Tuesday, May 11, 2010

தியாகராஜ கிருதி - ப3ண்டு ரீதி - ராகம் ஹம்ஸ நாத3ம் - Bantu Riti - Raga Hamsa Nadam

பல்லவி
3ண்டு ரீதி கொலுவிய்யவய்ய ராம

அனுபல்லவி
1துண்ட விண்டி வானி மொத3லைன
2மதா3து3 3கொட்டி நேல கூல ஜேயு நிஜ (ப3)

சரணம்
4ரோமாஞ்சமனு4ன கஞ்சுகமு
4ராம ப4க்துட3னு முத்3ர பி3ள்ளயு
4ராம நாமமனு வர க2ட்33மிவி
ராஜில்லுனய்ய த்யாக3ராஜுனிகே (ப3)


பொருள் - சுருக்கம்
இராமா!

  • தியாகராசனுக்கு,(அரச) சேவகனாகச் சேவையருளுமய்யா,
  • இச்சை, செருக்கு ஆகியவற்றைப் புடைத்து, மண் கவ்வச் செய்யும் உண்மையான (அரச) சேவகனாகச் சேவையருளுமய்யா

    • மெய்ப் புல்லரிப்பெனும் கனமான கவசம்,
    • இராமனின் தொண்டனெனும் முத்திரை வில்லை,
    • இராம நாமமெனும் உயரிய வாள் -

  • இவை திகழுமய்யா (தியாகராசனின் மீது)



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3ண்டு ரீதி/ கொலுவு/-இய்யவய்ய/ ராம/
(அரச) சேவகனாக/ சேவை/ அருளுமய்யா/ இராமா/


அனுபல்லவி
துண்ட/ விண்டி வானி/ மொத3லைன/
கரும்பு/ வில்லோன் (காமன்)/ முதலான/

மத3/-ஆது3ல/ கொட்டி/ நேல/ கூல/ ஜேயு/ நிஜ/ (ப3)
செருக்கு/ ஆகியவற்றை/ புடைத்து/ மண்/ கவ்வ/ செய்யும்/ உண்மையான/ (அரச) சேவகனாக...


சரணம்
ரோமாஞ்சமு/-அனு/ க4ன/ கஞ்சுகமு/
மெய்ப் புல்லரிப்பு/ எனும்/ கனமான/ கவசம்/

ராம/ ப4க்துடு3/-அனு/ முத்3ர/ பி3ள்ளயு/
இராமனின்/ தொண்டன்/ எனும்/ முத்திரை/ வில்லை/

ராம/ நாமமு/-அனு/ வர/ க2ட்33மு/-இவி/
இராம/ நாமம்/ எனும்/ உயரிய/ வாள்/ - இவை/

ராஜில்லுனு/-அய்ய/ த்யாக3ராஜுனிகே/ (ப3)
திகழும்/ அய்யா/ தியாகராசனுக்கே/ (அரச) சேவகனாக...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - கொட்டி - பட்டி : இவ்விடத்தில், 'கொட்டி' என்பது மிக்கு பொருந்தும்.

4 - ரோமாஞ்சமனு, ராம ப4க்துட3னு, ராம நாமமனு - ரோமாஞ்சமனே, ராம ப4க்துட3னே, ராம நாமமனே.

Top

மேற்கோள்கள்
2 - மதா3து3 - செருக்கு ஆகியவை - உட்பகை அறுவர் - இச்சை, சினம், பேராசை, மோகம், செருக்கு, காழ்ப்பு

Top

விளக்கம்
1 - துண்ட விண்டி வானி மொத3லைன - 'துண்ட விலுகாடு3' என்றால் 'கரும்பு வில்லோன்' அதாவது 'காமன்' என்று பொருளாகும். உட்பகைவர் அறுவரில், முதலாவதாக வரும், 'காமம்' அதாவது 'இச்சை'யினை, தியாகராஜர் 'கரும்பு வில்லோன்' என்று குறிப்பிடுகின்றார். எனவே, இதற்கு 'இச்சை முதலான' என்று பொருள் கொள்ளவேண்டும்.

Top


Updated on 12 May 2010

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உயரிய சேவை , நன்றி

SANKARANARAYANAN said...

thanks . may The Lord Bless you

Unknown said...

I am looking for this quite a long time and thank Swamy Thryagarja for showing me this.