நின்னனவலஸினதே3மி ராம
நன்னனவலெனு கா3க
அனுபல்லவி
கன்ன தண்ட்3ரி நீ கன்ன
வேல்புலெவருன்னாருரா ஆபன்ன ரக்ஷக நே (நி)
சரணம்
சரணம் 1
கன ஸைரிஞ்சனி து3ர்ஜனுல பா4ஷண லேக
மனஸுன நெனருன நினு ஜூசினானா
அனு தி3னமுனனு நே நினு கன ஸஜ்ஜன ஸேவ
வினயமுனனு நிஜமுக3 ஜேஸினானா (நி)
சரணம் 2
வினவய்ய மனவினி 1ஸனகாதி3 வினுத நே
த4னமுனு கொனின பா4மனு 2ப்ரேம மீர
எனயக மனஸனு வனஜமுனனதி
வேக3ன பாத3முன பூஜனொனரிஞ்சினானா (நி)
சரணம் 3
கலி மானவுலு ஸேயு சல கார்யமுலனு
நேனிலலோனு தெலியக வலசிதி கானி
கலலோனு கலிகி3ன கலுமுல வலெனெஞ்சி
வலசக3 ப3லு 3தபமுலு ஜேஸினானா (நி)
சரணம் 4
ஜலஜாப்த குல வர திலக வீனுல நீ
கத2லு 4வின்னா ப3லு பாபமுலு போனு கானி
கலுமுல பலுகுல 5செலுலு வஸ்1யுலு கானி
தொலி ஜன்மமுல பூஜா ப2லமேமோ தெலிய (நி)
சரணம் 5
ஸ1ர சாப த4ர யோகி3 வர நுத 6பரிபூர்ண
நர ரூப நிரதமு வர த்யாக3ராஜ
பரிபால ஸுர பூ4மி ஸுருலனு ஸ்தி2ரமுக3
கருணிஞ்சு பி3ருது3 நீ கரமுன மெரய (நி)
பொருள் - சுருக்கம்
- நான் உன்னைச் சொல்வதேன்? என்னைச் சொல்லவேண்டுமேயன்றி.
- காணச் சகியாத, தீய மக்களின் பேச்சு வார்த்தை இன்றி, மனதினில், அன்புடன் உன்னைக் கண்டேனா?
- அனுதினமும், நானுன்னைக் காண, நன்மக்களின் சேவை, பணிவுடன், உண்மையாகச் செய்தேனா?
- நான் செல்வத்தினையும், கொண்ட மனைவியையும், வேட்கை மிக துய்க்காது, மனமெனும் கமலத்தினில், மிக்கு ஆர்வத்துடன், உனது திருவடி வழிபாடு செய்தேனா?
- கலி மானவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளை, நான் இங்கு, அறியாது, விழைந்தேனே யன்றி, கனவினில் உண்டாகும் செல்வம் போன்றெண்ணி, (அவற்றினை) விரும்பாது, சிறந்த தவங்களியற்றினேனா?
- காணச் சகியாத, தீய மக்களின் பேச்சு வார்த்தை இன்றி, மனதினில், அன்புடன் உன்னைக் கண்டேனா?
- கேளய்யா வேண்டுகோளினை.
- உன்னைத் தவிர தெய்வங்கள் எவருளரய்யா?
- செவிகளிலுனது கதைகளைக் கேட்டால், கொடிய பாவங்கள் போகும்; அன்றி,
- திருமகளும், நாமகளும் (எனது) வயப்படாதது முற்பிறவிகளின் வழிபாட்டுப் பயனோ என்னவோ, அறியேன்;
- வானோரையும், அந்தணர்களையும் உறுதியாக கருணிக்கும் விருது, உனது கரத்தினில் திகழ,
- உன்னைத் தவிர தெய்வங்கள் எவருளரய்யா?
- நான் உன்னைச் சொல்வதேன்? என்னைச் சொல்லவேண்டுமேயன்றி.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னு/-அனவலஸினதி3/-ஏமி/ ராம/
உன்னை/ சொல்வது/ ஏன்/ இராமா/
நன்னு/-அனவலெனு/ கா3க/
என்னை/ சொல்லவேண்டுமே/ அன்றி/
அனுபல்லவி
கன்ன/ தண்ட்3ரி/ நீ/ கன்ன/ வேல்புலு/
ஈன்ற/ தந்தையே/ உன்னை/ தவிர/ தெய்வங்கள்/
எவரு/-உன்னாருரா/ ஆபன்ன/ ரக்ஷக/ நே/ (நி)
எவர்/ உளரய்யா/ இடையூறுகளில்/ காப்போனே/ நான்/ உன்னை...
சரணம்
சரணம் 1
கன/ ஸைரிஞ்சனி/ து3ர்-ஜனுல/ பா4ஷண/ லேக/
காண/ சகியாத/ தீய மக்களின்/ பேச்சு வார்த்தை/ இன்றி/
மனஸுன/ நெனருன/ நினு/ ஜூசினானா/
மனதினில்/ அன்புடன்/ உன்னை/ கண்டேனா/
அனு/ தி3னமுனனு/ நே/ நினு/ கன/ ஸஜ்ஜன/ ஸேவ/
அனு/ தினமும்/ நான்/ உன்னை/ காண/ நன்மக்களின்/ சேவை/
வினயமுனனு/ நிஜமுக3/ ஜேஸினானா/ (நி)
பணிவுடன்/ உண்மையாக/ செய்தேனா/
சரணம் 2
வினவய்ய/ மனவினி/ ஸனக-ஆதி3/ வினுத/ நே/
கேளய்யா/ வேண்டுகோளினை/ சனகாதியர்/ போற்றுவோனே/ நான்/
த4னமுனு/ கொனின/ பா4மனு/ ப்ரேம/ மீர/
செல்வத்தினையும்/ கொண்ட/ மனைவியையும்/ வேட்கை/ மிக/
எனயக/ மனஸு/-அனு/ வனஜமுனனு/-அதி/
துய்க்காது/ மனம்/ எனும்/ கமலத்தினில்/ மிக்கு/
வேக3ன/ பாத3முன/ பூஜனு/-ஒனரிஞ்சினானா/ (நி)
ஆர்வத்துடன்/ (உனது) திருவடி/ வழிபாடு/ செய்தேனா/
சரணம் 3
கலி/ மானவுலு/ ஸேயு/ சல/ கார்யமுலனு/
கலி/ மானவர்கள்/ செய்யும்/ ஏமாற்று/ வேலைகளை/
நேனு/-இலலோனு/ தெலியக/ வலசிதி/ கானி/
நான்/ இங்கு/ அறியாது/ விழைந்தேனே/ யன்றி/
கலலோனு/ கலிகி3ன/ கலுமுல/ வலெனு/-எஞ்சி/
கனவினில்/ உண்டாகும்/ செல்வம்/ போன்று/ எண்ணி/
வலசக3/ ப3லு/ தபமுலு/ ஜேஸினானா/ (நி)
(அவற்றினை) விரும்பாது/ சிறந்த/ தவங்கள்/ இயற்றினேனா/
சரணம் 4
ஜலஜ/-ஆப்த/ குல/ வர/ திலக/ வீனுல/ நீ/
கமல/ நண்பன்/ குல/ உயர்/ திலகமே/ செவிகளில்/ உனது/
கத2லு/ வின்னா/ ப3லு/ பாபமுலு/ போனு/ கானி/
கதைகளை/ கேட்டால்/ கொடிய/ பாவங்கள்/ போகும்/ அன்றி/
கலுமுல பலுகுல செலுலு/ வஸ்1யுலு கானி/
திருமகளும், நாமகளும்/ (எனது) வயப்படாதது/
தொலி/ ஜன்மமுல/ பூஜா/ ப2லமு/-ஏமோ/ தெலிய/ (நி)
முற்பிறவிகளின்/ வழிபாட்டு// பயனோ/ என்னவோ/ அறியேன்/
சரணம் 5
ஸ1ர/ சாப/ த4ர/ யோகி3/ வர/ நுத/ பரிபூர்ண/
வில்/ அம்பு/ ஏந்துவோனே/ யோகியர்/ உயர்/ போற்றும்/ பரிபூரணனே/
நர/ ரூப/ நிரதமு/ வர/ த்யாக3ராஜ/
மனித/ உருவத்தோனே/ எவ்வமயமும்/ மேலோனே/ தியாகராசனைப்/
பரிபால/ ஸுர/ பூ4மி ஸுருலனு/ ஸ்தி2ரமுக3/
பேணுவோனே/ வானோரையும்/ அந்தணர்களையும்/ உறுதியாக/
கருணிஞ்சு/ பி3ருது3/ நீ/ கரமுன/ மெரய/ (நி)
கருணிக்கும்/ விருது/ உனது/ கரத்தினில்/ திகழ/ உன்னை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - தபமுலு - தபமுனு - தபமு.
4 - வின்னா - எல்லா புத்தகங்களிலும் 'வின்ன' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், 'கேட்டாலும்' என்று பொருள்படும். அதற்கு, 'வின்னா' - என, கடைசி உயிரெழுத்து நீட்டிக்கப்படவேண்டும்.
Top
மேற்கோள்கள்
1 - ஸனகாதி3 - சனகாதியர் - சனர், சனகர், சனத்குமாரர், சனந்தனர் ஆகிய பிரமனின் மைந்தர்கள். இவர்களில் 'சனத்குமாரர்', 'முருகன்' எனப்படும்.
Top
விளக்கம்
2 - ப்ரேம மீர - காதல் மீர. இச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ள இடத்தினை நோக்கில், இவை 'த4னமுனு, கொனின பா4மனு' (செல்வத்தினையும், கொண்ட மனைவியையும்) என்பதுடன் இணைத்துப்பொருள் கொள்ளப்படவேண்டும். ஆனால், 'பூஜ' என்ற சொல்லுடன் இணைத்தால் மிக்குப் பொருந்தும் என்று கருதுகின்றேன்.
5 - செலுலு - மகளிர் - இது, 'கலுமுல' (திரு - செல்வம்) 'பலுகுல' (நா - கல்வி) ஆகிய இரண்டிற்கும் பொதுவான சொல்லாகும். எனவே, 'திருமகள்' மற்றும் 'நாமகள்' என்று பிரித்துப் பொருள் கொள்ளப்பட்டது.
Top
6 - பரிபூர்ண நர ரூப - இதனை 'பரிபூரண மனித உருவத்தோனே' என்றும் பொருள் கொள்ளலாம்.
உன்னைச் சொல்வதேன் - உன்னைக் குறை சொல்வதேன் என
கமல நண்பன் - பரிதி
Top
Updated on 07 Jun 2010
No comments:
Post a Comment