Thursday, April 15, 2010

தியாகராஜ கிருதி - ஸ1ம்போ4 மஹா தே3வ - ராகம் பந்துவராளி - Sambho Mahadeva - Raga Pantuvarali

பல்லவி
1ம்போ4 மஹா தே3வ ஸ1ங்கர கி3ரிஜா ரமண

அனுபல்லவி
1ம்போ4 மஹா தே3வ ஸ1ரணாக3த ஜன ரக்ஷக
அம்போ4-ருஹ லோசன 1பதா3ம்பு34க்திம் தே3ஹி (ஸ1ம்)

சரணம்
பரம த3யா-கர ம்ரு234ர ஹர க3ங்கா34ர த4ரணீ
4ர பூ4ஷண த்யாக3ராஜ வர ஹ்ரு23ய நிவேஸ1
ஸுர ப்3ரு2ந்த3 கிரீட மணி வர நீராஜித பத3
2கோ3புர வாஸ 3ஸுந்த3ரேஸ1 கி3ரீஸ1 பராத்பர 44வ ஹர (ஸ1ம்)


பொருள் - சுருக்கம்
  • சம்போ மகா தேவா! சங்கரா! மலைமகள் மணாளா!
  • சரணடைந்தோரைக் காப்போனே! கமலக் கண்ணா!
  • மிக்கு தயாளா! மான் ஏந்துவோனே! அரனே! கங்கையணிவோனே! புவி சுமப்போனை யணிவோனே! தியாகராசனின் புனித இதயத்துட் புகுந்தோனே! வானோர்களின் முடிமணிகள் ஒளிர்விக்கும் உயர் திருவடியோனே! கோவூருறை சுந்தரோசா! மலையீசா! பராபரனே! பிறவி யறுப்போனே!

    • திருவடிக் கமலப் பற்றினையருள்வாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
1ம்போ4/ மஹா/ தே3வ/ ஸ1ங்கர/ கி3ரிஜா/ ரமண/
சம்போ/ மகா/ தேவா/ சங்கரா/ மலைமகள்/ மணாளா/


அனுபல்லவி
1ம்போ4/ மஹா/ தே3வ/ ஸ1ரண/-ஆக3த ஜன/ ரக்ஷக/
சம்போ/ மகா/ தேவா/ சரண்/ அடைந்தோரை/ காப்போனே/

அம்போ4-ருஹ/ லோசன/ பத3/-அம்பு3ஜ/ ப4க்திம்/ தே3ஹி/ (ஸ1ம்)
கமல/ கண்ணா/ திருவடி/ கமல/ பற்றினை/ அருள்வாய்/


சரணம்
பரம/ த3யா-கர/ ம்ரு23/ த4ர/ ஹர/ க3ங்கா3/ த4ர/ த4ரணீ/
மிக்கு/ தயாளா/ மான்/ ஏந்துவோனே/ அரனே/ கங்கை/ அணிவோனே/ புவி/

4ர/ பூ4ஷண/ த்யாக3ராஜ/ வர/ ஹ்ரு23ய/ நிவேஸ1/
சுமப்போனை/ யணிவோனே/ தியாகராசனின்/ புனித/ இதயத்துட்/ புகுந்தோனே/

ஸுர ப்3ரு2ந்த3/ கிரீட/ மணி/ வர/ நீராஜித/ பத3/
வானோர்களின்/ முடி/ மணிகள்/ உயர்/ ஒளிர்விக்கும்/ திருவடியோனே/

கோ3புர/ வாஸ/ ஸுந்த3ரேஸ1/ கி3ரி/-ஈஸ1/ பராத்பர/ ப4வ/ ஹர/ (ஸ1ம்)
கோவூர்/ உறை/ சுந்தரோசா/ மலை/ ஈசா/ பராபரனே/ பிறவி/ யறுப்போனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'காம வர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

1 - பதா3ம்பு3 - பாதா3ம்பு3ஜ.

Top

மேற்கோள்கள்
2 - கோ3புர வாஸ - தியாகராஜர், கோவூர் சிவனைப் புகழ்ந்து, ஐந்து கீர்த்தனைகள் இயற்றியதாகக் கூறப்படும். இதனில் 'ஈ வஸுதா4 நீவண்டி' என்ற ஸஹானா ராக கீர்த்தனையிலும், 'நம்மி வச்சின' என்ற கல்யாணி ராக கீர்த்தனையிலும், 'கோரி ஸேவிம்ப' என்ற கரஹரப்ரிய ராக கீர்த்தனையிலும், 'கோவூர்' என்ற தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இந்த கீர்த்தனையிலும், 'ஸுந்த3ரேஸ்1வருனி' என்ற ஸங்கராபரண ராக கீர்த்தனையிலும், 'கோ3புர' என்று குறிப்பிடுகின்றார். இந்த கீர்த்தனை முற்றிலும் சம்ஸ்கிருதத்தினில் இயற்றப்பெற்றுள்ளதால், 'கோவூர்' என்பதனை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து 'கோ3புர' என்று குறிப்பிடுகின்றார் என நம்புகின்றேன். எனவே, இப்பாடலில் வரும் 'கோ3புர வாஸ' என்பதற்கு, 'கோவூர் உறையும்' என்று பொருள் கொள்ளப்பட்டது. கோவூர் தல புராணம்.

3 - ஸுந்த3ரேஸ1 - சுந்தரேச - கோவூர் சிவனின் பெயர்.

Top

விளக்கம்
4 - 4வ ஹர - இதளை 'ப4வ' என்றும் 'ஹர' என்றும் இரண்டு தனி அடைமொழிகளாகவோ அல்லது 'ப4வ ஹர' என்று ஒரே அடைமொழியாகவோ கொள்ளலாம். ஆனால், 'ஹர' என்ற அடைமொழி, சரணத்தில் முன்னம் வருவதனால், இதனை 'ப4வ ஹர' என்று ஒரே அடைமொழியாகக் கொள்ளப்பட்டது.

புவி சுமப்போன் - சேடன் - அனந்தன் - அரவு
தியாகராசனின் புனித இதயத்துட் புகுந்தோனே - 'தியாகராசனின் இதயத்துட் புகுந்த புனிதனே' என்றும் கொள்ளலாம்.
கோவூர் - கோபுரம் என்றும் பெயர் - சென்னையருகிலுள்ளது.
சுந்தரோசர் - கோவூரில் இறைவனின் பெயர்
மலையீசன் - கயிலாய மலை

Top


Updated on 15 Apr 2010

No comments: