ஸுந்த3ரி நீ தி3வ்ய ரூபமுனு
ஜூட3 தனகு 1தொ3ரிகெனம்ம
அனுபல்லவி
மந்த3 க3மன நீ 2கடாக்ஷ ப3லமோ
முந்த3டி பூஜா ப2லமோ 3த்ரிபுர (ஸு)
சரணம்
சரணம் 1
பு4விலோ வரமௌ ஸ்ரீமதா3தி3
புரமுன நெலகொன்ன நீ ஸொக3ஸு வினி
ஸு-விவேகுலைன ப்3ரஹ்மாதி3
ஸுருலு கு3ம்பு கூடி3
4கவி வாஸரபு ஸேவ கனுங்கொ3ன
கலுகு3னாயனி கரகு3சு மதி3லோ
தி3வி தத்தரமு படு3சுனுண்ட3கா3
தீ3ன ஜனார்தி ஹாரிணி த்ரிபுர (ஸு)
சரணம் 2
கலிலோ தீ3ன ரக்ஷகியனி ஸப4
கலிகி3ன தாவுன பொக3டு3து3னம்ம
ஸ-லலித கு3ண கருணா
ஸாக3ரி நீ ஸாடியெவரம்மா
அலஸி வச்சினந்து3கு நா மனஸு
ஹாயி ஜெந்து3னாயனியுண்ட3க3 மரி
கல கலமனி ஸுர ஸதுலு வருஸகா3
கொலுவு ஸு1க்ர வாரபு முத்3து3 த்ரிபுர (ஸு)
சரணம் 3
நன்னு கன்ன தல்லி நா ஜன்மமு
5நாடு3 ஸப2லமாயெனம்ம இபுடு3
க4ன த3ரித்3ருனிகி பைகமு வலெ
கனுல பண்டு3வுகா3
வனஜ நயன எண்டு3 பைருலுகு
ஜலமு வலெ ஸு1ப4 தா3யகி காம
ஜனகுனி ஸோத3ரி ஸ்ரீ 6த்யாக3ராஜ
மனோ-ஹரி 7கௌ3ரி (ஸு)
பொருள் - சுருக்கம்
- சுந்தரி!
- மென்னடையாளே! திரிபுர சுந்தரி!
- எளியோர் துயர் களைபவளே!
- மிக்கு நளின குணங்களுடைய, கருணைக் கடலே!
- கலகலவென, வானோர் மடந்தையர், வரிசையாகச் சேவிக்கும் வெள்ளிக் கிழமையின், எழில் நிறை, திரிபுர சுந்தரி!
- என்னையீன்ற தாயே! கமலக் கண்ணீ! நலனருள்பவளே! காமனை ஈன்றோனின் சோதரி! தியாகாராசனின் மனம் கவரும், கௌரி!
- உனது திவ்விய உருவத்தினைக் காண, தனக்குக் கிடைத்ததம்மா!
- உனக்கு நிகர் எவரம்மா?
- கலியில், எளியோரைக் காப்பவளென, அவை அமைந்த இடத்தினில் (எல்லாம்), போற்றுவேனம்மா.
- உனது கடைக்கண் (பார்வை) வலிமையோ, முந்தைய வழிபாட்டின் பயனோ,
- உனது திவ்விய உருவத்தினைக் காண, தனக்குக் கிடைத்ததம்மா!
- புவியில், புனித, சிறப்பு மிக்க, ஆதி புரத்தினில் நிலைபெற்றுள்ள, உனது ஒயிலினைக் கேட்டு,
- மிக்கு விவேகமுடையோராகிய, பிரமன் முதலாக வானோர் கும்பலாகக் கூடி,
- (உனது) வெள்ளிக் கிழமை சேவையினைக் கண்டுகொள்ளக் கிடைக்குமாயென, உருகி யுள்ளத்தினில், வானுலகமே தத்தளித்துக்கொண்டிருக்க,
- புவியில், புனித, சிறப்பு மிக்க, ஆதி புரத்தினில் நிலைபெற்றுள்ள, உனது ஒயிலினைக் கேட்டு,
- உனது திவ்விய உருவத்தினைக் காண, தனக்குக் கிடைத்ததம்மா!
- மேலும், (உன்னைக் காண) களைத்து வந்ததற்கு, எனதுள்ளம் அமைதி பெறுமா யென்று (நான் கவலைப்பட்டு) இருக்க,
- உனது திவ்விய உருவத்தினைக் காண, தனக்குக் கிடைத்ததம்மா!
- எனது பிறவி இன்று பயன் பெற்றதம்மா.
- மிக்கு வறியோனுக்குச் செல்வம் (கிடைத்தது) போன்று,
- வறண்ட பயிர்களுக்கு நீர் போன்று,
- மிக்கு வறியோனுக்குச் செல்வம் (கிடைத்தது) போன்று,
- இப்போழ்து, கண்களுக்கு விருந்தாக, உனது திவ்விய உருவத்தினைக் காண, தனக்குக் கிடைத்ததம்மா!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுந்த3ரி/ நீ/ தி3வ்ய/ ரூபமுனு/
சுந்தரி/ உனது/ திவ்விய/ உருவத்தினை/
ஜூட3/ தனகு/ தொ3ரிகெனு/-அம்ம/
காண/ தனக்கு/ கிடைத்தது/ அம்மா/
அனுபல்லவி
மந்த3/ க3மன/ நீ/ கடாக்ஷ/ ப3லமோ/
மெல்/ நடையாளே/ உனது/ கடைக்கண் (பார்வை)/ வலிமையோ/
முந்த3டி/ பூஜா/ ப2லமோ/ த்ரிபுர/ (ஸு)
முந்தைய/ வழிபாட்டின்/ பயனோ/ திரிபுர/ சுந்தரி...
சரணம்
சரணம் 1
பு4விலோ/ வரமௌ/ ஸ்ரீமத்/-ஆதி3/
புவியில்/ புனித/ சிறப்பு/ மிக்க/ ஆதி/
புரமுன/ நெலகொன்ன/ நீ/ ஸொக3ஸு/ வினி/
புரத்தினில்/ நிலைபெற்றுள்ள/ உனது/ ஒயிலினை/ கேட்டு/
ஸு-விவேகுலைன/ ப்3ரஹ்மா/-ஆதி3/
மிக்கு விவேகமுடையோராகிய/ பிரமன்/ முதலாக/
ஸுருலு/ கு3ம்பு/ கூடி3/
வானோர்/ கும்பலாக/ கூடி/
கவி/ வாஸரபு/ ஸேவ/ கனுங்கொ3ன/
(உனது) வெள்ளிக்/ கிழமை/ சேவையினை/ கண்டுகொள்ள/
கலுகு3னா/-அனி/ கரகு3சு/ மதி3லோ/
கிடைக்குமா/ யென/ உருகி/ யுள்ளத்தினில்/
தி3வி/ தத்தரமு படு3சுனு/-உண்ட3கா3/
வானுலகமே/ தத்தளித்துக்கொண்டு/ இருக்க/
தீ3ன ஜன/-ஆர்தி/ ஹாரிணி/ த்ரிபுர/ (ஸு)
எளியோர்/ துயர்/ களைபவளே/ திரிபுர/ சுந்தரி...
சரணம் 2
கலிலோ/ தீ3ன/ ரக்ஷகி/-அனி/ ஸப4/
கலியில்/ எளியோரை/ காப்பவள்/ என/ அவை/
கலிகி3ன/ தாவுன/ பொக3டு3து3னு/-அம்ம/
அமைந்த/ இடத்தினில் (எல்லாம்)/ போற்றுவேன்/ அம்மா/
ஸ-லலித/ கு3ண/ கருணா/
மிக்கு நளின/ குணங்களுடைய/ கருணை/
ஸாக3ரி/ நீ/ ஸாடி/-எவரு/-அம்மா/
கடலே/ உனக்கு/ நிகர்/ எவர்/ அம்மா/
அலஸி/ வச்சின-அந்து3கு/ நா/ மனஸு/
(உன்னைக் காண) களைத்து/ வந்ததற்கு/ எனது/ உள்ளம்/
ஹாயி/ ஜெந்து3னா/-அனி/-உண்ட3க3/ மரி/
அமைதி/ பெறுமா/ யென்று/ (நான் கவலைப்பட்டு) இருக்க/ மேலும்/
கல கலமனி/ ஸுர/ ஸதுலு/ வருஸகா3/
கலகலவென/ வானோர்/ மடந்தையர்/ வரிசையாக/
கொலுவு/ ஸு1க்ர/ வாரபு/ முத்3து3/ த்ரிபுர/ (ஸு)
சேவிக்கும்/ வெள்ளிக்/ கிழமையின்/ எழில் நிறை/ திரிபுர/ சுந்தரி...
சரணம் 3
நன்னு/ கன்ன/ தல்லி/ நா/ ஜன்மமு/
என்னை/ யீன்ற/ தாயே/ எனது/ பிறவி/
நாடு3/ ஸப2லமு/-ஆயெனு/-அம்ம/ இபுடு3/
இன்று/ பயன்/ பெற்றது/ அம்மா/ இப்போழ்து/
க4ன/ த3ரித்3ருனிகி/ பைகமு/ வலெ/
மிக்கு/ வறியோனுக்கு/ செல்வம் (கிடைத்தது)/ போன்று/
கனுல/ பண்டு3வுகா3/
கண்களுக்கு/ விருந்தாக/
வனஜ/ நயன/ எண்டு3/ பைருலுகு/
கமல/ கண்ணீ/ வறண்ட/ பயிர்களுக்கு/
ஜலமு/ வலெ/ ஸு1ப4/ தா3யகி/ காம/
நீர்/ போன்று/ நலன்/ அருள்பவளே/ காமனை/
ஜனகுனி/ ஸோத3ரி/ ஸ்ரீ த்யாக3ராஜ/
ஈன்றோனின்/ சோதரி/ ஸ்ரீ தியாகாராசனின்/
மனோ/-ஹரி/ கௌ3ரி/ (ஸு)
மனம்/ கவரும்/ கௌரி/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தொ3ரிகெனம்ம - தொ3ரிகெனம்ம ஓ மஹா த்ரிபுர (ஸுந்த3ரி).
2 - கடாக்ஷ ப3லமோ - கடாக்ஷ ப2லமோ : இவ்விடத்தில், 'ப3லமோ' என்பதே மிக்குப் பொருந்தும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.
5 - நாடு3 (அன்று) - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், 'நேடு3' (இன்று) என்பதே பொருந்தும்.
6 - த்யாக3ராஜ - த்யாக3ராஜு : இவ்விடத்தினில், 'த்யாக3ராஜ' என்பதே பொருந்தும்
7 - கௌ3ரி - கௌ3ரி ஸ்ரீ த்ரிபுர (ஸுந்த3ரி).
Top
மேற்கோள்கள்
3 - த்ரிபுர ஸுந்த3ரி - திருவொற்றியூரில் அம்மையின் பெயர்.
Top
விளக்கம்
4 - கவி வாஸர - 'கவி' என்ற சொல்லுக்கு 'சுக்கிரன்' என்றும் பொருளாகும். எனவே 'சுக்கிர வாஸர' (வெள்ளிக் கிழமை) என்று பொருள்படும்.
ஆதி புரம் - திருவொற்றியூர்
பிறவி பயன் பெற்றது - பிறந்த பயனைப் பெற்றேன் என.
காமனை ஈன்றோன் - அரி
Top
Updated on 26 Jun 2010
4 comments:
திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 3 -"நாடு3 (அன்று) - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது."
இருப்பினும் நாடு என்று ஒருவரும் பாட நான் கேட்டதில்லை.
ஸப2லமு என்பதை பெரும்பாலான தமிழ் பாடகர்கள் சபலமு என்று பாடுகிறார்கள்.
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
நான் விரும்பிக் கேட்கும், உணர்ச்சி பூர்வமாகப் பாடும், தெலுங்கு பாடகர் லோகநாத ஸர்மா அவர்கள் 'நாடு3' என்றுதான் பாடுகின்றார்.
வணக்கம்,
கோவிந்தன்
திரு கோவிந்தன் அவர்களே
அனுபல்லவியில் உள்ள தளர் நடையாளே என்பது உடல் தளர்ச்சியுற்று நடப்பவளே என்னும் தவறான பொருள் தரலாம். மென்னடையாளெ என்பது பொருந்தும் என்று எண்ணுகிறேன்.
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
தாங்கள் கூறியபடியே, 'மென்னடையாள்' என்று திருத்திவிட்டேன்.
நன்றி,
வணக்கம்
கோவிந்தன்
Post a Comment