Thursday, May 20, 2010

தியாகராஜ கிருதி - தன மீத3னே - ராகம் பூ4ஷாவளி - Tana Midane - Raga Bhushavali

பல்லவி
தன மீத3னே 1செப்புகோவலெ
கா3கனு நின்னாட3 பனி லேது3ரா

அனுபல்லவி
சனுவுன கொந்த 2பலிகெத3வு
ஈஸுன கொந்த 2பலிகெத3வு நேரமெல்ல (த)

சரணம்
ஒக வேள நின்னு ப்ரேம மீர 3மதி3-
நுஞ்சி
மஞ்சி பூல பூஜிம்புசு-
நொக வேள கோபகி3ஞ்சி நின்னு தூ3ரு-
சுண்டி கானி ராம த்யாக3ராஜ நுத (த)


பொருள் - சுருக்கம்
இராமா! தியாகாராசனால் போற்றப் பெற்றோனே!

  • தன்மீதே சொல்லிக்கொள்ள வேண்டுமேயன்றி,
  • உன்னைக் குறை சொல்லத் தேவையில்லையய்யா

    • அன்புடன் சில கூறினாய்;
    • வெறுப்புடன் சில கூறினாய்;

    • ஒரு வேளை, உன்னை, காதல் மீர, உள்ளத்தினில் இருத்தி, நன் மலர்களினால் வழிபட்டுக்கொண்டும்,
    • ஒரு வேளை, சினந்துகொண்டு, உன்னைத் தூற்றியுமிருந்தேன்;


  • எனவே, குற்றமெல்லாம் தன்மீதே சொல்லிக்கொள்ள வேண்டுமேயன்றி,
  • உன்னைக் குறை சொல்லத் தேவையில்லையய்யா



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தன/ மீத3னே/ செப்புகோவலெ/
தன்/ மீதே/ சொல்லிக்கொள்ள/ வேண்டுமே/

கா3கனு/ நின்னு/-ஆட3/ பனி/ லேது3ரா/
அன்றி/ உன்னை/ குறை சொல்ல/ தேவை/ இல்லையய்யா/


அனுபல்லவி
சனுவுன/ கொந்த/ பலிகெத3வு/
அன்புடன்/ சில/ கூறினாய்/

ஈஸுன/ கொந்த/ பலிகெத3வு/ நேரமு/-எல்ல/ (த)
வெறுப்புடன்/ சில/ கூறினாய்/ குற்றம்/ எல்லாம்/ தன்மீதே...


சரணம்
ஒக/ வேள/ நின்னு/ ப்ரேம/ மீர/ மதி3னி-/
ஒரு/ வேளை/ உன்னை/ காதல்/ மீர/ உள்ளத்தினில்/

உஞ்சி/ மஞ்சி/ பூல/ பூஜிம்புசுனு/
இருத்தி/ நன்/ மலர்களினால்/ வழிபட்டுக்கொண்டும்/

ஒக/ வேள/ கோபகி3ஞ்சி/ நின்னு/ தூ3ருசு/
ஒரு/ வேளை/ சினந்துகொண்டு/ உன்னை/ தூற்றியும்/

உண்டி/ கானி/ ராம/ த்யாக3ராஜ/ நுத/ (த)
இருந்தேன்/ எனவே/ இராமா/ தியாகாராசனால்/ போற்றப் பெற்றோனே/ தன்மீதே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - செப்புகோவலெ - செப்புகொனவலெ.

2 - பலிகெத3வு - பல்கேவு.

3 - மதி3நுஞ்சி - மதி3நெஞ்சி : இவ்விடத்தில் 'மதி3நுஞ்சி' என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
தன்மீதே சொல்லிக்கொள்ள வேண்டும் - தன்னைக் குறை சொல்லவேண்டும் என
வெறுப்புடன் - 'கோபத்துடன்' என்றும் கொள்ளலாம்

Top


Updated on 21 May 2010

No comments: