Saturday, April 24, 2010

தியாகராஜ கிருதி - ஸீதா மனோஹர - ராகம் ராம மனோஹரி - Sita Manohara - Raga Rama Manohari

பல்லவி
ஸீதா மனோஹர ஸ்1ரு2ங்கா3ர ஸே12

அனுபல்லவி
வாதாஸ1னாரி வர வாஹன
வாரிஜாஸனாதி3 வந்தி3த பத3 (ஸீ)

சரணம்
சரணம் 1
தொலி ஜன்மமுலனு ஜேஸின பூஜா
2லமோ லேக நீது3 கடாக்ஷ
3லமோ நீவாட3னு நேனனி லோகுலு
பல்ககா3 14ன்யுட3னைதினி (ஸீ)


சரணம் 2
தீ3ன லோக ஸம்ரக்ஷக
தை3வாதீ4னமுகா3 நீ ரூபமு நாது3
மானஸாப்3ஜமுன நாடியுண்ட3கா3
நேனெந்தடி பா4க்3ய-ஸா1லினோ (ஸீ)


சரணம் 3
தி3ட்ட-தனமுனனு ப4க்தி
ஸ்தி2ரமௌனட்டுகா3 ஸ்ரீ ராம என்னடிகி
3ட்டிகா3னு த்யாக3ராஜனி செயி
பட்டி ரக்ஷிஞ்சியேலுகோவய்ய (ஸீ)


பொருள் - சுருக்கம்
  • சீதையின் உள்ளம் கவர்வோனே!
  • சிங்காரத்தின் சிகரமே!
  • கருட வாகனனனே!
  • பிரமன் ஆகியோர் வந்திக்கும் திருவடியோனே!
  • எளியோரைக் காப்போனே!
  • இராமா!

    • முற்பிறவிகளில் செய்த வழிபாட்டின் பயனோ, அன்றி உனது கடைக்கண் (பார்வையின்) வல்லமையோ, உன்னவன் நானென உலகோர் சொல்லும்படி பேறுடைத்தோனாகினேன்;

    • தெய்வச் செயலாக, உனதுருவம், எனது உள்ளக் கமலத்தினில் பதிந்திருக்கும்படி, நானெத்தனை பேறுடைத்தவனோ!

    • திண்ணமான முறையில், பக்தி நிலைத்திருக்குமாறு, என்றைக்கும் கெட்டியாக தியாகராசனின் கைப்பற்றி, காப்பற்றிப் பேணுவாயய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸீதா/ மனோஹர/ ஸ்1ரு2ங்கா3ர/ ஸே12ர/
சீதையின்/ உள்ளம் கவர்வோனே/ சிங்காரத்தின்/ சிகரமே/


அனுபல்லவி
வாத/-அஸ1ன/-அரி/ வர/ வாஹன/
காற்றை/ புசிப்போன்/ பகைவன் (கருடன்)/ உயர்/ வாகனத்தோனே/

வாரிஜ/-ஆஸன/-ஆதி3/ வந்தி3த/ பத3/ (ஸீ)
கமலத்தில்/ அமர்வோன்/ ஆகியோர்/ வந்திக்கும்/ திருவடியோனே/


சரணம்
சரணம் 1
தொலி/ ஜன்மமுலனு/ ஜேஸின/ பூஜா/
முந்தைய/ பிறவிகளில்/ செய்த/ வழிபாட்டின்/

2லமோ/ லேக/ நீது3/ கடாக்ஷ/
பயனோ/ அன்றி/ உனது/ கடைக்கண் (பார்வையின்)/

3லமோ/ நீவாட3னு/ நேனு/-அனி/ லோகுலு/
வல்லமையோ/ உன்னவன்/ நான்/ என/ உலகோர்/

பல்ககா3/ த4ன்யுட3னு/-ஐதினி/ (ஸீ)
சொல்லும்படி/ பேறுடைத்தோன்/ ஆகினேன்/


சரணம் 2
தீ3ன லோக/ ஸம்ரக்ஷக/
எளியோரை/ காப்போனே/

தை3வ-அதீ4னமுகா3/ நீ/ ரூபமு/ நாது3/
தெய்வச் செயலாக/ உனது/ உருவம்/ எனது/

மானஸ/-அப்3ஜமுன/ நாடி/-உண்ட3கா3/
உள்ள/ கமலத்தினில்/ பதிந்து/ இருக்கும்படி/

நேனு/-எந்தடி/ பா4க்3ய/-ஸா1லினோ/ (ஸீ)
நான்/ எத்தனை/ பேறு/ உடைத்தவனோ/


சரணம் 3
தி3ட்ட/-தனமுனனு/ ப4க்தி/
திண்ணமான/ முறையில்/ பக்தி/

ஸ்தி2ரமு/-ஔனட்டுகா3/ ஸ்ரீ ராம/ என்னடிகி/
நிலைத்து/ இருக்குமாறு/ ஸ்ரீ ராமா/ என்றைக்கும்/

3ட்டிகா3னு/ த்யாக3ராஜனி/ செயி/
கெட்டியாக/ தியாகராசனின்/ கை/

பட்டி/ ரக்ஷிஞ்சி/-ஏலுகோ/-அய்ய/ (ஸீ)
பற்றி/ காப்பற்றி/ பேணுவாய்/ அய்யா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 4ன்யுட3னைதினி - த4ன்யுடை3தினி.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
காற்றைப் புசிப்போன் - அரவு
காற்றைப் புசிப்போன் பகைவன் - கருடன்
கமலத்தில் அமர்வோன் - பிரமன்

Top


Updated on 24 Apr 2010

No comments: