Tuesday, June 22, 2010

தியாகராஜ கிருதி - ஸந்தே3ஹமுயேலரா - ராகம் கல்யாணி - Sandehamuyelara - Raga Kalyani

பல்லவி
ஸந்தே3ஹமுயேலரா நா ஸாமி நாபை நீகு

அனுபல்லவி
வந்தே3 கு3ண ஸீ1ல வைப4வ ரூப
உரக31யன தா31ரதே2 (ஸ)

சரணம்
1கரி ராஜுனி காசிதிவனி க42ஸுருலெல்ல பொக333
வர 3ஸா1ம்ப4வுடை3ன தா3னவ ஸூ1ருனி காசிதிவி
நர ஹரி ஸ்ரீ த்யாக3ராஜ ஸரஸ ஸ்ரீ ராம (ஸ)


பொருள் - சுருக்கம்
  • எனதிறைவா!
  • குண சீலனே! மேன்மையான உருவே! அரவணையோனே! தசரசன் மைந்தா!
  • நர சிங்கமே! தியாகராசனுக்கு இனிய, இராமா!

  • ஐயமேனய்யா, என்மீதுனக்கு?
  • வணங்கினேன்.
    • கரியரசனைக் காத்தாயென சிறந்த வானோர் யாவரும் போற்ற,
    • சம்புவின் தொண்டனாகிய உயர் அரக்கர் சூரனைக் காத்தாய்.

  • ஐயமேனய்யா, என்மீதுனக்கு?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸந்தே3ஹமு/-ஏலரா/ நா/ ஸாமி/ நாபை/ நீகு/
ஐயம்/ ஏனய்யா/ எனது/ இறைவா/ என்மீது/ உனக்கு/


அனுபல்லவி
வந்தே3/ கு3ண/ ஸீ1ல/ வைப4வ/ ரூப/
வணங்கினேன்/ குண/ சீலனே/ மேன்மையான/ உருவே/

உரக3/ ஸ1யன/ தா31ரதே2/ (ஸ)
அரவு/ அணையோனே/ தசரசன் மைந்தா/


சரணம்
கரி/ ராஜுனி/ காசிதிவி/-அனி/ க4ன/ ஸுருலு/-எல்ல/ பொக333/
கரி/ அரசனை/ காத்தாய்/ என/ சிறந்த/ வானோர்/ யாவரும்/ போற்ற/

வர/ ஸா1ம்ப4வுடு3/-ஐன/ தா3னவ/ ஸூ1ருனி/ காசிதிவி/
உயர்/ சம்புவின் தொண்டன்/ ஆகிய/ அரக்கர்/ சூரனை/ காத்தாய்/

நர/ ஹரி/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ஸரஸ/ ஸ்ரீ ராம/ (ஸ)
நர/ சிங்கமே/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ இனிய/ ஸ்ரீ ராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கரி ராஜுனி (கரியரசனை) - கி3ரி ராஜுனி (மலையரசனை) : இவ்விடத்தில் 'கி3ரி ராஜுனி' என்பது பொருந்தாது. எனவே, 'கரி ராஜுனி' ஏற்கப்பட்டது.

2 - ஸுருலெல்ல - ஸுருலெல்லரு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - ஸா1ம்ப4வுடை3ன தா3னவ ஸூ1ருனி - (சம்புவின் தொண்டனாகிய அரக்கர் சூரனை) : இது யாரைக் குறிக்கின்றதென்று தெரியவில்லை. இது, 'முசுகுந்தனாக' இருக்கமுடியாது; ஏனென்றால், அவன் இக்ஷ்வாகு குல மன்னன். அடுத்து வரும் சொல்லாகிய, 'காசிதிவி' (காத்தாய்) என்பதனால், 'ராவணனாகவும்' இருக்கமுடியாது.

இந்த கிருதி தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என்று ஐயமிருப்பதாக திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja'-என்ற புத்தகத்தினில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பு - சிவன்

Top


Updated on 22 Jun 2010

No comments: