலாரி' (வலனின் எதிரி) என்று பெயர். எனவே, 'உப-வலாரி' - 'உப-இந்திரன்' என்பது, வாமனராக (இந்திரனின் தம்பி) அவதரித்த, விஷ்ணுவினைக் குறிக்கும். 'லலிதா ஸஹஸ்ரநாம'த்தினில் 'விஷ்ணு மாயா விலாஸினி' (339-340) என்று அம்மைக்கோர் பெயர். ('விலாஸினி' என்பதனை தனிப் பெயராகவும் கொள்ளப்படும்.)

Top

விளக்கம்
3 - கலார்த2மு - இமைப் பொழுதாகிலும் - இச்சொல்லினை, 'ஸு142லமொஸகு3' (நற்பயனருள்வாய்) என்பதுடனோ அல்லது 'ப4ளாரியன' (பலேயென) என்பதுடனோ சேர்க்கலாம். 'இமைப் பொழுதாகிலும் நற்பயனருள்வாய்' என்று கூறுவது தவறென்று நான் கருதுகின்றேன். எனவே, 'ப4ளாரியன' என்பதுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்பட்டது.

7 - ராம சிலுக - பசுங்கிளி - சில புத்தகங்களில் இதற்கு, 'ராமா ராமா எனும் கிளி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'ராம சிலுக' என்பது தெலுங்கில் 'பச்சை நிறக் கிளி'யினைக் குறிக்கும்.

3-வது சரணத்தினில், தான், 'இரகுவரனுக்கு இனியவன்' என்று தியாகராஜர் கூறிக்கொள்கின்றார். எனவே, 'ராம சிலுக' என்ற சொல்லை, அவர் சிலேடையாக பயன்படுத்தியிருக்கலாம். எனவே, இதற்கு, 'ராமா ராமா' எனும் கிளியென்றும் பொருள் கொள்ளலாம்

Top

அறம் வளர்த்த நாயகி - திருவையாற்றில் பார்வதியின் பெயர்
பாரதி - நாமகள்
காமனின் எதிரி - சிவன்
வலனின் எதிரி - வலன் என்னும் அரக்கனின் எதிரி - இந்திரன்
உபேந்திரன் - விஷ்ணு - வாமனனாக.
சராசர - அசைவன மற்றும் அசையாதவை
Top


Updated on 22 Jun 2010

No comments: