நீ ஸரி ஸாடியெவரு லேத3னுசு
நிரதமு நே நீ பத3முல தலசிதி
அனுபல்லவி
தா3ஸுனி ப்3ரோசுடகருதா3யெ கதா3
பா4ஸலு வேராயெ ப4ளி ப4ளி (நீ)
சரணம்
அஜ கும்ப4ஜ முனி நக3ஜ பதீந்த்3ருலு
க3ஜ பதி க2க3 ப2ணி ராஜ வரேண்யுலு
ப4ஜன பருலுகா3 வெலஸிரி
த்யாக3ராஜ வினுத நா மனவி வினுடகு (நீ)
பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- உனக்கு சரி சமம் எவருமில்லையென, எவ்வமயமும், நானுனது திருவடிகளினை நினைத்தேன்.
- அடியேனைக் காப்பதற்கு அரிதானதன்றோ? (உனது) சொற்களும் வேறாகின; பலே பலே!!
- பிரமன், குட முனி, மலைமகள் மணாளன், இந்திரன், கரியரசன், கருடன், அரவரசன் ஆகிய தலைசிறந்தோர் (உனது) பஜனையில் முழுதும் ஈடுபட்டோராக ஒளிர்ந்தனர்.
- எனது விண்ணப்பத்தினைக் கேட்பதற்கு, உனக்கு சரி சமம் எவருமில்லையென, எவ்வமயமும், நானுனது திருவடிகளினை நினைத்தேன்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ ஸரி/ ஸாடி/-எவரு/ லேது3/-அனுசு/
உனக்கு/ சரி/ சமம்/ எவரும்/ இல்லை/ என/
நிரதமு/ நே/ நீ/ பத3முல/ தலசிதி/
எவ்வமயமும்/ நான்/ உனது/ திருவடிகளினை/ நினைத்தேன்/
அனுபல்லவி
தா3ஸுனி/ ப்3ரோசுடகு/-அருதா3யெ/ கதா3/
அடியேனை/ காப்பதற்கு/ அரிதானது/ அன்றோ/
பா4ஸலு/ வேராயெ/ ப4ளி/ ப4ளி/ (நீ)
(உனது) சொற்களும்/ வேறாகின/ பலே/ பலே/
சரணம்
அஜ/ கும்ப4ஜ/ முனி/ நக3ஜ/ பதி/-இந்த்3ருலு/
பிரமன்/ குட/ முனி/ மலைமகள்/ மணாளன்/ இந்திரன் ஆகியோர்/
க3ஜ/ பதி/ க2க3/ ப2ணி/ ராஜ/ வரேண்யுலு/
கரி/ அரசன்/ கருடன்/ அரவு/ அரசன்/ (ஆகிய) தலைசிறந்தோர்/
ப4ஜன/ பருலுகா3/ வெலஸிரி/
(உனது) பஜனையில்/ முழுதும் ஈடுபட்டோராக/ ஒளிர்ந்தனர்/
த்யாக3ராஜ/ வினுத/ நா/ மனவி/ வினுடகு/ (நீ)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ எனது/ விண்ணப்பத்தினை/ கேட்பதற்கு/ உனக்கு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல், ஒரு புத்தகத்தில்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்திலும், இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என, ஐயமிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குட முனி - அகத்தியர்
மலைமகள் மணாளன் - சிவன்
அரவரசன் - சேடன்
Top
Updated on 08 May 2010
No comments:
Post a Comment