Sunday, May 16, 2010

தியாகராஜ கிருதி - தி3னமே ஸுதி3னமு - ராகம் லதாங்கி3 - Diname Sudinamu - Raga Latangi

பல்லவி
1தி3னமே ஸுதி3னமு ஈஸ்1வரி நன்னு 2க்ரு2ப ஜூட3

அனுபல்லவி
தீ3ன த3யாபரியனி ஜக3மந்து3 மொரலிட3
மரியொக தை3வமு ந்யாயமு தீர்சு (தி3)

சரணம்
4வ ஸாக3ரமு தீர்சி ப்3ரோசுடகிதி3
மஞ்சி ஸமயமு காவவே தல்லி
3ஸ்ரீ லதாங்கி3யனி ஸததமு நினு கோரி
பூஜ ஜேஸின த்யாக3ராஜுனி ப்3ரோசு (தி3)


பொருள் - சுருக்கம்
  • இன்றே நன்னாள், எனக்குக் கருணை காட்ட;
    • தீனரிடம் மிக்கு கருணையுடையவளென, உலகினில் முறையிட, மற்றொரு தெய்வம் நீதி வழங்குமோ?
    • பிறவிக் கடலினை ஒழித்து, காப்பதற்கு இஃதே நல்ல சமயமாகும்;
    • காப்பாயம்மா;

  • 'ஸ்ரீ லதாங்கி'யென எவ்வமயமும் உன்னைக் கோரி வழிபட்ட தியாகராசனைக் காக்கும் அன்றே நன்னாள்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தி3னமே/ ஸுதி3னமு/ ஈஸ்1வரி/ நன்னு/ க்ரு2ப/ ஜூட3/
இன்றே/ நன்னாள்/ ஈசுவரியே/ எனக்கு/ கருணை/ காட்ட/


அனுபல்லவி
தீ3ன/ த3யாபரி/-அனி/ ஜக3மந்து3/ மொரலு/-இட3/
தீனரிடம்/ மிக்கு கருணையுடையவள்/ என/ உலகினில்/ முறை/ இட/

மரி/-ஒக/ தை3வமு/ ந்யாயமு/ தீர்சு/ (தி3)
மற்று/ ஒரு/ தெய்வம்/ நீதி/ வழங்குமோ/


சரணம்
4வ/ ஸாக3ரமு/ தீர்சி/ ப்3ரோசுடகு/-இதி3/
பிறவி/ கடலினை/ ஒழித்து/ காப்பதற்கு/ இஃதே/

மஞ்சி/ ஸமயமு/ காவவே/ தல்லி/
நல்ல/ சமயமாகும்/ காப்பாயம்மா/ தாயே/

ஸ்ரீ லதாங்கி3/-அனி/ ஸததமு/ நினு/ கோரி/
'ஸ்ரீ லதாங்கி'/ என/ எவ்வமயமும்/ உன்னை/ கோரி/

பூஜ ஜேஸின/ த்யாக3ராஜுனி/ ப்3ரோசு/ (தி3)
வழிபட்ட/ தியாகராசனை/ காக்கும்/ அன்றே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - தி3னமே - இச்சொல், 'நாளே' என்று பொருள்படும். பல்லவியில், இச்சொல், 'இன்றே' என்றும், சரணத்தினை இணைக்கையில், 'அன்றே' என்றும் பொருள் கொள்ளப்பட்டது.

2 - க்ரு2ப ஜூட3 - கருணை காட்ட - பல்லவியின் பொருளினை நிறைவு செய்வதற்காக, 'தி3னமே' என்ற சொல்லுக்கு 'இன்றே' என பொருள் கொள்ளப்பட்டது. ஆனால், இவ்விடத்தில் 'கருணை காட்டும்' (க்ரு2ப ஜூடு3)' என்றிருந்தால்தான் பொருந்தும்.

3 - ஸ்ரீ லதாங்கி3 - இது எந்த தேவியைக் குறிக்கின்றதெனத் தெரியவில்லை.

Top

அனுபல்லவியின் சொற்களின் அமைப்பு, அதனை பல்லவியுடன் இணைக்கவோ, தனிப்பட பொருள் கொள்ளவோ இயலாதவகையில் உள்ளது. 'தீர்சு' (வழங்கும்) என்பது 'தீர்சுனா' (வழங்குமா) என்றோ, அல்லது 'தை3வமு' (தெய்வம்) என்பது 'தை3வமா' (தெய்வமா) என்றோ இருந்தால்தான், அனுபல்லவிக்கு சரிவரப் பொருள் கொள்ள இயலும். ஆயினும், இவ்விடத்தில் 'தீர்சுனா' (வழங்குமா) என்ற பொருள் கொள்ளப்பட்டது.

இந்த கிருதி திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில் மட்டுமே காணப்படுகின்றது. அந்தப் புத்தகத்திலும், இந்த கிருதி தியாகராஜர் இயற்றினாரா என ஐயமிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கிருதியின் சொற்கள் - 'ஜக3மந்து3 மொரலிட3', 'ந்யாயமு தீர்சு', 'ப4வ ஸாக3ரமு தீர்சி' - ஆகியவற்றினை நோக்குகையில், இந்த கிருதி தியாகராஜர் இயற்றினாரா என்று ஐயம் ஏற்படுவது சரியே.

Top


Updated on 16 May 2010

No comments: