பாலிந்துவோ பாலிம்பவோ
பா3கை3ன பல்கு பல்கி நனு (பா)
அனுபல்லவி
ஏலாகு3 நின்னாடு3கொன்ன
நேரமெஞ்ச பனி லேது3 நா பைனி (பா)
சரணம்
1பரமார்த2மகு3 நிஜ 2மார்க3முனு
3வர தே3ஸி1குண்டா3னதீயகா3
4பரிபூர்ணமௌ ப4க்தி மார்க3மேயனி
பா4விஞ்சின த்யாக3ராஜுனி (பா)
பொருள் - சுருக்கம்
- பேணுவாயோ, பேண மாட்டாயோ, இனிய மொழி பேசி, என்னை?
- எங்ஙனம், உன்னைப் பழித்த குற்றங் காணத் தேவையில்லை, என் மீது;
- மெய்யறிவு உய்க்கும், உண்மையான நெறியினை, உயர் ஆசான் (நாரதர்) ஆணையிட்டதனால், முழுமையான பக்தி நெறியேயெனக் கருதிய
- தியாகராசனைப் பேணுவாயோ, பேண மாட்டாயோ, இனிய மொழி பேசி?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாலிந்துவோ/ பாலிம்பவோ/
பேணுவாயோ/ பேண மாட்டாயோ/
பா3கை3ன/ பல்கு/ பல்கி/ நனு/ (பா)
இனிய/ மொழி/ பேசி/ என்னை/
அனுபல்லவி
ஏலாகு3/ நின்னு/-ஆடு3கொன்ன/
எங்ஙனம்/ உன்னை/ பழித்த/
நேரமு/-எஞ்ச/ பனி/ லேது3/ நா/ பைனி/ (பா)
குற்றங்/ காண/ தேவை/ இல்லை/ என்/ மீது/
சரணம்
பரம-அர்த2மகு3/ நிஜ/ மார்க3முனு/
மெய்யறிவு உய்க்கும்/ உண்மையான/ நெறியினை/
வர/ தே3ஸி1குண்டு3/-ஆனதி/-ஈயகா3/
உயர்/ ஆசான் (நாரதர்)/ ஆணை/ இட்டதனால்/
பரிபூர்ணமௌ/ ப4க்தி/ மார்க3மே/-அனி/
முழுமையான/ பக்தி/ நெறியே/ என/
பா4விஞ்சின/ த்யாக3ராஜுனி/ (பா)
கருதிய/ தியாகராசனை/ பேணுவாயோ...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மார்க3முனு - மார்க3முன.
4 - பரிபூர்ணமௌ - பரிபூர்ணமகு3.
Top
மேற்கோள்கள்
1 - பரமார்த2மகு3 - 'பரமார்த2' என்ற சொல்லின் விளக்கம்.
Top
விளக்கம்
3 - வர தே3ஸி1குண்டு3 - உயர் ஆசான். தியாகராஜர், அந்த ஆசான் யார் என்று இங்கு கூறாவிட்டாலும், மற்ற சில கீர்த்தனைகளில், 'வர தே3ஸி1க' என்ற சொல்லினை, நாரதரென்று விளக்கியுள்ளார். எனவே, இவ்விடத்திலும், நாரதரையே குறிக்கும் என்று கருதுகின்றேன். தியாகராஜரின், 'நாரத கு3ரு ஸ்வாமி', 'இங்க த3ய' என்ற நாராயண கௌள ராக கீர்த்தனை மற்றும் 'நிஜமைதே' என்ற பை4ரவி ராக கீர்த்தனைகளை நோக்கவும்.
ஆணையிட்டதனால் - போதித்ததனால் என்றும் கொள்ளலாம்
Top
Updated on 13 May 2010
No comments:
Post a Comment