1வாசாமகோ3சரமே மனஸா
வர்ணிம்ப தரமே ராம மஹிம
அனுபல்லவி
ரே-சாரி 2மாரீசுனி பட3க3 கொட்டி
ரெண்டோ3 வானி ஸி1கி2கொஸகெ3னே (வா)
சரணம்
மானவதீ மதி3னெரிகி3
3சாமரமௌடகஸ்த்ரமுனேய கனி
மானம்பு3கை மெட3 தா3சகா3
மாத4வுண்டு3 கனி கரகி3 வேக3மே
தீ3னார்தி ப4ஞ்ஜனுடை3 ப்ராண
தா3னம்பொ3ஸக3 முனு சனின
4பா3ணம்பு3னடு செத3ர ஜேய லேதா3
கா3ன லோல த்யாக3ராஜ நுது மஹிம (வா)
பொருள் - சுருக்கம்
மனமே!
- சொல்லினுக்கு உட்படாததன்றோ!
- வருணிக்கத் தரமாமோ, இராமனின் மகிமை?
- இரவில் திரிவோன், மாரீசனை செம்மையாக அடித்து,
- இரண்டாமவன் (சுபாகுவை) நெருப்புக் களித்தானே!
- கற்பரசியின் உள்ளமறிந்து,
- சவுரியாவதற்கு அத்திரம் எய்யக் கண்டு,
- மானம் காப்பதற்கு தனது கழுத்தினை நீட்ட,
- மாதவன் கண்டு, உருகி, விரைவினில், எளியோர் துயர் தீர்ப்போனாகி,
- உயிர் பிச்சையளிப்பதற்கு, முன் சென்ற பாணத்தினை, ஆங்கே சிதறடிக்கவில்லையா?
- இரவில் திரிவோன், மாரீசனை செம்மையாக அடித்து,
- இசை விரும்பும், தியாகராசன் போற்றுவோனின் மகிமை சொல்லினுக்கு உட்படாததன்றோ!
- வருணிக்கத் தரமாமோ, இராமனின் மகிமை?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வாசாம்/-அகோ3சரமே/ மனஸா/
சொல்லினுக்கு/ உட்படாததன்றோ/ மனமே/
வர்ணிம்ப/ தரமே/ ராம/ மஹிம/
வருணிக்க/ தரமாமோ/ இராமனின்/ மகிமை/
அனுபல்லவி
ரே/-சாரி/ மாரீசுனி/ பட3க3/ கொட்டி/
இரவில்/ திரிவோன்/ மாரீசனை/ செம்மையாக/ அடித்து/
ரெண்டோ3 வானி/ ஸி1கி2கி/-ஒஸகெ3னே/ (வா)
இரண்டாமவன் (சுபாகுவை)/ நெருப்புக்கு/ அளித்தானே/
சரணம்
மானவதீ/ மதி3னி/-எரிகி3/
கற்பரசியின்/ உள்ளம்/ அறிந்து/
சாமரமு/-ஔடகு/-அஸ்த்ரமுனு/-ஏய/ கனி/
சவுரி/ ஆவதற்கு/ அத்திரம்/ எய்ய/ கண்டு/
மானம்பு3கை/ மெட3/ தா3சகா3/
மானம் காப்பதற்கு/ (தனது) கழுத்தினை/ நீட்ட/
மாத4வுண்டு3/ கனி/ கரகி3/ வேக3மே/
மாதவன்/ கண்டு/ உருகி/ விரைவினில்/
தீ3ன/-ஆர்தி/ ப4ஞ்ஜனுடை3/ ப்ராண/
எளியோர்/ துயர்/ தீர்ப்போனாகி/ உயிர்/
தா3னம்பு3/-ஒஸக3/ முனு/ சனின/
பிச்சை/ அளிப்பதற்கு/ முன்/ சென்ற/
பா3ணம்பு3னு/-அடு/ செத3ர ஜேய லேதா3/
பாணத்தினை/ ஆங்கே/ சிதறடிக்கவில்லையா/
கா3ன/ லோல/ த்யாக3ராஜ/ நுது/ மஹிம/ (வா)
இசை/ விரும்பும்/ தியாகராசன்/ போற்றுவோனின்/ மகிமை/ சொல்லினுக்கு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - வாசாமகோ3சரம் - சொல்லினுக்கு உட்படாதது - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்மையின் ஓர் நாமம் - 'மனோ வாசாமகோ3சரா' (415) - மனம், சொல்லினுக்கு உட்படாதவள்.
2 - மாரீசுனி - வால்மீகி ராமாயணத்தில் (பால காண்டம், 30-வது அத்தியாயம், செய்யுள் 18, 22), விசுவாமித்திரரின் வேள்வியினுக்கு இடைஞ்சல் விளைவித்த, மாரீசன், சுபாகுவை, இராமன் எங்ஙனம் அத்திரங்கள் எய்து, விரட்டினான்/கொன்றான் என்று கூறப்பட்டுள்ளது -
"மாரீசன், மனுவின் உயர் அத்திரத்தினால் செம்மையாக அடிக்கப்பட்டு,
நூறு யோசனை தூரம் (800 மைல்கள்) கடலில் எறியப்பட்டான்.
இராமன், அடுத்து, அக்கினி (நெருப்பு) அத்திரம் எய்ய,
சுபாகுவின் மார்பு பிளக்கப்பட்டு, அவன், புவியினில் இறந்து வீழ்ந்தான்."
Top
விளக்கம்
3 - சாமரமு - இந்த கீர்த்தனையில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி, வால்மீகி ராமாயணத்தில் உள்ளதாகத் தெரியவில்லை.
3 - சாமரமு - தமிழில் 'சவுரி' எனப்படும் 'சாமரம்', பனிபடர்ந்த இமயமலைப் பகுதிகளில் காணப்படும் 'யாக்' எனப்படும் பசுவினத்தின், வெள்ளி நிற வாலினால் தயாரிக்கப்படுவது. ஆனால், அந்த 'யாக்'கினைப் பற்றி இங்கு கூறிய (மயிரிழந்தால் உயிர் நீக்கும்) விவரம் ஏதும் இல்லை. மாறாக, தன்னுடைய மயிரிழந்தால், உயிர் வாழா, கவரி மானைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறும். திருக்குறளில் இதுபற்றிய செய்யுளாவது -
"மயிர் நீப்பின் வாழாக் கவரி மா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்" (969)
எனவே, இந்த கீர்த்தனையில் உள்ள நிகழ்ச்சி, கவரி மானைப் பற்றியதென நான் கருதுகின்றேன். ஆனால், கவரி மானும், மேற்கூறிய 'யாக்'கும் ஓன்றா எனத் தெரியவில்லை.
Top
4 - பா3ணம்பு3னடு செத3ர ஜேய லேதா3 - பாணத்தினை ஆங்கே சிதறடிக்கவில்லையா - இன்றைய, இலக்கினை நோக்கி, வழிநடத்தப்படும் ஆயுதங்கள் (guided missiles) போன்ற, இவ்வத்திரங்கள் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள பிற நிகழ்ச்சிகளாவன -
காக்கை யரக்கனைக் கொல்ல, இராமன் ஏவிய பிரமாத்திரம், அவனைக் கொல்லு முன்பே, இலக்கினை மாற்றி, அவனுடைய கண்களைப் பறிக்கச் செய்தது. (வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், 40-வது அத்தியாயம்)
இராமன், கடலின் மீது பாலம் அமைக்க, கடலரசனை வேண்டினான். ஆனால், கடலரசன் செவிமடுக்காததனால், கடலரசனைக் கொல்ல, இராமன் பிரமாத்திரத்தினை ஏவினான். அதனைக் கண்டு, கடலரசன் இராமனிடம் சரண் புகுந்து, தன்னைக் காக்குமாறு வேண்ட, இராமன், கடலரசனின் வேண்டுகோளுக்கிணங்கி, அவ்வத்திரத்தின் இலக்கினை மாற்றி, 'துருமகுல்ய' அல்லது 'மாரு காந்தார' எனப்படும், இன்றைய ராஜஸ்தான மாநிலப் பகுதியான, மார்வார், பிகானீரில் வாழும் பெரும் கொள்ளைக் காரர்களை அழிக்கச் செய்தான். (வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், 22-வது அத்தியாயம் நோக்கவும்.)
Top
பாரதப்போருக்குப் பின்னர், துரோணரின் மைந்தனான அஸ்வத்தாமா, பாண்டவ குலமே அழியவென்று, பிரமாத்திரம் தொடுக்க, அதனை எதிர்த்து அர்ஜுனனும் பிரமாத்திரத்தினை ஏவினான். ஆனால், இவ்வத்திரங்களினால் ஊழி நேரும் என அஞ்சிய இருடிகளின் வேண்டுகோளுக்கிணங்க, அஸ்வத்தாமா தனது அத்திரத்தின் இலக்கினை மாற்றினான். அர்ஜுனன், தனது பிரமாத்திரத்தினைத் திரும்பத் தானே பெற்றுக் கொண்டான். மகாபாரதம், 10-வது புத்தகம், ஸௌப்திக பருவம், 14, 15-வது அத்தியாயங்கள் நோக்கவும்.
கதைச் சுருக்கம்-1; கதைச் சுருக்கம்-2.
இரவில் திரிவோன் - அரக்கர்கள்
கற்பரசி - மாதவனின் மனைவி
சவுரி - மானின் தோகை மயிரினாலானது
கழுத்தினை நீட்ட - கவரி மானைக் குறிக்கும்
இசை விரும்பும் - இறைவனைக் குறிக்கும்
Top
Updated on 10 May 2010
No comments:
Post a Comment