Sunday, May 2, 2010

தியாகராஜ கிருதி - வத்33னே வாரு - ராகம் ஷண்முக2 ப்ரிய - Vaddane Varu - Raga Shanmukha Priya

பல்லவி
1வத்33னே வாரு லேரு

அனுபல்லவி
அத்33ம்பு மோமுனு ஜூட3
நேனனயமங்க3லார்சிதே ஜூசி (வ)

சரணம்
2கோரிகலிலலோ தி3விலோ
கொஞ்செமைன லேனி நா மனஸு
3தா3ரி தெலியு தை3வமு நீவு ஸுமீ
த்யாக3ராஜ ஹ்ரு2த்3பூ4ஷண நினு வினா (வ)


பொருள் - சுருக்கம்
தியாகாராசனின் இதய அணிகலனே!

  • 'வேண்டாம்' என்போர் இலர்
  • கண்ணாடி போலும் (உனது) முகத்தினைக் காண நான் எவ்வமயமும் கதறினால், கண்டு 'வேண்டாம்' என்போர் இலர்

    • கோரிக்கைகள், இவ்வுலகிலோ, வானுலகிலோ, கொஞ்சமாகிலும் இல்லாத எனதுள்ளப் பாங்கினை யறியும் தெய்வம் நீ; இல்லையா?

  • உன்னையன்றி 'வேண்டாம்' என்போர் இலர்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வத்3து3/-அனே வாரு/ லேரு/
'வேண்டாம்'/ என்போர்/ இலர்/


அனுபல்லவி
அத்33ம்பு/ மோமுனு/ ஜூட3/
கண்ணாடி (போலும்)/ (உனது) முகத்தினை/ காண/

நேனு/-அனயமு/-அங்க3லார்சிதே/ ஜூசி/ (வ)
நான்/ எவ்வமயமும்/ கதறினால்/ கண்டு/ 'வேண்டாம்'...


சரணம்
கோரிகலு/-இலலோ/ தி3விலோ/
கோரிக்கைகள்/ இவ்வுலகிலோ/ வானுலகிலோ/

கொஞ்செமைன/ லேனி/ நா/ மனஸு/
கொஞ்சமாகிலும்/ இல்லாத/ எனது/ உள்ள/

தா3ரி/ தெலியு/ தை3வமு/ நீவு/ ஸுமீ/
பாங்கினை/ யறியும்/ தெய்வம்/ நீ/ இல்லையா/

த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-பூ4ஷண/ நினு/ வினா/ (வ)
தியாகாராசனின்/ இதய/ அணிகலனே/ உன்னை/ யன்றி/ 'வேண்டாம்'...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - தா3ரி தெலியு - தா3ரி தெலிய : இவ்விடத்தில், 'தா3ரி தெலியு' என்பதே மிக்குப் பொருந்தும்.

Top

மேற்கோள்கள்
2 - கோரிகலிலலோ தி3விலோ - கோரிக்கைகள், இவ்வுலகிலோ, வானுலகிலோ, கொஞ்சமாகிலும் இல்லாத - இது குறித்து, பாகவத புராணத்தில் (10-வது புத்தகம், 80-வது அத்தியாயம், செய்யுட்கள் 29, 30) கண்ணன், தன்னுடைய நண்பன் சுதாமாவுக்கு (குசேலர்) கூறியதனை நோக்கவும் -

"நீ இல்லற வாழ்க்கையினை நடத்திக்கொண்டிருந்தாலும், உனதுள்ளம், உலகப்பற்றின்றி யுள்ளதென்பதனை நான் அறிவேன்.
மெய்யறிவினை நீ அடைந்து, செல்வத்திற்கு இச்சையேதும் இன்றி உள்ளாயென்றும் அறிவேன்.

இவ்வுலகில், எனது மாயையினால் உண்டாகும், உலக ஆசைகளைத் துறந்தபின்னும்,
என்னைப் போன்று, உலகோருக்கு வழிகாட்டுதற்காக, தங்களுடைய கடமைகளை ஆற்றுவோர் மிக்கரிதே."

Top

விளக்கம்
1 - வத்33னே - 'வேண்டாம்' எனல் - அழும் குழந்தையை, தாய் 'வேண்டாம், அழாதே' எனத் தேற்றுதல்.

Top


Updated on 03 May 2010

No comments: