ஸுந்த3ர-தர தே3ஹம் வந்தே3ऽஹம் ராமம்
அனுபல்லவி
குந்த3 ரத3னம் ஆப்த 1குமுத3 ஸ1ஸா1ங்கம்
கந்த3ர்ப ஸ1த கோடி காந்திம் அதி நிஷ்களங்கம் (ஸு)
சரணம்
சரணம் 1
பதித ஜன பாவனம் பரிபாலித பு4வனம்
2ஸ்1ருதி நிகர ஸத3னம் ஸு1ப4 கர வத3னம்
யதி வர ஜீவனம் இப4 ராஜ பாலனம்
தி3திஜ மத3 த3மனம் தீ3ன ஜனாவனம் (ஸு)
சரணம் 2
நவ 3தூ3ர்வ த3ள நீலம் நந்தி3தாமர ஜாலம்
4அவனத ஸுர பாலம் அத்3பு4த லீலம்
ப4வ ப4ய ஹரண காலம் ப4க்த ஜன வத்ஸலம்
ஸி1வம் அத்3வைதம் அமலம் ஸ்ரீமத்-கனகாப4 சேலம் (ஸு)
சரணம் 3
ஆக3ம ஸஞ்சாரம் அகி2ல லோகாதா4ரம்
வாக3தி4ப குமாரம் வர வீர வீரம்
ராகா3தி3 ஸம்ஹாரம் ராக4வம் உதா3ரம்
த்யாக3ராஜ ஹ்ரு2த்-ஸஞ்சாரம் காருண்ய பாராவாரம் (ஸு)
பொருள் - சுருக்கம்
- எழில்மிகு உடலோனை, இராமனை வணங்குகின்றேன்
- முல்லைப் பற்களோனை,
- நண்பருக்கு, குமுத-முயல் சின்னத்தோனை,
- மதனர்கள் நூறு கோடி ஒளியுடையோனை,
- சிறிதும் களங்கமற்றோனை,
- வீழ்ந்தோரை மேம்படுத்துவோனை,
- புவனத்தைப் பேணுவோனை,
- மறைகளின் சாரத்துறைவோனை,
- நன்மையருளும் வதனத்தோனை,
- உயர் இருடிகளின் வாழ்வினை,
- கரியரசனைக் காத்தோனை,
- அரக்கர்களின் செருக்கினை யழித்தோனை,
- எளியோரைக் காப்போனை,
- இளம் அறுகு தள நீல வண்ணனை,
- வானோருக்கு மகிழ்வூட்டுவோனை,
- பணிவோர், வானோரைக் காப்போனை,
- அற்புதத் திருவிளையாடல்களோனை,
- பிறவி அச்சம் நீக்கும் நமனை,
- தொண்டரிடம் கனிவானவனை,
- மங்களமானவனை,
- இரண்டற்றோனை,
- மலமற்றோனை,
- உயர் பொன்னிற ஆடைகளோனை,
- ஆகமங்களில் உலவுவோனை,
- பல்லுலகிற்கும் ஆதாரமானவனை,
- நாவரசி கேள்வனை மைந்தனாயுடையோனை,
- உயர் வீராதி வீரனை,
- இச்சை முதலானவற்றினை யழித்தோனை,
- உதார குண இராகவனை,
- தியாகராசனின் இதயத்தினில் உலவுவோனை,
- கருணைக் கடலினை,
- முல்லைப் பற்களோனை,
- எழில்மிகு உடலோனை, இராமனை வணங்குகின்றேன்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுந்த3ர-தர/ தே3ஹம்/ வந்தே3-அஹம்/ ராமம்/
எழில்மிகு/ உடலோனை/ வணங்குகின்றேன்/ இராமனை/
அனுபல்லவி
குந்த3/ ரத3னம்/ ஆப்த/ குமுத3/ ஸ1ஸ1/-அங்கம்/
முல்லை/ பற்களோனை/ நண்பருக்கு/ குமுத/-முயல்/ சின்னத்தோனை/
கந்த3ர்ப/ ஸ1த/ கோடி/ காந்திம்/ அதி/ நிஷ்களங்கம்/ (ஸு)
மதனர்கள்/ நூறு/ கோடி/ ஒளியுடையோனை/ சிறிதும்/ களங்கமற்றோனை/ எழில்மிகு...
சரணம்
சரணம் 1
பதித ஜன/ பாவனம்/ பரிபாலித/ பு4வனம்/
வீழ்ந்தோரை/ மேம்படுத்துவோனை/ பேணுவோனை/ புவனத்தை/
ஸ்1ருதி/ நிகர/ ஸத3னம்/ ஸு1ப4/ கர/ வத3னம்/
மறைகளின்/ சாரத்து/ உறைவோனை/ நன்மை/ அருளும்/ வதனத்தோனை/
யதி/ வர/ ஜீவனம்/ இப4/ ராஜ/ பாலனம்/
இருடிகளின்/ உயர்/ வாழ்வினை/ கரி/ அரசனை/ காத்தோனை/
தி3திஜ/ மத3/ த3மனம்/ தீ3ன ஜன/-அவனம்/ (ஸு)
அரக்கர்களின்/ செருக்கினை/ யழித்தோனை/ எளியோரை/ காப்போனை/ எழில்மிகு...
சரணம் 2
நவ/ தூ3ர்வ/ த3ள/ நீலம்/ நந்தி3த/-அமர ஜாலம்/
இளம்/ அறுகு/ தள/ நீல/ வண்ணனை/ மகிழ்வூட்டுவோனை/ வானோருக்கு/
அவனத/ ஸுர/ பாலம்/ அத்3பு4த/ லீலம்/
பணிவோர்/ வானோரை/ காப்போனை/ அற்புத/ திருவிளையாடல்களோனை/
ப4வ/ ப4ய/ ஹரண/ காலம்/ ப4க்த ஜன/ வத்ஸலம்/
பிறவி/ அச்சம்/ நீக்கும்/ நமனை/ தொண்டரிடம்/ கனிவானவனை/
ஸி1வம்/ அத்3வைதம்/ அமலம்/ ஸ்ரீமத்/-கனக/-ஆப4/ சேலம்/ (ஸு)
மங்களமானவனை/ இரண்டற்றோனை/ மலமற்றோனை/ உயர்/ பொன்/ நிற/ ஆடைகளோனை/ எழில்மிகு...
சரணம் 3
ஆக3ம/ ஸஞ்சாரம்/ அகி2ல லோக/-ஆதா4ரம்/
ஆகமங்களில்/ உலவுவோனை/ பல்லுலகிற்கும்/ ஆதாரமானவனை/
வாக்3/-அதி4ப/ குமாரம்/ வர/ வீர/ வீரம்/
நாவரசி/ கேள்வனை/ மைந்தனாயுடையோனை/ உயர்/ வீராதி/ வீரனை/
ராக3/-ஆதி3/ ஸம்ஹாரம்/ ராக4வம்/ உதா3ரம்/
இச்சை/ முதலானவற்றினை/ அழித்தோனை/ இராகவனை/ உதார குண/
த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-ஸஞ்சாரம்/ காருண்ய/ பாராவாரம்/ (ஸு)
தியாகராசனின்/ இதயத்தினில்/ உலவுவோனை/ கருணை/ கடலினை/ எழில்மிகு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம், 'காம வர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - குமுத3 ஸ1ஸா1ங்கம் - முயல் சின்னத்தோன் - மதி - குமுத-முயல் சின்னத்தோன் - குமுதத்தினை மலரச்செய்யும் மதியென.
2 - ஸ்1ருதி நிகர ஸத3னம் - 'நிகர' என்ற சொல் பன்மையினைக் குறிக்கும். எனவே, இதற்கு, 'மறைகளில் உறைவோன்' என்றும் பொருள் கொள்ளலாம்.
3 - தூ3ர்வ - அறுகு - அறுகு தளம் - இளம் அறுகம்புல்.
Top
4 - அவனத ஸுர பாலம் - 'அவனத' என்பதனை, அடுத்துவரும், 'ஸுர' என்பதற்கு அடைமொழியாகக் கொண்டு, 'பணியும் வானோரைக் காப்போன்' என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், அத்தகைய பொருள் உகந்ததாகத் தோன்றவில்லை.
இரண்டற்றோன் - அத்துவைதம் - பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றெனல்.
உயர் பொன்னிற ஆடை - பீதாம்பரம்.
நாவரசி கேள்வன் - பிரமன்
Top
Updated on 20 Apr 2010
3 comments:
திரு கோவிந்தன் அவர்களே
பதம் பிரித்துத் தாங்கள் பொருள் கொடுத்துள்ள போதும் சில பகுதிகளைப் புருந்து கொள்வது எளிதாக இல்லை.
(எ.டு) ”ஆப்த/ குமுத3/ ஸ1ஸ1/-அங்கம்”.
நண்பர்கள், நீலாம்பல், முயல், சின்னம் எனும் நான்கு சொற்கள் தானே உள்ளன. இதற்கு ‘நண்பர்களெனும் குமுதமலர்களுக்கு முயலைச் சின்னமாகக் கொண்டவன் (சந்திரன்) போன்றவனே என்று பொருள் கொள்ளவேண்டுமா?
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
உங்களுடைய ஐயத்தினை நான் விளக்கப் பகுதியில் (comments) விளக்கியுள்ளேன். நீங்கள் கூறுவதற்கும், நான் கூறுவதற்கும் சொல் வேறுபாடிருந்தாலும் பொருள் வேறுபாடில்லை.
வணக்கம்
கோவிந்தன்.
Post a Comment