Sunday, May 23, 2010

தியாகராஜ கிருதி - எந்து3கோ நீ மனஸு - ராகம் கல்யாணி - Enduko Ni Manasu - Raga Kalyani

பல்லவி
எந்து3கோ நீ மனஸு கரக3து3 ஏமி நேரமோ தெலிய

அனுபல்லவி
எந்து3 ஜூசின கானி த31ரத2
நந்த3னுகா3 பா4விஞ்சின நாபை (எ)

சரணம்
சரணம் 1
ஸுமுகு2லைனயீ லோகுலு நன்னஸூயலசே ஜூசெத3ரு
விமுகு2லையெந்தடி வாட3னி ப3ஹு வித4முல தூ3ரெத3ரு
1ஸமுக2முனகு யோக்3யுடு3 காட3னி மரி ஜூட3கனெஞ்செத3ரு
3மகமுனனு ரக்ஷிஞ்செடி3 வாரலு காரனி நின்னே கோரின நாபை (எ)


சரணம் 2
4ன தனய களத்ராது3ல ஜூசி தமத3னி ப்4ரமஸெத3ரு
வெனுக முந்து3 தெலியனியா த4னிகுல வெம்ப3டி3 திரிகெ33ரு
இன குல ஜல நிதி4 ஸோம ராம 2நன்னிடுல ஸேயகனி வெய்யாரு
மனவுலடு3கு3 நாபைனி கருணதோ மன்னிஞ்சி காபாட3னு ராம (எ)


சரணம் 3
ராக3 ரஹித ஸ்ரீ ராம இந்த பராகு ஸேயக
1ரணாக3த வத்ஸல நம்மிதி தாரக நாம பராத்பர
த்யாக3ராஜ ஹ்ரு23ய ஸத3னுட3னி அத்யந்தமு வேடி3திரா
நீவே க3தியனுசு ரேயு பக3லு வெய்யி வேல மொரலு பெட்டின நாபை (எ)


பொருள் - சுருக்கம்
  • பரிதிகுலக் கடலின் மதியே, இராமா! பற்றற்றோனே, இராமா! சரணடைந்தோரிடம் கனிவுடையோனே! தாரக நாமத்தோனே! பராபரனே!

  • ஏனோ உனதுள்ளம் உருகாது?
  • என்ன தவறோ அறியேனே!

    • எங்கு நோக்கினாலும் தசரதன் மைந்தனாக எண்ணிக்கொண்ட என்மீது

  • ஏனோ உனதுள்ளம் உருகாது?

    • நல்லோரான இம்மக்கள் என்னை எரிச்சலுடன் நோக்கினர்;
    • வேண்டாதவராகி, 'எப்படிப்பட்டவன்' என பல விதமாகத் தூற்றினர்;
    • சமூகத்திற்கு உகந்தவன் அல்லன் என, திரும்ப காணலாகாதென, எண்ணினர்;

    • (இவர்கள்) உறுதியாகக் காப்பாற்றுவோர் அல்லரென்று உன்னையே கோரிய என்மீது

  • ஏனோ உனதுள்ளம் உருகாது?

    • செல்வம், மனைவி, மக்கள் ஆகியவற்றினைக் கண்டு, தமதெனக் குழம்பினர்;
    • முன்பின் அறியாத அந்த செல்வந்தர்களைப் பின்தொடர்ந்துத் திரிந்தனர்;

    • என்னையும் இங்ஙனம் செய்யாதேயென, ஓராயிரம் விண்ணப்பங்கள் செய்யும் என்மீது, கருணையுடன் மன்னித்துக் காப்பதற்கு,

  • ஏனோ உனதுள்ளம் உருகாது?

    • இத்தனை அசட்டை செய்யாதே;
    • நம்பினேன்;
    • தியாகராசனின் இதயத்துறைவோனென அளவின்றி வேண்டினேனய்யா;

    • நீயே புகலென, இரவு பகலாக, ஆயிரமாயிரம் முறைகளிட்ட, என்மீது

  • ஏனோ உனதுள்ளம் உருகாது?
  • என்ன தவறோ அறியேனே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3கோ/ நீ/ மனஸு/ கரக3து3/ ஏமி/ நேரமோ/ தெலிய/
ஏனோ/ உனது/ உள்ளம்/ உருகாது/ என்ன/ தவறோ/ அறியேனே/


அனுபல்லவி
எந்து3/ ஜூசின கானி/ த31ரத2/
எங்கு/ நோக்கினாலும்/ தசரதன்/

நந்த3னுகா3/ பா4விஞ்சின/ நாபை/ (எ)
மைந்தனாக/ எண்ணிக்கொண்ட/ என்மீது/ ஏனோ...


சரணம்
சரணம் 1
ஸுமுகு2லைன/-ஈ/ லோகுலு/ நன்னு/-அஸூயலசே/ ஜூசெத3ரு/
நல்லோரான/ இந்த/ மக்கள்/ என்னை/ எரிச்சலுடன்/ நோக்கினர்/

விமுகு2லை/-எந்தடி வாடு3/-அனி/ ப3ஹு/ வித4முல/ தூ3ரெத3ரு/
வேண்டாதவராகி/ 'எப்படிப்பட்டவன்'/ என/ பல/ விதமாக/ தூற்றினர்/

ஸமுக2முனகு/ யோக்3யுடு3/ காடு3/-அனி/ மரி/ ஜூட3கனு/-எஞ்செத3ரு/
சமூகத்திற்கு/ உகந்தவன்/ அல்லன்/ என/ திரும்ப/ காணலாகாதென/ எண்ணினர்/

3மகமுனனு/ ரக்ஷிஞ்செடி3 வாரலு/ காரு/-அனி/ நின்னே/ கோரின/ நாபை/ (எ)
(இவர்கள்) உறுதியாக/ காப்பாற்றுவோர்/ அல்லர்/ என்று/ உன்னையே/ கோரிய/ என்மீது/ ஏனோ...


சரணம் 2
4ன/ தனய/ களத்ர/-ஆது3ல/ ஜூசி/ தமதி3/-அனி/ ப்4ரமஸெத3ரு/
செல்வம்/ மக்கள்/ மனைவி/ ஆகியவற்றினை/ கண்டு/ தமது/ என/ குழம்பினர்/

வெனுக/ முந்து3/ தெலியனி/-ஆ/ த4னிகுல/ வெம்ப3டி3/ திரிகெ33ரு/
முன்/ பின்/ அறியாத/ அந்த/ செல்வந்தர்களை/ பின்தொடர்ந்து/ திரிந்தனர்/

இன/ குல/ ஜல நிதி4/ ஸோம/ ராம/ நன்னு/-இடுல/ ஸேயகு/-அனி/ வெய்யாரு/
பரிதி/ குல/ கடலின்/ மதியே/ இராமா/ என்னையும்/ இங்ஙனம்/ செய்யாதே/ என/ ஓராயிரம்/

மனவுலு/-அடு3கு3/ நாபைனி/ கருணதோ/ மன்னிஞ்சி/ காபாட3னு/ ராம/ (எ)
விண்ணப்பங்கள்/ செய்யும்/ என்மீது/ கருணையுடன்/ மன்னித்து/ காப்பதற்கு/ இராமா/ ஏனோ...


சரணம் 3
ராக3/ ரஹித/ ஸ்ரீ ராம/ இந்த/ பராகு/ ஸேயக/
பற்று/ அற்றோனே/ ஸ்ரீ ராமா/ இத்தனை/ அசட்டை/ செய்யாதே/

1ரணு/-ஆக3த/ வத்ஸல/ நம்மிதி/ தாரக/ நாம/ பராத்பர/
சரண்/ அடைந்தோரிடம்/ கனிவுடையோனே/ நம்பினேன்/ தாரக/ நாமத்தோனே/ பராபரனே/

த்யாக3ராஜ/ ஹ்ரு23ய/ ஸத3னுடு3/-அனி/ அத்யந்தமு/ வேடி3திரா/
தியாகராசனின்/ இதயத்து/ உறைவோன்/ என/ அளவின்றி/ வேண்டினேனய்யா/

நீவே/ க3தி/-அனுசு/ ரேயு/ பக3லு/ வெய்யி/ வேல/ மொரலு/ பெட்டின/ நாபை/ (எ)
நீயே/ புகல்/ என/ இரவு/ பகலாக/ ஆயிரம்/ ஆயிரம்/ முறைகள்/ இட்ட/ என்மீது/ ஏனோ...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஸமுக2முனகு - சம்ஸ்கிருதத்திலிருந்து வந்த இந்த தெலுங்கு சொல்லுக்கு, 'முன்னிலை' என்று பொருளாகும். அதே தற்சமத் தமிழ்ச் சொல்லுக்கு, 'சமூகம்' (society, assembly) என்று பொருளுண்டு. பிற்கூறிய பொருள் இவ்விடத்தில் அதிகம் பொருந்துமாதலால், அங்ஙனமே ஏற்கப்பட்டது.

2 - நன்னிடுல ஸேயக - என்னை இங்ஙனம் செய்யதே - இதே சரணத்தில், முன் இரு அடிகளில் கூறப்பட்டவற்றினைக் குறிக்கும்.

தசரதன் மைந்தன் - ராமன்
தாரக நாமம் - பிறவிக் கடலைக் கடத்துவிப்பது 'ராம' எனும் நாமம்

Top


Updated on 24 May 2010

No comments: