நீது3 சரணமுலே க3தியனி
1நெரத நம்மின வாட3னுரா ராம
அனுபல்லவி
வேத3 வேதா3ந்த விதி3துட3னி
வெலயு ஸ்ரீ ஸர்வேஸ1 ராம (நீ)
சரணம்
பாப கர்மமு நிண்டு3ராயிந்து3
பா3த4 பட3 நே ஜாலரா
2ஏ வக3கா3னைனனு
நன்னேலுகோ த்யாக3ராஜ நுத (நீ)
பொருள் - சுருக்கம்
- இராமா!
- வேத, வேதாந்தங்களில் அறியப்படுவோனென ஒளிரும், யாவர்க்கும் இறைவா, இராமா!
- தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- உனது திருவடிகளே புகலென மிக்கு நம்பிவனய்யா.
- பாவ காரியங்கள் நிறைந்துளதய்யா இங்கு.
- துயர் பட நான் இயலேனய்யா.
- எந்த வகையாக ஆகிலும் என்னையாள்வாய்.
- உனது திருவடிகளே புகலென மிக்கு நம்பிவனய்யா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீது3/ சரணமுலே/ க3தி/-அனி/
உனது/ திருவடிகளே/ புகல்/ என/
நெரத/ நம்மின/ வாட3னுரா/ ராம/
மிக்கு/ நம்பிவனய்யா/, இராமா/
அனுபல்லவி
வேத3/ வேதா3ந்த/ விதி3துடு3/-அனி/
வேத/ வேதாந்தங்களில்/ அறியப்படுவோன்/ என/
வெலயு/ ஸ்ரீ/ ஸர்வ/-ஈஸ1/ ராம/ (நீ)
ஒளிரும்/ ஸ்ரீ/ யாவர்க்கும்/ இறைவா/ இராமா/
சரணம்
பாப/ கர்மமு/ நிண்டு3ரா/-இந்து3/
பாவ/ காரியங்கள்/ நிறைந்துளதய்யா/ இங்கு/
பா3த4/ பட3/ நே/ ஜாலரா/
துயர்/ பட/ நான்/ இயலேனய்யா/
ஏ/ வக3கா3னு/-ஐனனு/
எந்த/ வகையாக/ ஆகிலும்/
நன்னு/-ஏலுகோ/ த்யாக3ராஜ/ நுத/ (நீ)
என்னை/ ஆள்வாய்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஏ வக3கா3னைனனு - ஏ அபகாரியைனனு : பிற்கூறியது சரியென்றால், 'எத்தகைய குற்றவாளி ஆகிலும் என்னை ஆள்வாய்' என்று பொருள் கொள்ளப்படும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - நெரத - மிக்கு. 'நெரத' என்ற சொல் 'நெர' என்பதன் சரியான வடிவமா என்பது தெரியவில்லை.
ஒரு புத்தகத்தில், இப்பாடல், தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என்று ஐயமிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
Top
Updated on 07 May 2010
No comments:
Post a Comment