Thursday, March 25, 2010

தியாகராஜ கிருதி - வர நாரத3 - ராகம் விஜயஸ்ரீ - Vara Narada - Raga Vijaya Sri

பல்லவி
வர நாரத3 1நாராயண
ஸ்மரணா
னந்தா3னுப4வமு க3ல (வர)

அனுபல்லவி
1ரதி3ந்து3 நிபா4பக4னானக4
ஸாரமுகா3னு ப்3ரோவுமிக (வர)

சரணம்
ஸகல லோகமுலகு 2ஸத்3-கு3ருவனுசு
ஸதா3 3நேனதட3னுசு ஹரியு
ப்ரகடம்பு33 கீர்தினொஸங்கெ3னே
பா4வுக த்யாக3ராஜ நுத (வர)


பொருள் - சுருக்கம்
  • நாராயணனின் நினைவெனும் ஆனந்த அனுபவமுடைய மேதகு நாரதரே!
  • இலையுதிர்கால மதி நிகருடலுடைய, பாவங்களற்றவரே!
  • பேறுடை, தியாகராசன் போற்றும் மேதகு நாரதரே!

    • 'பல்லுலகிற்கும் நல்லாசான்' என்றும்,
    • 'எவ்வமயமும் நானே அவன்' என்றும்,
    • அரி, பறை சாற்றி, புகழளித்தானன்றோ?

    • நன்றாக (என்னைக்) காவுமய்யா, இனியும்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வர/ நாரத3/ நாராயண/
மேதகு/ நாரதரே/ நாராயணனின்/

ஸ்மரண/-ஆனந்த3/-அனுப4வமு/ க3ல/ (வர)
நினைவெனும்/ ஆனந்த/ அனுபவம்/ உடைய/ மேதகு...


அனுபல்லவி
1ரத்3/-இந்து3/ நிப4/-அபக4ன/-அனக4/
இலையுதிர்கால/ மதி/ நிகர்/ உடலுடைய/ பாவங்களற்றவரே/

ஸாரமுகா3னு/ ப்3ரோவுமு/-இக/ (வர)
நன்றாக/ (என்னைக்) காவுமய்யா/ இனியும்/


சரணம்
ஸகல/ லோகமுலகு/ ஸத்3கு3ருவு/-அனுசு/
'பல/ உலகிற்கும்/ நல்லாசான்/ என்றும்/

ஸதா3/ நேனு/-அதடு3/-அனுசு/ ஹரியு/
'எவ்வமயமும்/ நானே/ அவன்/ என்றும்/ அரி/

ப்ரகடம்பு33/ கீர்தினி/-ஒஸங்கெ3னே/
பறை சாற்றி/ புகழ்/ அளித்தானன்றோ/

பா4வுக/ த்யாக3ராஜ/ நுத/ (வர)
பேறுடை/ தியாகராசன்/ போற்றும்/ மேதகு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸத்3-கு3ருவனுசு - ஸத்3-கு3ருட3னுசு.

Top

மேற்கோள்கள்
1 - நாராயண ஸ்மரண - நாராயணனின் நினைவு. பாகவத புராணத்தில் (முதலாவது புத்தகம், 6-வது அத்தியாயம்6, 24-வது செய்யுள்) இறைவன், நாரதரிடம் கூறவது -

"உனதுள்ளத்தினில் நிலைபெற்ற என்னுடைய நினைவு, என்றும் அகலாது;
ஊழிக் காலத்தினில், உயிரினங்கள் அழியும்போதும், எனதருளால், என்னை நீ நினைக்கவல்லாய்."

Top

3 - நேனதட3னுசு - நானே அவனென - கீதையில் (10-வது அத்தியாயம், 26-வது செய்யுள்) கண்ணன் கூறுவது -

"அரசமரம், அனைத்து மரங்களிலும் (நானாவேன்); தேவ ரிஷிகளில், நாரதர்;
கந்தருவர்களில், சித்திரரதன்; சித்தர்களில், கபில முனிவர் (நானாவேன்)."

நாரத முனிவர்.

Top

விளக்கம்
அவன் - நாரதரைக் குறிக்கும்.

Top


Updated on 25 Mar 2010

No comments: