1ஸாரமே கானி அன்ய மார்க3
2விசாரமேடிகே ஓ மனஸா
அனுபல்லவி
வாரு வீரு தெலிய லேக பல்கு
வார்தலு வினனேலே ராம நாமமு (ஸா)
சரணம்
சரணம் 1
மார கோடி லாவண்யுடை3ன ரகு4
வீருனி நாம ஸுதா4 ரஸமுனனு
ஸாரெகு பானமு ஜேஸி ஜக3த்3-
விஹாருடை3 வெலயு நாராயண
நாராயணயனுசுனு வாரமு
3ஸ1ரத3ம்பு3த3 நிபு4டௌ3 ஸ்ரீ
நாரத3 முனி 4வல்மீக ஜாதுனிகி
கூரிமினுபதே3ஸி1ஞ்ச லேதா3 (ஸா)
சரணம் 2
பரம பாவனுனி ஸ1ரணாக3த ஜன
பரிபாலன பி3ருதா3ங்குனி ஸீதா
வருனி நாம ஸுதா4 ரஸ பானமு
நிரதமுனனு ஜேஸி ஹரி ஹரி
ஹரியனுசு ஸந்ததம்பு3னு
ஸரியு லேனி கீர்தி காஞ்சி தே3ஹமு
பரவஸ1ம்பு3 ஜெந்தி3 ஸு1க ப்3ரஹ்ம
பரீக்ஷித்துகொஸக3 லேதா3 வாதா3 (ஸா)
சரணம் 3
5ஸாம கா3ன லோலுடௌ3 ரஜத கி3ரி
தா4முடை3ன த்யாக3ராஜ ஸி1வுட3தி
நேமமுதோ நாமாம்ரு2த பானமு
ஏமரகனு ஜேஸி ராம ராம
ராமயனுசு ஸததமு
ஸ்ரீமதா3தி3 கௌ3ரிகி ஸ்1ரு2ங்கா3ரிகி
ஆ மஹிமலனா ரஹஸ்யமுலனதி
ப்ரேமனுபதே3ஸி1ஞ்ச லேதா3 (ஸா)
பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
- சாரமேயற்ற பிற நெறிகளின் எண்ணம் எதற்கடி?
- அவரும், இவரும், அறியாது பேசும் சொற்களைக் கேட்பதேனடி?
- இராம நாமமே சாரமேயன்றி, பிற நெறிகளின் எண்ணம் எதற்கடி?
- மதனர்கள் கோடி எழிலுடையவனாகிய, இரகு வீரனின் நாம அமிழ்துச் சாற்றினை, எவ்வமயமும் பருகி,
- 'நாராயண, நாராயண'வென்று (செபித்துக்கொண்டு) நாளும்,
- பல்லுலக சஞ்சாரியாக விளங்கும், இலையுதிர்கால முகில் நிகரினராகிய,
- மதனர்கள் கோடி எழிலுடையவனாகிய, இரகு வீரனின் நாம அமிழ்துச் சாற்றினை, எவ்வமயமும் பருகி,
- உயர் நாரத முனி, (இராம நாமத்தினை) புற்றிலுதித்தோனுக்குக் கனிவுடன் உபதேசிக்கவில்லையா?
- முற்றிலும் தூயோனின், சரணடைந்தோரைப் பேணும் விருதேந்துவோனின், சீதை மணாளனின், நாம அமிழ்துச் சாற்றினை இடையறாது பருகி,
- 'அரி, அரி, அரி'யென்று (செபித்து), எவ்வமயமும்,
- ஈடற்ற புகழ் பெற்று, மெய்ப் பரவசமுற்று,
- முற்றிலும் தூயோனின், சரணடைந்தோரைப் பேணும் விருதேந்துவோனின், சீதை மணாளனின், நாம அமிழ்துச் சாற்றினை இடையறாது பருகி,
- சுகப்பிரும்மம் (அரி நாமத்தினை) பரீட்சித்துக்கு அளிக்கவில்லையா? வாதா?
- சாமகானத்தினை விரும்பும், பனிமலை உறைவோனாகிய, தியாகராசனுக்கு நலனருள்வோன், மிக்கு நியமத்துடன், (இராம) நாம அமிழ்தினை மறவாது பருகி,
- 'இராமா, இராமா, இராமா'யென (செபித்து), எவ்வமயமும்,
- சாமகானத்தினை விரும்பும், பனிமலை உறைவோனாகிய, தியாகராசனுக்கு நலனருள்வோன், மிக்கு நியமத்துடன், (இராம) நாம அமிழ்தினை மறவாது பருகி,
- உயர் ஆதி கௌரிக்கு, சிங்காரிக்கு, அம்மகிமைகளினையும், அம்மருமங்களினையும், மிக்கு அன்புடன் உபதேசிக்கவில்லையா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாரமே/ கானி/ அன்ய/ மார்க3/
சாரமே/ அற்ற/ பிற/ நெறிகளின்/
விசாரமு/-ஏடிகே/ ஓ மனஸா/
எண்ணம்/ எதற்கடி/ ஓ மனமே/
அனுபல்லவி
வாரு/ வீரு/ தெலிய லேக/ பல்கு/
அவரும்/ இவரும்/ அறியாது/ பேசும்/
வார்தலு/ வினனு/-ஏலே/ ராம/ நாமமு/ (ஸா)
சொற்களை/ கேட்பது/ ஏனடி/ இராம/ நாமமே/ சாரமேயன்றி...
சரணம்
சரணம் 1
மார/ கோடி/ லாவண்யுடை3ன/ ரகு4/
மதனர்கள்/ கோடி/ எழிலுடையவனாகிய/ இரகு/
வீருனி/ நாம/ ஸுதா4/ ரஸமுனனு/
வீரனின்/ நாம/ அமிழ்து/ சாற்றினை/
ஸாரெகு/ பானமு ஜேஸி/ ஜக3த்3/-
எவ்வமயமும்/ பருகி/ பல்லுலக/
விஹாருடை3/ வெலயு/ நாராயண/
சஞ்சாரியாக/ விளங்கும்/ 'நாராயண/
நாராயண/-அனுசுனு/ வாரமு/
நாராயண/ என்று/ (செபித்துக்கொண்டு) நாளும்/
ஸ1ரத்3/-அம்பு3த3/ நிபு4டௌ3/ ஸ்ரீ/
இலையுதிர்கால/ முகில்/ நிகரினராகிய/ உயர்/
நாரத3/ முனி/ வல்மீக/ ஜாதுனிகி/
நாரத/ முனி/ (இராம நாமத்தினை) புற்றில்/ உதித்தோனுக்கு/
கூரிமினி/-உபதே3ஸி1ஞ்ச லேதா3/ (ஸா)
கனிவுடன்/ உபதேசிக்கவில்லையா/
சரணம் 2
பரம/ பாவனுனி/ ஸ1ரண/-ஆக3த ஜன/
முற்றிலும்/ தூயோனின்/ சரண்/ அடைந்தோரை/
பரிபாலன/ பி3ருது3/-அங்குனி/ ஸீதா/
பேணும்/ விருது/ ஏந்துவோனின்/ சீதை/
வருனி/ நாம/ ஸுதா4/ ரஸ/ பானமு
மணாளனின்/ நாம/ அமிழ்து/ சாற்றினை/
நிரதமுனனு/ ( பானமு) ஜேஸி/ ஹரி/ ஹரி/
இடையறாது/ பருகி/ 'அரி/ அரி/
ஹரி/-அனுசு/ ஸந்ததம்பு3னு/
அரி/ என்று/ (செபித்து), எவ்வமயமும்/
ஸரியு/ லேனி/ கீர்தி/ காஞ்சி/ தே3ஹமு/
ஈடு/ அற்ற/ புகழ்/ பெற்று/ மெய்/
பரவஸ1ம்பு3/ ஜெந்தி3/ ஸு1க/ ப்3ரஹ்ம/
பரவசம்/ உற்று/ சுக/ பிரும்மம்/ (அரி நாமத்தினை)
பரீக்ஷித்துகு/-ஒஸக3 லேதா3/ வாதா3/ (ஸா)
பரீட்சித்துக்கு/ அளிக்கவில்லையா/ வாதா/
சரணம் 3
ஸாம/ கா3ன/ லோலுடௌ3/ ரஜத/ கி3ரி/
சாம/ கானத்தினை/ விரும்பும்/ பனி/ மலை/
தா4முடை3ன/ த்யாக3ராஜ/ ஸி1வுடு3/-அதி/
உறைவோனாகிய/ தியாகராசனுக்கு/ நலனருள்வோன்/ மிக்கு/
நேமமுதோ/ நாம/-அம்ரு2த/ பானமு
நியமத்துடன்/ (இராம) நாம/ அமிழ்தினை/
ஏமரகனு/ ( பானமு) ஜேஸி/ ராம/ ராம/
மறவாது/ பருகி/ 'இராமா/ இராமா/
ராம/-அனுசு/ ஸததமு/
இராமா/ என/ (செபித்து), எவ்வமயமும்/
ஸ்ரீமத்/-ஆதி3/ கௌ3ரிகி/ ஸ்1ரு2ங்கா3ரிகி/
உயர்/ ஆதி/ கௌரிக்கு/ சிங்காரிக்கு/
ஆ/ மஹிமலனு/-ஆ/ ரஹஸ்யமுலனு/-அதி/
அந்த/ மகிமைகளினையும்/ அந்த/ மருமங்களினையும்/ மிக்கு/
ப்ரேமனு/-உபதே3ஸி1ஞ்ச லேதா3/ (ஸா)
அன்புடன்/ உபதேசிக்கவில்லையா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
Top
மேற்கோள்கள்
4 - வல்மீக ஜாதுனிகி - புற்றிலுதித்தோன் - வால்மீகி முனி. 'வால்மீகி', முன்னர், ஒரு வேடனாக, காடுகளில் வழிப்பறி செய்து, வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்ததாகவும், நாரதர், அவருக்கு நல்வழி காட்டி, ராம நாமத்தினை உபதேசித்ததாக பரம்பரைக் கதை (Dhyana, Japa, Mantra, Guru, and Avatar) கூறும். ஆனால், இதற்கு ஆதாரமென்ன என்று தெரியவில்லை. மோனியரின் 'சமஸ்கிருத அகராதி', வால்மீகி, ஒரு அந்தணர் என்றும், அவருக்கு அயோத்தி மன்னர்களுடன் தொடர்பு இருந்ததாகக் கூறும். அந்த அகராதியிலும், இந்த பரம்பரைக் கதையினைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது..
5 - ஸாம கா3ன லோலுடௌ3 - சாம கானத்தினை விரும்புவோன். சிவனைக் குறிக்கும். பார்வதி, விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தினை, பண்டிதர்களால் ஓதக் கேட்க விரும்புவதாக, சிவனிடம் கூற, 'ராம ராம ராம' என்று செபித்தாலே, விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தினை ஓதிய பலன் கிடைக்கும் என, சிவன் பதில் கூறினார். (விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பயன் படலத்தினை நோக்கவும்.)
Top
விளக்கம்
1 - ஸாரமே கானி - பல்லவியில் இதற்கு 'சாரமேயற்ற' என்றும், அனுபல்லவியின் 'ராம நாமமே' என்ற சொற்களுடன் இணைக்கையில், 'சாரமேயன்றி' என்றும் பொருள்படும்.
2 -ஏடிகே - எதற்கடி - மனத்தினை பெண்பாலில் தியாகராஜர் விளிக்கின்றார்
3 - ஸ1ரத3ம்பு3த3 - இலையுதிர்கால முகில் - இலையுதிர் காலத்தில் ஆகாயம் மேகங்களின்றி தெளிவாக இருக்கும். அப்படி மேகங்களிருந்தாலும், அவை, மழை கொடுக்காதாகையினால், வெண்ணிறமாக இருக்கும்.
Top
சஞ்சாரி - திரிபவர்
முற்றிலும் தூயோன் - சரணடைந்தோரைப் பேணும் விருதேந்துவோன் - இராமன்
பரீட்சித்து - கலியை வென்ற மன்னன்
சாமகானம் - சாம வேதத்தினை ஓதல்
தியாகராசனுக்கு நலனருள்வோன் - சிவன்
ஆதி கௌரி - பார்வதி
சிங்காரி - பார்வதியைக் குறிக்கும்.
Top
Updated on 19 Apr 2010
2 comments:
திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 3 ல் அதி ப்ரேமனு என்பதற்கு பிக்கு அன்புடன் என்று பொருள் கொடுத்துள்ளீர். ப்ரேமனு என்பது அன்பினை என்ற்ல்லவா பொருள் தரும். ப்ரேமதோ என்றால் அன்புடன் என்று பொருள்.
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
இவ்விடத்தில், 'அன்பினை உபதேசித்தான்' என்று கூறுவது பொருந்தாது. 'னு' என்ற suffix 'தோட3னு' அல்லது 'தோனு' என்பதன் சுருக்கமாக தியாகராஜர் பயன்படுத்தியுள்ளார். இதுபோன்ற பிரயோகம் பல கீர்த்தனைகளில் காணப்படுகின்றது.
வணக்கம்
கோவிந்தன்
Post a Comment