1பரிபூர்ண காம பா4வமுன மரசினாமா
அனுபல்லவி
பரம காருணிகோத்தம ப4வ 2ஜீவனஜ ப4வார்சித (ப)
சரணம்
ஸாகேதாதி4ப நீ முக2 ஸரஸீ-ருஹமுனு ஜூபி
ஸாகெடு3 மதி3 லேதே3டி 3ஸவரண ராம
ஈ கலினனுஸரிஞ்சின ஹீன ஜாதி மர்த்யுல
சீகாகு பட3க3 தரமே ஸ்ரீ-கர 4த்யாக3ராஜ நுத (ப)
பொருள் - சுருக்கம்
- இச்சைகள் நிறைவேறப்பெற்றோனே!
- மிக்கு கருணையுள்ளத்தோரில் உத்தமனே!
- பவன் மற்றும் கமலத்தில் அமர்வோனால் தொழப் பெற்றோனே!
- சாகேத நகரத் தலைவா!
- இராமா!
- நலமருள்வோனே!
- தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- உணர்வினில் (உன்னை) மறந்தோமா?
- உனது முகத் தாமரையினைக் காண்பித்து, காக்கும் எண்ணமில்லையா? இஃதென்ன அழகய்யா?
- இக்கலியின் வழி நடக்கும் இழிந்த குல மக்களின் தூற்றல்களைப் பட முடியுமா?
- உணர்வினில் (உன்னை) மறந்தோமா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரிபூர்ண/ காம/ பா4வமுன/ மரசினாமா/
நிறைவேறப்பெற்றோனே/ இச்சைகள்/ உணர்வினில்/ (உன்னை) மறந்தோமா/
அனுபல்லவி
பரம/ காருணிக/-உத்தம/ ப4வ/ ஜீவனஜ/ ப4வ/-அர்சித/ (ப)
மிக்கு/ கருணையுள்ளத்தோரில்/ உத்தமனே/ பவன்/ (மற்றும்) கமலத்தில்/ அமர்வோனால்/ தொழப் பெற்றோனே/
சரணம்
ஸாகேத/-அதி4ப/ நீ/ முக2/ ஸரஸீ-ருஹமுனு/ ஜூபி/
சாகேத (நகர)/ தலைவா/ உனது/ முக/ தாமரையினை/ காண்பித்து/
ஸாகெடு3/ மதி3/ லேது3/-ஏடி/ ஸவரண/ ராம/
காக்கும்/ எண்ணம்/ இல்லையா/ (இஃது) என்ன/ அழகய்யா/ இராமா/
ஈ/ கலினி/-அனுஸரிஞ்சின/ ஹீன/ ஜாதி/ மர்த்யுல/
இந்த/ கலியின்/ வழி நடக்கும்/ இழிந்த/ குல/ மக்களின்/
சீகாகு/ பட3க3/ தரமே/ ஸ்ரீ/-கர/ த்யாக3ராஜ/ நுத/ (ப)
தூற்றல்களை/ பட/ முடியுமா/ நலம்/ அருள்வோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸவரண - ஸவரணரா.
4 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ வினுத.
Top
மேற்கோள்கள்
1 - பரிபூர்ண காம - இச்சைகள் நிறைவேறப்பெற்றோன் - விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - ஆதி சங்கரரின் உரை (653) - 'காமீ' என்ற போற்றியின் பொருள் நோக்கவும்.
கீதையில் கண்ணன் கூறுவது -
"பார்த்தா! எனக்கு, மூவுலகத்திலும், இயற்றப்படவேண்டிய கடமைகள் ஏதுமில்லை;
நான் அடையாததோ, அடையக்கூடியதோ இல்லை; ஆயினும், நான் கடமையில் ஈடுபட்டுள்ளேன்."
Top
விளக்கம்
2 - ஜீவனஜ - 'ஜீவன' என்ற சொல்லுக்கு 'நீர்' என்றும் பொருளுண்டு. எனவே 'ஜீவனஜ' - 'நீரில் முளைத்து', கமலத்தினைக் குறிக்கும்.
3 - ஸவரண - இச்சொல், பொதுவாக, 'அழகு' 'நேர்த்தி' என்ற பொருளில் பயன்படுத்தப்படும். ஆனால், பேச்சு வழக்கில், இது ஒரு கிண்டலாகப் பயன்படுத்துவர். அங்ஙனமே, இவ்விடத்தில் கிண்டலாகப் பொருள் கொள்ளப்பட்டது.
பவன் - சிவன்
கமலத்தில் அமர்வோன் - பிரமன்
Top
Updated on 30 Apr 2010
No comments:
Post a Comment