Monday, May 17, 2010

தியாகராஜ கிருதி - கண்ட ஜூடு3மீ - ராகம் வாசஸ்பதி - Kanta JudumI - Raga Vachaspati

பல்லவி
கண்ட 1ஜூடு3மீ ஒக பாரி 2க்ரே (கண்ட)

அனுபல்லவி
3ண்டுடை3 வெலயு பா3கு3 கானி தப்பு
3தண்டலெல்ல மானுகொன்ன நன்னு க்ரே (கண்ட)

சரணம்
4அல நாடு3 ஸௌமித்ரி பாத3 ஸேவ
செலரேகி3 சேயு வேள ஸீததோ
பல்கி ஜூசினந்த புலகாங்கிதுடை3
பரகி3னயடு த்யாக3ராஜுனி க்ரே (கண்ட)


பொருள் - சுருக்கம்
  • கடைக்கண்ணால் பாரேன், ஒரு முறை

    • (உனக்கு) சேவகனாய் விளங்கும் சிறப்பன்றி, தப்புத் தண்டாவெல்லாம் தவிர்த்துவிட்ட என்னை, கடைக்கண்ணால் பாரேன், ஒரு முறை
    • அந்த நாள், இலக்குவன், திருவடி சேவை, ஆர்வத்துடன் செய்யும் வேளையில், சீதையிடம் (புகழ்ந்து) பேசி, (அவனைப்) பார்த்தவுடன், புல்லரிப்படைந்து (அவன்) ஒளிர்ந்தது போலும்,

  • தியாகராசனைக் கடைக்கண்ணால் பாரேன், ஒரு முறை



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கண்ட/ ஜூடு3மீ/ ஒக/ பாரி/ க்ரே/ (கண்ட)
கண்ணால்/ பாரேன்/ ஒரு/ முறை/ கடை/ கண்ணால்...


அனுபல்லவி
3ண்டுடை3/ வெலயு/ பா3கு3/ கானி/ தப்பு/
(உனக்கு) சேவகனாய்/ விளங்கும்/ சிறப்பு/ அன்றி/ தப்பு/

தண்டலு/-எல்ல/ மானுகொன்ன/ நன்னு/ க்ரே/ (கண்ட)
தண்டா/ எல்லாம்/ தவிர்த்துவிட்ட/ என்னை/ கடை/ கண்ணால்...


சரணம்
அல/ நாடு3/ ஸௌமித்ரி/ பாத3/ ஸேவ/
அந்த/ நாள்/ இலக்குவன்/ திருவடி/ சேவை/

செலரேகி3/ சேயு/ வேள/ ஸீததோ/
ஆர்வத்துடன்/ செய்யும்/ வேளையில்/ சீதையிடம்/

பல்கி/ ஜூசின/-அந்த/ புலக-அங்கிதுடை3/
(புகழ்ந்து) பேசி/ (அவனைப்) பார்த்த/ உடன்/ புல்லரிப்படைந்து/

பரகி3ன/-அடு/ த்யாக3ராஜுனி/ க்ரே/ (கண்ட)
(அவன்) ஒளிர்ந்தது/ போலும்/ தியாகராசனை/ கடை/ கண்ணால்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'லதாங்கி' என்று கொடுக்கப்பட்டுள்து.

1 - ஜூடு3மீ - ஜூடு3மி : 'ஜூடு3மீ' என்பது தான் அதிகம் பொருந்தும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.

2 - க்ரே (கண்ட) - க்ரீ கண்ட : 'க்ரே கண்ட' என்பது 'கடைக்கண்ணினால்' என்றும், 'க்ரீ கண்ட' என்பது 'தாழ்க்கண்ணினால்' என்றும் பொருள் படும். 'கடைக்கண்', கருணையினையும், 'தாழ்க்கண்' வெறுப்பினையும் குறிப்பதாகும். எனவே, இவ்விடத்தில் 'க்ரே கண்ட' - கடைக் கண்ணினால் - என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்
4 - அல நாடு3 ஸௌமித்ரி - அந்த நாள் இலக்குவன் - இது வால்மீகி ராமாயணத்தில், ஆரண்ய காண்டத்தினில் (அத்தியாயம் 15, செய்யுட்கள் 28,29) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியினைக் குறிப்பதாகும். ராமன், சீதை, இலக்குவனுடன், பஞ்சவடியினை அடைந்தபின், அங்கு வசிப்பதற்காக, ஒரு பர்ணசாலை - இலைக்குடில் (ஓலைக்குடில்) அமைக்கும்படி, இலக்குவனிடம் சொன்னான். அதன்படி, மிக நேர்த்தியானதோர் குடிலை இலக்குவன் அமைக்க, அவனுடைய திறமையினையும், ஈடுபாட்டினையும் வியந்து, ராமன் சீதையிடம் இலக்குவனைப் பற்றி புகழ்ந்துரைத்ததுடன், அவனிடம் (இலக்குவனிடம்) இங்ஙனம் கூறினான் -

"மகிழ்வுற்றேன், நீ செய்த இந்த பெரும்பணியினைக் கண்டு;
அதற்காக, (இதோ) உன்னை நான் மார்புறத் தழுவிக்கொள்கின்றேன்;
இலக்குவா! என்னுடைய உணர்வுகளை அறிந்த, நன்றியறிதலுடைய, அறநெறி நிற்கும்
உன்னை மகனாகப் பெற்ற, தர்மாத்மாவான, நமது தந்தை இறந்துவிடவில்லை."
(எமது தேவைகளை கவனிக்க, உன்னுருவத்தில் உயிருடன் இருப்பதாக உணர்கின்றேன்)

Top

விளக்கம்
3 - தண்ட - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தெலுங்கு அகராதியின்படி, 'தண்டா' என்பதுதான் சரியான சொல்லாகும். 'தப்பு தண்ட' என்று ஒரே சொல்லாக அகராதியில் காணப்படவில்லை. 'தப்பு தண்டலு' என்பது பேச்சு வழக்கிலுள்ள சொல்லாக இருக்கலாம்.

தப்புத்தண்டா - குற்றம் குறைகள்

Top


Updated on 17 May 2010

No comments: