Saturday, April 17, 2010

தியாகராஜ கிருதி - ஸோ1பா4னே ஸோ1பா4னே - ராகம் பந்துவராளி - Sobhane Sobhane - Raga Pantuvarali

பல்லவி
ஸோ1பா4னே ஸோ1பா4னே

சரணம்
சரணம் 1
வத3ன த்3யுதி ஜித ஸோம 1வஸுதா4 மானஸ காம
மத3 மானவ க3ண பீ4ம மாம் பாஹி ஸ்ரீ ராம (ஸோ1)


சரணம் 2
ஜனக ஸுதா ஹ்ரு2த்3-ரமண ஜமத3க்3னிஜ மத3 ஹரண
ப்ரணதாகா4னல வருண பாஹி மாம் முனி ஸ1ரண (ஸோ1)


சரணம் 3
விக3ளித மோஹ பாஸ1 விது4 கோடி ஸங்காஸ1
43வன் ஸகலாதீ41 பாஹி பாப வினாஸ1 (ஸோ1)


சரணம் 4
வர த்யாக3ராஜ நுத வாரிஜ ஸம்ப4வ தாத
பரம கல்யாண யுத பாஹி மாம் ஸு14 சரித (ஸோ1)


பொருள் - சுருக்கம்
  • சோபானே! சோபானே!

    • முகவொளியில் மதியை வென்றோனே!
    • பூமி தேவியின் மனத்தின் விருப்பமே!
    • செருக்குடை மானவர்களின் அச்சமே!
    • என்னைக் காப்பாய், இராமா!

  • சோபானே! சோபானே!

    • சனகன் மகளின் உள்ளம் மகிழ்விப்போனே!
    • ஜமதக்கினி (முனிவன்) மகனின் செருக்கினை யழித்தோனே!
    • பணிந்தோரின் பாவத் தணலை அணைக்கும் வருணனே!
    • என்னைக் காப்பாய், முனிவரின் புகலே!

  • சோபானே! சோபானே!

    • மோகத்தினையும் பற்றினையும் வென்றோனே!
    • மதிகள் கோடி ஒருமிக்க உதித்தாற்போன்ற ஒளியோனே!
    • இறைவனே, யாவற்றிற்கும் தலைவா!
    • என்னைக் காப்பாய், பாவங்களை வேறறுப்போனே!

  • சோபானே! சோபானே!

    • தியாகராசன் போற்றும் மேலோனே!
    • கமலத்தினில் உதித்தோன் தந்தையே!
    • முற்றிலும் மங்களமுடைத்தோனே!
    • என்னைக் காப்பாய், புனித சரிதத்தோனே!

  • சோபானே! சோபானே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸோ1பா4னே/ ஸோ1பா4னே/
சோபானே/ சோபானே/


சரணம்
சரணம் 1
வத3ன/ த்3யுதி/ ஜித/ ஸோம/ வஸுதா4/ மானஸ/ காம/
முக/ ஒளியில்/ வென்றோனே/ மதியை/ பூமி தேவியின்/ மனத்தின்/ விருப்பமே/

மத3/ மானவ க3ண/ பீ4ம/ மாம்/ பாஹி/ ஸ்ரீ ராம/ (ஸோ1)
செருக்குடை/ மானவர்களின்/ அச்சமே/ என்னை/ காப்பாய்/ ஸ்ரீ ராமா/


சரணம் 2
ஜனக/ ஸுதா/ ஹ்ரு2த்/-ரமண/ ஜமத3க்3னிஜ/ மத3/ ஹரண/
சனகன்/ மகளின்/ உள்ளம்/ மகிழ்விப்போனே/ ஜமதக்கினி (முனிவன்) மகனின்/ செருக்கினை/ யழித்தோனே/

ப்ரணத/-அக4/-அனல/ வருண/ பாஹி/ மாம்/ முனி/ ஸ1ரண/ (ஸோ1)
பணிந்தோரின்/ பாவத்/ தணலை/ (அணைக்கும்) வருணனே/ காப்பாய்/ என்னை/ முனிவரின்/ புகலே/


சரணம் 3
விக3ளித/ மோஹ/ பாஸ1/ விது4/ கோடி/ ஸங்காஸ1/
வென்றோனே/ மோகத்தினையும்/ பற்றினையும்/ மதிகள்/ கோடி/ ஒருமிக்க உதித்தாற்போன்ற ஒளியோனே/

43வன்/ ஸகல/-அதீ41/ பாஹி/ பாப/ வினாஸ1/ (ஸோ1)
இறைவனே/ யாவற்றிற்கும்/ தலைவா/ (என்னைக்) காப்பாய்/ பாவங்களை/ வேறறுப்போனே/


சரணம் 4
வர/ த்யாக3ராஜ/ நுத/ வாரிஜ/ ஸம்ப4வ/ தாத/
மேலோனே/ தியாகராசன்/ போற்றும்/ கமலத்தினில்/ உதித்தோன்/ தந்தையே/

பரம/ கல்யாண/ யுத/ பாஹி/ மாம்/ ஸு14/ சரித/ (ஸோ1)
முற்றிலும்/ மங்களம்/ உடைத்தோனே/ காப்பாய்/ என்னை/ புனித/ சரிதத்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - வஸுதா4 - சில புத்தகங்களில், இதனை, 'சீதை' என்று மொழிபெயெர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இச்சொல்லுக்கு, 'இலக்குமி' என்றோ 'பூதேவி' என்றோதான் பொருள் கொள்ளவியலும்.

சோபானே - மங்களமுண்டாகுக - ஆலாத்திப் பாடல்
ஜமதக்கினி (முனிவன்) மைந்தன் - பரசுராமன்
வருணன் - நீருக்கதிபதி
கமலத்தினில் உதித்தோன் - பிரமன்

Top


Updated on 18 Apr 2010

No comments: