ஏ தாவுனரா நிலகட3 நீகு
எஞ்சி 1ஜூட3னக3பட3வு
அனுபல்லவி
ஸீதா கௌ3ரி வாகீ3ஸ்1வரியனு
2ஸ்ரீ ரூபமுலந்தா3 கோ3விந்த3 (ஏ)
சரணம்
பூ4 கமலார்கானில நப4முலந்தா3
3லோக கோடுலந்தா3
ஸ்ரீ கருட3கு3 த்யாக3ராஜ கரார்சித
ஸி1வ மாத4வ ப்3ரஹ்மாது3லயந்தா3 (ஏ)
பொருள் - சுருக்கம்
- கோவிந்தா! சீரருளும், தியாகராசன் கைகளால் தொழப் பெற்றோனே!
- எவ்விடத்திலய்யா நிலயம் உனக்கு?
- எண்ணிப் பார்க்க, அகப்பட மாட்டாய்
- சீதை, கௌரி, நாவரசியெனும் இலக்குமியின் உருவங்களிலா?
- (ஐம்பூதங்களெனும்) புவி, நீர், நெருப்பு, காற்று, வெளிகளிலா?
- கோடிக்கணக்கான உலகங்களிலா?
- சிவன், மாதவன், பிரமன் ஆகியோரிலா?
- சீதை, கௌரி, நாவரசியெனும் இலக்குமியின் உருவங்களிலா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏ/ தாவுனரா/ நிலகட3/ நீகு/
எந்த/ இடத்திலய்யா/ நிலயம்/ உனக்கு/
எஞ்சி/ ஜூட3னு/-அக3பட3வு/
எண்ணி/ பார்க்க/ அகப்பட மாட்டாய்/
அனுபல்லவி
ஸீதா/ கௌ3ரி/ வாக்/-ஈஸ்1வரி/-அனு/
சீதை/ கௌரி/ நா/ அரசி/ எனும்/
ஸ்ரீ/ ரூபமுலு-அந்தா3/ கோ3விந்த3/ (ஏ)
இலக்குமியின்/ உருவங்களிலா/ கோவிந்தா/
சரணம்
பூ4/ கமல/-அர்க/-அனில/ நப4முலு-அந்தா3/
(ஐம்பூதங்களெனும்) புவி/ நீர்/ நெருப்பு/ காற்று/ வெளிகளிலா/
லோக/ கோடுலு-அந்தா3/
உலகங்கள்/ கோடிகளிலா/
ஸ்ரீ/ கருட3கு3/ த்யாக3ராஜ/ கர/-அர்சித/
சீர்/ அருளும்/ தியாகராசன்/ கைகளால்/ தொழப் பெற்றோனே/
ஸி1வ/ மாத4வ/ ப்3ரஹ்மா/-ஆது3லு-அந்தா3/ (ஏ)
சிவன்/ மாதவன்/ பிரமன்/ ஆகியோரிலா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - அக3பட3வு - அக3பட3வு ஓ ராம.
3 - லோக கோடுலந்தா3 - பூ4த கோடுலந்தா3.
Top
மேற்கோள்கள்
2 - ஸ்ரீ ரூபமுலந்தா3 - இலக்குமியின் உருவங்களிலா - இது குறித்து தேவி மகாத்மியத்தில் (உத்தர பாகம், ப்ராதானிக ரஹஸ்யம்) கூறப்பட்டது -
"ஆதி காரணமான மகாலக்ஷ்மி, மூன்று குணங்களுடைத்த, பரமேஸ்வரியாம்;
காண்பதுவும், காணப்படாததுமான உருவினளான அவள், யாவற்றையும் மேவி நிற்கின்றாள்.(4)
உருக்கிய பொன்மேனியுடைத்த அவள், உருக்கிய பொன்னணிகலன்களுடைத்தாள்;
வெறுமையான இவ்வகிலத்தினை, தன்னொளியினால் நிரப்பினாள். (6)
அவள், மைவண்ணம், திட்டிப்பற்கள், அழகிய வதனமுமுடைத்தவளாகப் பிரிந்தாள்;
அகன்ற கண்களும், மெல்லிடையும் உடைத்த பெண்ணாக விளங்கினாள். (8)
(அவளை நோக்கி) 'மஹா மாயா, மஹா காளி, மஹா மாரி, க்ஷுதா, த்ருஷா,
நித்ரா, த்ருஷ்ணா, ஏகவீரா, கால ராத்திரி என அளிவிடற்கரியவளாவாய்' என்றாள் (11)
இங்ஙனம் அவளுக்கு உரைத்து, மஹா லக்ஷ்மி, தான் வேறோர் உருவம் கொண்டாள்;
சத்துவ குணமும், மிக்குத் தூய வடிவமும், மதியின் ஒளியினையும் அவளுக்களித்தாள்.(13)
அக்ஷமாலை, அங்குசம், வீணை, புத்தகங்களும் அளித்து, அவளுக்கு,
(மஹாவித்யா, மஹாவாணி, பாரதி மற்றும் ஸரஸ்வதி என்ற) பெயர்களும் அளித்தாள்." (14).
Top
விளக்கம்
சீரருளும் - இறைவனைக் குறிக்கும்
மூன்று குணங்கள் - ஸத்வ, ரஜஸ், தமஸ் (சத்துவ, ராசத, தாமத)
Top
Updated on 25 May 2010
No comments:
Post a Comment