Saturday, May 8, 2010

தியாகராஜ கிருதி - பரிபூர்ண காம - ராகம் ஹம்ஸ ப்4ரமரி - Paripoorna Kama - Raga Hamsa Bhramari

பல்லவி
பரிபூர்ண காம ஸரி லேனி வாட3
3ரி ஜூபவே கி3ரி ராஜ த4

அனுபல்லவி
ஹரி ராஜ மித்ர ஹரி ராஜ நேத்ர
பரிபாலய மாம் ப4க்த பாரிஜாத (ப)

சரணம்
வர யோகி3 ப்3ரு2ந்தா3ஸ்1ரித பாத3 யுக3
1ரணாக3த ஜன ஸம்ரக்ஷக
1ரதி3ந்து3 நிப4 வத3னாரவிந்த3
வர தா3யக த்யாக3ராஜ நுத (ப)


பொருள் - சுருக்கம்
  • இச்சைகள் நிறைவேறப்பெற்றோனே!
  • நிகரற்றோனே!
  • மலையரசனைச் சுமந்தோனே!

  • வானரர் அரசனின் நண்பனே!
  • பரிதி மதி கண்களோனே!
  • தொண்டர்களின் பாரிசாதமே!

  • உயர் யோகியர்கள் சரணடையும் திருவடி இணையோனே!
  • சரணடைந்தோரைப் பாதுகாப்பவனே!
  • இலையுதிர்கால மதி நிகர் கமல வதனத்தோனே!
  • வரமருள்வோனே!
  • தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

    • புகலளிப்பாய்.
    • பேணுவாயென்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரிபூர்ண/ காம/ ஸரி/ லேனி வாட3/
நிறைவேறப்பெற்றோனே/ இச்சைகள்/ நிகர்/ அற்றோனே/

3ரி/ ஜூபவே/ கி3ரி/ ராஜ/ த4ர/
புகல்/ அளிப்பாய்/ மலை/ அரசனை/ சுமந்தோனே/


அனுபல்லவி
ஹரி/ ராஜ/ மித்ர/ ஹரி/ ராஜ/ நேத்ர/
வானரர்/ அரசனின்/ நண்பனே/ பரிதி/ மதி/ கண்களோனே/

பரிபாலய/ மாம்/ ப4க்த/ பாரிஜாத/ (ப)
பேணுவாய்/ என்னை/ தொண்டர்களின்/ பாரிசாதமே/


சரணம்
வர/ யோகி3 ப்3ரு2ந்த3/-ஆஸ்1ரித/ பாத3/ யுக3/
உயர்/ யோகியர்கள்/ சரணடையும்/ திருவடி/ இணையோனே/

1ரண/-ஆக3த/ ஜன/ ஸம்ரக்ஷக/
சரண்/ அடைந்தோரை/ பாதுகாப்பவனே/

1ரத்3/-இந்து3/ நிப4/ வத3ன/-அரவிந்த3/
இலையுதிர்கால/ மதி/ நிகர்/ வதனத்தோனே/ கமல/

வர/ தா3யக/ த்யாக3ராஜ/ நுத/ (ப)
வரம்/ அருள்வோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
ஒரு புத்தகத்தில், இப்பாடல், தியாகராஜர் இயற்றினாரா என ஐயமிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையரசன் - மந்தர மலை
வானரர் அரசன் - சுக்கிரீவன்
பாரிசாதம் - விரும்பியதை அளிக்கும் வானோர் தரு

Top


Updated on 08 May 2010

No comments: