அம்ம ராவம்ம துளஸம்ம
நனு பாலிம்பவம்ம
ஸததமு பத3முலே நம்மினானம்ம
அனுபல்லவி
நெம்மதி3னி நீவிஹ பரம்முலொஸகு3து3வனுசு
கம்ம வில்துனி தண்ட்3ரி கலனைன பா3யட3ட (அ)
சரணம்
நீ ம்ரு2து3 தனுவுனு கனி நீ பரிமளமுனு கனி
நீ மஹத்வமுனு கனி நீரஜாக்ஷி
தாமரஸ த3ள நேத்ரு த்யாக3ராஜுனி மித்ரு
ப்ரேமதோ 1ஸி1ரமுனனு பெட்டுகொன்னாட3ட (அ)
பொருள் - சுருக்கம்
அம்மா, துளசம்மா! கமலக்கண்ணாளே!
- வாராயம்மா;
- என்னைக் காப்பாயம்மா;
- எவ்வமயமும் (உனது) திருவடிகளையே நம்பினேனம்மா
- நிம்மதியினை, நீ இம்மையிலும், மறுமையிலும் அருள்வாயென, மலர் வில்லோனின் தந்தை, கனவிலும் (உன்னைப்) பிரியானாம்;
- உனது மெல்லுடலினைக் கண்டு, உனது நறுமணத்தினைக் கண்டு, உனது மேன்மையினைக் கண்டு, தாமரை யிதழ்க்கண்ணன், தியாகராசனுக்கினியோன், பேரன்புடன், தலையில் (உன்னை) அணிந்துள்ளானாம்.
- நிம்மதியினை, நீ இம்மையிலும், மறுமையிலும் அருள்வாயென, மலர் வில்லோனின் தந்தை, கனவிலும் (உன்னைப்) பிரியானாம்;
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அம்ம/ ராவம்ம/ துளஸம்ம/
அம்மா/ வாராயம்மா/ துளசம்மா/
நனு/ பாலிம்பவம்ம/
என்னை/ காப்பாயம்மா/
ஸததமு/ பத3முலே/ நம்மினானு/-அம்ம/
எவ்வமயமும்/ (உனது) திருவடிகளையே/ நம்பினேன்/ அம்மா/
அனுபல்லவி
நெம்மதி3னி/ நீவு/-இஹ/ பரம்முலு/-ஒஸகு3து3வு/-அனுசு/
நிம்மதியினை/ நீ/ இம்மையிலும்/ மறுமையிலும்/ அருள்வாய்/ என/
கம்ம/ வில்துனி/ தண்ட்3ரி/ கலனைன/ பா3யடு3-அட/ (அ)
மலர்/ வில்லோனின்/ தந்தை/ கனவிலும்/ (உன்னைப்) பிரியானாம்/
சரணம்
நீ/ ம்ரு2து3/ தனுவுனு/ கனி/ நீ/ பரிமளமுனு/ கனி/
உனது/ மெல்லிய/ உடலினை/ கண்டு/ உனது/ நறுமணத்தினை/ கண்டு/
நீ/ மஹத்வமுனு/ கனி/ நீரஜ/-அக்ஷி/
உனது/ மேன்மையினை/ கண்டு/ கமல/ கண்ணாளே/
தாமரஸ/ த3ள/ நேத்ரு/ த்யாக3ராஜுனி/ மித்ரு/
தாமரை/ இதழ்/ கண்ணன்/ தியாகராசனுக்கு/ இனியோன்/
ப்ரேமதோ/ ஸி1ரமுனனு/ பெட்டுகொன்னாடு3-அட/ (அ)
பேரன்புடன்/ தலையில்/ (உன்னை) அணிந்துள்ளானாம்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - ஸி1ரமுனனு பெட்டுகொன்னாட3ட - தலையில் (உன்னை) அணிந்துள்ளானாம் - இது குறித்து துளசி உபாக்கியானம் (தேவி பாகவதம், 9-வது ஸ்கந்தம், 25-வது அத்தியாயம்) கூறவதாவது -
"விஷ்ணுவானவர், 'நீ எல்லோராலும் பூஜிக்கப்படுபவளாவாய், எல்லோராலும் தலையில் தரிக்கப்படுபவளாவாய், என்னுடைய வந்தனைக்கும், மரியாதைக்கும் உரியவளாவாய்' என்று அவளுக்கு (துளசிக்கு) வரமளித்தார்."
(மொழிபெயர்ப்பு - 'அண்ணா')
துளசி கதைச் சுருக்கம்
Top
விளக்கம்
மலர் வில்லோன் - மன்மதன்
மலர் வில்லோனின் தந்தை - அரி
தாமரையிதழ்க்கண்ணன் - தியாகராசனுக்கினியோன் - அரி
Top
Updated on 22 May 2010
No comments:
Post a Comment