Saturday, May 22, 2010

தியாகராஜ கிருதி - ஈஸ1 பாஹி - ராகம் கல்யாணி - Isa Pahi - Raga Kalyani

பல்லவி
ஈஸ1 பாஹி மாம் ஜக3(தீ31)

அனுபல்லவி
ஆஸ1ர க3ண மத3 ஹரண
பி3லேஸ1ய பூ41ஸப்த ரு2(ஷீஸ1)

சரணம்
சரணம் 1
2ஸ்ரீ நாத2 கரார்சித 3தொ3ரகுனால்புலகீ3ர்ஸ1ன-
மே நாடி தப: ப2லமோ நீ நாமமு தொ3ரகே
ஸ்ரீ நாரத3 கா3ன ப்ரிய தீ3னார்தி நிவாரண
பரமானந்தா3ர்ணவ 4தே3வயானா-ப ஜனக ஸப்த ரு2(ஷீஸ1)


சரணம் 2
வ்யாஸார்சித பாலித நிஜ தா3ஸ பூ4 லோக
கைலாஸம்ப3னு பல்குலு நிஜமே ஸாரெகு கண்டி
நீ ஸாடி எவரய்ய நீ ஸாக்ஷாத்காரமுன
வேஸடலெல்ல தொலகெ3 நேடே3 ஜன்மமு ஸாப2ல்யமு (ஈஸ1)


சரணம் 3
ஸாமாதி3 நிக3ம ஸஞ்சார ஸோமாக்3னி தரணி லோசன
5காமாதி32ண்ட3ன ஸுத்ராமார்சித பாத3
6ஹேமாசல சாப நினு வினா மரெவரு முனி மனோ-
தா4ம த்யாக3ராஜ ப்ரேமாவதார ஜக3(தீ31)


பொருள் - சுருக்கம்
  • பல்லுலகிற்கும் ஈசனே!
  • அரக்கர்களின் செருக்கினையழித்தோனே! புற்றிலுறைவோனை யணிவோனே! ஏழிருடிகளுக்கு ஈசனே!
  • மாமணாளன் கைகளினால் தொழப் பெற்றோனே! நாரதரின் இசை விரும்புவோனே! எளியோர் துயர் தீர்ப்போனே! பரமானந்தக் கடலே! தேவயானை மணாளன் தந்தையே!
  • வியாசரால் தொழப் பெற்றோனே! உண்மையான தொண்டர்களைப் பேணுவோனே!
  • சாமன் முதலான மறைகளிலுறைவோனே! மதி, நெருப்பு, பரிதி (முக்)கண்களோனே! காமாதிகளை அழிப்போனே! இந்திரன் தொழும் திருவடியோனே! மேருமலை வில்லோனே! முனிவர் மனத்துறைவோனே! தியாகராசனின் காதலாக அவதரித்தோனே!

  • என்னைக் காப்பாய்

    • கிடைக்குமா, அற்பருக்கு இந்த தரிசனம்?
    • என்றைய தவத்தின் பயனோ, உனது நாமம் கிடைத்தது.

    • பூலோகக் கயிலாயமெனும் வழக்கு உண்மையே;
    • மிக்கு கண்டேன்;
    • உனக்கிணை யாரய்யா?
    • உனது புலப்பாட்டினால் துயரங்களெல்லாம் ஒழிந்தன;
    • இன்றே (எனது) பிறவி உய்ந்தது.

    • உன்னையன்றி வேறு யாரே?


  • என்னைக் காப்பாய்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஈஸ1/ பாஹி/ மாம்/ ஜக3த்/-(ஈஸ1)
ஈசனே/ காப்பாய்/ என்னை/ பல்லுலகிற்கும்/


அனுபல்லவி
ஆஸ1ர க3ண/ மத3/ ஹரண/
அரக்கர்களின்/ செருக்கினை/ அழித்தோனே/

பி3லேஸ1ய/ பூ4ஷ/ ஸப்த/ ரு2ஷி/-(ஈஸ1)
புற்றிலுறைவோனை/ அணிவோனே/ ஏழு/ இருடிகளுக்கு/ ஈசனே...


சரணம்
சரணம் 1
ஸ்ரீ/ நாத2/ கர/-அர்சித/ தொ3ரகுனா/-அல்புலகி/-ஈ/ த3ர்ஸ1னமு/-
மா/ மணாளன்/ கைகளினால்/ தொழப் பெற்றோனே/ கிடைக்குமா/ அற்பருக்கு/ இந்த/ தரிசனம்/

ஏ நாடி/ தப:/ ப2லமோ/ நீ/ நாமமு/ தொ3ரகே/
என்றைய/ தவத்தின்/ பயனோ/ உனது/ நாமம்/ கிடைத்தது/

ஸ்ரீ நாரத3/ கா3ன/ ப்ரிய/ தீ3ன/-ஆர்தி/ நிவாரண/
ஸ்ரீ நாரதரின்/ இசை/ விரும்புவோனே/ எளியோர்/ துயர்/ தீர்ப்போனே/

பரம/-ஆனந்த3/-அர்ணவ/ தே3வயானா/-ப/ ஜனக/ ஸப்த/ ரு2ஷி/-(ஈஸ1)
பரம/ ஆனந்த/ கடலே/ தேவயானை/ மணாளன்/ தந்தையே/ ஏழு/ இருடிகளுக்கு/ ஈசனே...


சரணம் 2
வ்யாஸ/-அர்சித/ பாலித/ நிஜ/ தா3ஸ/ பூ4/ லோக/
வியாசரால்/ தொழப் பெற்றோனே/ பேணுவோனே/ உண்மையான/ தொண்டர்களை/ பூ/ லோக/

கைலாஸம்பு3/-அனு/ பல்குலு/ நிஜமே/ ஸாரெகு/ கண்டி/
கயிலாயம்/ எனும்/ வழக்கு/ உண்மையே/ மிக்கு/ கண்டேன்/

நீ/ ஸாடி/ எவரு/-அய்ய/ நீ/ ஸாக்ஷாத்காரமுன/
உனக்கு/ இணை/ யார்/ அய்யா/ உனது/ புலப்பாட்டினால்/

வேஸடலு/-எல்ல/ தொலகெ3/ நேடே3/ ஜன்மமு/ ஸாப2ல்யமு/ (ஈஸ1)
துயரங்கள்/ எல்லாம்/ ஒழிந்தன/ இன்றே/ (எனது) பிறவி/ உய்ந்தது/


சரணம் 3
ஸாம/-ஆதி3/ நிக3ம/ ஸஞ்சார/ ஸோம/-அக்3னி/ தரணி/ லோசன/
சாமன்/ முதலான/ மறைகளில்/ உறைவோனே/ மதி/ நெருப்பு/ பரிதி/ (முக்)கண்களோனே/

காம/-ஆதி3/ க2ண்ட3ன/ ஸுத்ராம/-அர்சித/ பாத3/
காமம்/ ஆதிகளை (முதலானவற்றை)/ அழிப்போனே/ இந்திரன்/ தொழும்/ திருவடியோனே/

ஹேம/-அசல/ சாப/ நினு/ வினா/ மரி/-எவரு/ முனி/ மனோ/
மேரு (பொன்)/ மலை/ வில்லோனே/ உன்னை/ அன்றி/ வேறு/ யாரே/ முனிவர்/ மனத்து/

தா4ம/ த்யாக3ராஜ/ ப்ரேம/-அவதார/ ஜக3த்/-(ஈஸ1)
உறைவோனே/ தியாகராசனின்/ காதலாக/ அவதரித்தோனே/ பல்லுலகிற்கும்/ ஈசனே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - தொ3ரகுனால்புலகீ - தொ3ரிகினால்புலகீ - தொ3ரகெனால்புலகீ : எல்லா புத்தகங்களிலும், 'தொ3ரகுனால்புலகீ' (கிடைக்குமா அற்பற்களுக்கு இந்த) என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே, இங்கும் ஏற்கப்பட்டது. 'தொ3ரிகினால்புலகீ' என்பது தவறான தெலுங்கு.

4 - தே3வயானா-ப ஜனக - தே3வயானாப4 ஜனக - தே3வயனா-ப ஜனக.

Top

மேற்கோள்கள்
1 - ஸப்த ரு2ஷி ஈஸ1 - ஏழிருடிகளுக்கு ஈசன் - லால்குடி என்று வழங்கும் திருத்தவத்துறை சிவனின் பெயர். லால்குடி கோயில்

ஏழு இருடிகள். ஏழு இருடிகள் யார் யார் என, புராணங்களில் பல விதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது - ஒரு புராணத்தில் - வசிட்டர், காசியபர், அத்ரி, ஜமதக்கினி, கௌதமர், விசுவாமித்திரர் மற்றும் பரத்துவாஜர் என்று கொடுக்கப்பட்டுள்ளது. வானத்தில், துருவ தாரையினைச் சுற்றும், 'Ursa Major' எனப்படும் தாரை மண்டலத்திற்கும் 'ஸப்த ரிஷி' (ஏழு இருடிகள்) மண்டலம் என்று பெயர்.

Top

2 - ஸ்ரீ நாத2 கரார்சித - மாமணாளன் கைகளால் தொழப்பெற்ற - தமிழ் நாட்டில், காஞ்சீபுரம் அருகில் உள்ள, 'திருமாற்பேறு' எனப்படும் 'திருமால்பூர்' என்ற தலத்திலும், மயிலாடுதுறை அருகில் உள்ள, 'திருவீழிமிழலை' என்ற தலத்திலும், மால், பூஜை நிறைவு செய்வதற்காக, தனது ஒரு கண்ணினை மலராக அர்ப்பணித்து, அதனால், ஆழி (சக்கிராயுதம்) பெற்றதாகத் தல வரலாறு கூறும். திருவீழிமிழலை கோயில்

5 - காமாதி3 - காமாதிகள் - காமம் முதலான உட்பகைவர் அறுவர்.

Top

6 - ஹேமாசல சாப - மேரு (பொன்) மலை வில்லோன். சிவன், மேரு மலையினை, தனது வில்லாகக் கொண்டுள்ளான் என, புராணங்கள் கூறும். ஆதி சங்கரர் இயற்றிய, 'சிவானந்த லஹரி'யில் (27-வது செய்யுள்), 'கரஸ்தே2 ஹேமாத்3ரௌ' (மேரு மலையினை கரங்களில் வில்லாக ஏந்துவோன்) என்று கூறப்பட்டுள்ளது. சிவ மஹிம்நா தோத்திரத்திலும் (18), அங்ஙனமே கூறப்பட்டுள்ளது.

தண்டுவடம், 'மேரு த3ண்ட3' (மேருவடம்) என்று குண்டலினி யோகத்தினில் கூறப்படும். ஸ்வாமி சிவானந்தாவின் குண்டலினி யோகம் e-book நோக்கவும்.

குண்டலினியினைப் பற்றி மேலும் விவரங்கள்

Top

விளக்கம்
புற்றிலுறைவோன் - அரவு - சேடன்
தேவயானை மணாளன் - முருகன்
பூலோகக் கயிலாயமெனும் வழக்கு - திருத்தவத்துறையினைக் குறிக்கும்
புலப்பாடு - புலன்களால் உணரப்படுதல்
உய்தல் - ஈடேறுதல்
சாமன் - சாம வேதம்

Top


Updated on 23 May 2010

No comments: