நத ஜன பரிபால க4ன 1நன்னு ப்3ரோவவே
அனுபல்லவி
2ஸ்1ருதி மொரலிட3 லேதா3 3பூ4-ஸூத்ர தா4ரி நீவே கதா3 (ந)
சரணம்
4ஜித மனோரது2லகு மௌன யதுல 5தபோ நியதுலகை
ஹிதமு ஸேய 6தனகஹிதபு வ்ராதலனு ஜெந்தி3ன
ஸ்1ரித பத3ம்பு3 ஜீவனாம்ரு2த ப2லம்பு3 நீவனி நா
7ஹிதமு 8பூஜ விட3னாடி3ன 9அதடே3 த்யாக3ராஜ நுத (ந)
பொருள் - சுருக்கம்
பணிந்தோரைப் பேணும் பெருந்தகையே!
- என்னைக் காப்பாயய்யா
- மறைகள் முறையிடவில்லையா?
- உலகப் பாவைக்கூத்தன் நீயேயன்றோ?
- இச்சை வென்றோருக்கும், மௌன இருடிகள், தவமியற்றுவோருக்காகவும் நன்மை செய்ய,
- தனக்குத் துயரத் தலையெழுத்தினை அடைந்த, சார்ந்தோரின் திருவடியும்,
- வாழ்க்கை அமிழ்தப் பயனும் நீயென,
- இச்சை வென்றோருக்கும், மௌன இருடிகள், தவமியற்றுவோருக்காகவும் நன்மை செய்ய,
- எனது இனிய வழிபாட்டினையும் கைவிட்ட, அவனே, தியாகராசன் போற்றும் பணிந்தோரைப் பேணும் பெருந்தகை.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நத ஜன/ பரிபால/ க4ன/ நன்னு/ ப்3ரோவவே/
பணிந்தோரை/ பேணும்/ பெருந்தகையே/ என்னை/ காப்பாயய்யா/
அனுபல்லவி
ஸ்1ருதி/ மொரலு/-இட3 லேதா3/ பூ4/-ஸூத்ர தா4ரி/ நீவே/ கதா3/ (ந)
மறைகள்/ முறை/ இடவில்லையா/ உலக/ பாவைக்கூத்தன்/ நீயே/ அன்றோ/
சரணம்
ஜித/ மனோரது2லகு/ மௌன/ யதுல/ தபோ/ நியதுலகை/
வென்றோர்/ இச்சையினை/ மௌன/ இருடிகள்/ தவம்/ இயற்றுவோருக்காகவும்/
ஹிதமு/ ஸேய/ தனகு/-அஹிதபு/ வ்ராதலனு/ ஜெந்தி3ன/
நன்மை/ செய்ய/ தனக்கு/ துயர/ தலையெழுத்தினை/ அடைந்த/
ஸ்1ரித/ பத3ம்பு3/ ஜீவன/-அம்ரு2த/ ப2லம்பு3/ நீவு/-அனி/ நா/
சார்ந்தோரின்/ திருவடியும்/ வாழ்க்கை/ அமிழ்த/ பயனும்/ நீ/ என/ எனது/
ஹிதமு/ பூஜ/ விட3னாடி3ன/ அதடே3/ த்யாக3ராஜ/ நுத/ (ந)
இனிய/ வழிபாட்டினையும்/ கைவிட்ட/ அவனே/ தியாகராசன்/ போற்றும்/ பணிந்தோரை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நன்னு ப்3ரோவவே - நன்னு ப்3ரோவவே மா.
3 - பூ4-ஸூத்ர தா4ரி - ஸூத்ர தா4ரி.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - ஸ்1ருதி மொரலிட3 லேதா3 - மறைகள் முறை இடவில்லையா - இந்த வழக்கு சரியானதாகத் தோன்றவில்லை.
3 - பூ4-ஸூத்ர தா4ரி - உலகப் பாவைக்கூத்தன் - இந்த வழக்கு சரியானதாகத் தோன்றவில்லை
4 - ஜித மனோரது2லகு - இச்சை வென்றோருக்கும் - 'மனோரத2' என்ற சொல் இங்ஙனம் பயன்படுத்துதல் சரியானதாகத் தோன்றவில்லை
5 - தபோ நியதுல - தவமியற்றுவோர் - இந்த வழக்கு சரியானதாகத் தோன்றவில்லை.
6 - அஹிதபு வ்ராதலனு ஜெந்தி3ன - தனக்குத் துயரத் தலையெழுத்தினை அடைந்த - 'ஜெந்தின' என்ற வழக்கு இவ்விடத்தில் சரியானதாகத் தோன்றவில்லை
7 - ஹிதமு பூஜ - இனிய வழிபாட்டினை - 'ஹிதபு' என்றிருக்கவேண்டும் - 'ஹிதமு' இவ்விடத்தில் தவறாகும்.
Top
8 - பூஜ விட3னாடி3ன - வழிபாட்டினையும் கைவிட்ட - புத்தகங்களில் 'பூஜையினைக் கைவிடாத' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'விட3னாடி3ன' என்றுதான் புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு 'கைவிட்ட' என்று பொருளாகும்.
9 - அதடே3 - அவனே - கிருதி முழுவதும், முன்னிலையில் உள்ளது. 'அதடே' என்பது படர்க்கையாகும். இது முரண்பாடு.
ஒரு புத்தகத்தில், இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என்ற ஐயமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேறகூறியவற்றிலிருந்து, இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்படவில்லை என்று நம்ப இடமிருக்கின்றது.
Top
Updated on 06 May 2010
No comments:
Post a Comment