Saturday, June 26, 2010

தியாகராஜ கிருதி - ஓட3னு ஜரிபே - ராகம் ஸாரங்க - Odanu Jaripe - Raga Saranga - Nauka Charitram

பல்லவி
ஓட3னு 1ஜரிபே முச்சட கனரே
வனிதலார நேடு3

அனுபல்லவி
ஆட3வாரு யமுனா காட3 க்ரு2ஷ்ணுனி கூடி3
ஆடு3சு பாடு3சுனந்த3ரு ஜூட33 (ஓ)

சரணம்
சரணம் 1
கொந்த3ரு ஹரி கீர்தனமுல 2பாட3
கொந்த3ரானந்த3முன முத்3து3லாட3
கொந்த3ரு யமுனா தே3வினி வேட3
3கொந்த3ரி முத்யபு ஸருலஸியாட3 (ஓ)


சரணம் 2
கொந்த3ரு தட333 பாலிண்ட்3லு கத3
3கொந்த3ரி3ங்க3ரு வல்வலு வத3
3கொந்த3ரி குடிலாலகமுலு மெத3
கொந்த3ரு பல்குசு க்ரு2ஷ்ணுனி கத2ல (ஓ)


சரணம் 3
கொந்த3ரு த்யாக3ராஜ ஸகு2டே3யனக3
3கொந்த3ரி 4கஸ்தூரி பொ3ட்டு கரக33
3கொந்த3ரி கொப்புல 5விருலு ஜாரக3
3கொந்த3ரி 6கங்கணமுலு4ல்லனக3 (ஓ)


பொருள் - சுருக்கம்
(வானோர் மடந்தையர் தமக்குள் உரையாடுதல்)

  • பெண்டிரே!
    • ஓடத்தினைச் செலுத்தும் அழகினைக் காணீர், இன்று!

      • பெண்கள், யமுனை அருகில், கண்ணனைக் கூடி, ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், அனைவரும் காண,

    • ஓடத்தினைச் செலுத்தும் அழகினைக் காணீர், இன்று!

      • சிலர் அரி கீர்த்தனங்களைப் பாட,
      • சிலர் ஆனந்தமாக (ஒருவரையொருவர்) தழுவிக்கொள்ள,
      • சிலர் யமுனா தேவியினை வேண்ட,
      • சிலரின் முத்துச் சரங்கள் அசைந்தாட,

      • சிலர் தள்ளாட, (அவர்தம்) கொங்கைகள் அசைய,
      • சிலரின் பொன்னாடைகள் நெகிழ,
      • சிலரின் சுருள் அளகங்கள் பறக்க,
      • சிலர் சொல்லிக்கொண்டு, கண்ணனின் கதைகளை,

      • சிலர் (கண்ணனை) தியாகராசனின் நண்பனடியென,
      • சிலரின் கத்தூரிப் பொட்டு கரைய,
      • சிலரின் கொண்டை மலர் சரிய,
      • சிலரின் வளையல்கள் கலீரென,

    • ஓடத்தினைச் செலுத்தும் அழகினைக் காணீர், இன்று!



    பதம் பிரித்தல் - பொருள்
    (வானோர் மடந்தையர் தமக்குள் உரையாடுதல்)
    பல்லவி

    ஓட3னு/ ஜரிபே/ முச்சட/ கனரே/
    ஓடத்தினை/ செலுத்தும்/ அழகினை/ காணீர்/

    வனிதலார/ நேடு3/
    பெண்டிரே/ இன்று/


    அனுபல்லவி
    ஆட3வாரு/ யமுனா/ காட3/ க்ரு2ஷ்ணுனி/ கூடி3/
    பெண்கள்/ யமுனை/ அருகில்/ கண்ணனை/ கூடி/

    ஆடு3சு/ பாடு3சு/-அந்த3ரு/ ஜூட33/ (ஓ)
    ஆடிக்கொண்டும்/ பாடிக்கொண்டும்/ அனைவரும்/ காண/ ஓடத்தினை...


    சரணம்
    சரணம் 1
    கொந்த3ரு/ ஹரி/ கீர்தனமுல/ பாட3/
    சிலர்/ அரி/ கீர்த்தனங்களை/ பாட/

    கொந்த3ரு/-ஆனந்த3முன/ முத்3து3லு-ஆட3/
    சிலர்/ ஆனந்தமாக/ (ஒருவரையொருவர்) தழுவிக்கொள்ள/

    கொந்த3ரு/ யமுனா/ தே3வினி/ வேட3/
    சிலர்/ யமுனா/ தேவியினை/ வேண்ட/

    கொந்த3ரி/ முத்யபு/ ஸருலு/-அஸியாட3/ (ஓ)
    சிலரின்/ முத்து/ சரங்கள்/ அசைந்தாட/ ஓடத்தினை...


    சரணம் 2
    கொந்த3ரு/ தட333/ பாலிண்ட்3லு/ கத3ல/
    சிலர்/ தள்ளாட/ (அவர்தம்) கொங்கைகள்/ அசைய/

    கொந்த3ரி/ ப3ங்க3ரு/ வல்வலு/ வத3ல/
    சிலரின்/ பொன்/ ஆடைகள்/ நெகிழ/

    கொந்த3ரி/ குடில/-அலகமுலு/ மெத3ல/
    சிலரின்/ சுருள்/ அளகங்கள்/ பறக்க/

    கொந்த3ரு/ பல்குசு/ க்ரு2ஷ்ணுனி/ கத2ல/ (ஓ)
    சிலர்/ சொல்லிக்கொண்டு/ கண்ணனின்/ கதைகளை/ ஓடத்தினை...


    சரணம் 3
    கொந்த3ரு/ த்யாக3ராஜ/ ஸகு2டே3/-அனக3/
    சிலர்/ (கண்ணனை) தியாகராசனின்/ நண்பனடி/ என/

    கொந்த3ரி/ கஸ்தூரி/ பொ3ட்டு/ கரக33/
    சிலரின்/ கத்தூரி/ பொட்டு/ கரைய/

    கொந்த3ரி/ கொப்புல/ விருலு/ ஜாரக3/
    சிலரின்/ கொண்டை/ மலர்/ சரிய/

    கொந்த3ரி/ கங்கணமுலு/ க4ல்லு/-அனக3/ (ஓ)
    சிலரின்/ வளையல்கள்/ கலீர்/ என/ ஓடத்தினை...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - ஜரிபே - ஜரிபெடு3.

    2 - பாட3 - பாட33.

    3 - கொந்த3ரி - கொந்த3ரு - கொந்த3ர : இவ்வெல்லா இடங்களிலும் 'கொந்த3ரி' என்பது தான் பொருந்தும்.

    5 - விருலு - விருலெல்ல.

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்
    4 - கஸ்தூரி பொ3ட்டு - கத்தூரிப் பொட்டு. பெண்கள், நெற்றியல் இடும் குங்கமப்பொட்டு, கத்தூரி மஞ்சள் மற்றும் படிகாரம், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றினால் செய்யப்படுவது. இவ்விடத்தில், 'கத்தூரி' என்பது 'புனுகினை'க் குறிக்கும். 'புனுகு', வாசனைக்காக சேர்க்கப்பட்டு, அதனால் 'கத்துரிப் பொட்டு' என்று வழங்கலாம்.

    6 - கங்கணமுலு - கங்கணங்கள் - இவ்விடத்தில், 'வளையல்களை'க் குறிக்கும். அடுத்து வரும், 'கலீர்' எனும் சொல்லினால், இது 'கண்ணாடி வளையல்களை'க் குறிக்கும்.

    Top

    இப்பாடல், 'நௌக சரித்ரம்' எனப்படும் 'ஓடக்கதை'யினைச் சேர்ந்ததாகும்.

    பாடலின் பின்னணி - கோபியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, எல்லோருமாக, ஓடத்தில் பயணம் செய்ய எண்ணுகின்றனர். ஓடத்தினைச் செலுத்துதல், பெண்களால் இயலாது என்று கண்ணன் உரைக்க, அதனைக் கேட்டு, கண்ணன், ஏதோ சூது செய்வதாக கோபியர் எண்ணுகின்றனர். பின்னர், கண்ணன், தன்னுடைய பெருமைகளையெல்லாம் எடுத்துக் கூறி, அவர்களை நம்பவைக்கின்றான். அதன் பின்னர், இந்தப் பாடலில் வரும், ஓடப் பயணம் தொடங்குகின்றது. இப்பாடலில், வான் மடந்தையர், ஒருவருக்கொருவர், இந்த அற்புதமான ஓடப்பயணத்தினைப் பற்றி விவரிக்கின்றனர்.

    Top


    Updated on 27 Jun 2010
  • No comments: