Wednesday, March 24, 2010

தியாகராஜ கிருதி - ஸ1ஸி1 வத3ன - ராகம் சந்த்3ர ஜ்யோதி - Sasi Vadana - Raga Chandra Jyoti

பல்லவி
1ஸி1 வத3ன ப4க்த ஜனாவன
1ங்கர நே தாள க3லனா

அனுபல்லவி
பஸி-தனமந்தே3 முனி யாக3முன நீ
பா3ஹு 1பராக்ரமமுனெருக3னா ராகா (ஸ1)

சரணம்
தி3ன தி3னமௌபாஸன ஜப தப
த்4யானமனு யாக3மு வேள மனஸுன புட்டின
423ம்பு3னி தோட3னு 3மாரீசுனி
பனி செரசின
யா த்யாக3ராஜார்சித (ஸ1)


பொருள் - சுருக்கம்
மதி வதனத்தோனே! தொண்டர்களைக் காப்போனே! மங்களமருள்வோனே! முழுமதி வதனத்தோனே! தியாகராசன் தொழும் மதி வதனத்தோனே!

  • நான் தாளவியலுமோ?
  • சிறு வயதிலேயே முனிவனின் வேள்வியினிலுனது கை வலிமையினை நானறியேனா?

    • தினந்தினமும் ஔபாசனை, செபம், தவம், தியானம் எனும் வேள்விகளின் போழ்து, (என்) மனத்தினில் எழுந்த பெரும் செருக்கினுடன், மாரீசனின் பணி முடித்தாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
1ஸி1/ வத3ன/ ப4க்த ஜன/-அவன/
மதி/ வதனத்தோனே/ தொண்டர்களை/ காப்போனே/

1ங்கர/ நே/ தாள/ க3லனா/
மங்களமருள்வோனே/ நான்/ தாள/ இயலுமோ/


அனுபல்லவி
பஸி/-தனமு-அந்தே3/ முனி/ யாக3முன/ நீ/
சிறு/ வயதிலேயே/ முனிவனின்/ வேள்வியினில்/ உனது/

பா3ஹு/ பராக்ரமமுனு/-எருக3னா/ ராகா/ (ஸ1)
கை/ வலிமையினை/ (நான்) அறியேனா/ முழு/ மதி...


சரணம்
தி3ன தி3னமு/-ஔபாஸன/ ஜப/ தப/
தினந்தினமும்/ ஔபாசனை/ செபம்/ தவம்/

த்4யானமு/-அனு/ யாக3மு/ வேள/ மனஸுன/ புட்டின/
தியானம்/ எனும்/ வேள்விகளின்/ போழ்து/ (என்) மனத்தினில்/ எழுந்த/

4ன/ ட3ம்பு3னி தோட3னு/ மாரீசுனி/
பெரும்/ செருக்கினுடன்/ மாரீசனின்/

பனி/ செரசின/-ஆ/ த்யாக3ராஜ/-அர்சித/ (ஸ1)
பணி/ முடித்த/ அந்த/ தியாகராசன்/ தொழும்/ மதி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பராக்ரமமுனெருக3னா - பராக்ரமமுனனெருக3னா.

2 - 3ம்பு3னி - ட3ம்பு4னி - த3ம்பு4னி : இவ்விடத்தில், இச்சொல்லுக்கு 'செருக்கு' என்று பொருளாகும். ஸம்ஸ்கிருதத்தின் 'த3ம்ப4' என்ற சொல் திரிந்து, 'ட3ம்பு3', 'ட3ம்ப3மு', 'ட3ம்ப3ரமு', 'த3ம்ப4மு', 'த3ம்பீ3கமு' என்று தெலுங்கில் வழங்கும்.

'ட3ம்பு3னி' என்பது சரியென்றால், தியாகராஜர் 'ட3ம்ப3' என்ற தெலுங்கு சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம். 'த3ம்பு4னி' என்பது சரியென்றால், அவர் 'த3ம்ப4' என்ற ஸம்ஸ்கிருத சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் 'ட3ம்பு4னி' என்பது தவறாகும். எனவே 'ட3ம்பு3னி' என்ற சொல் ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
3 - மாரீசுனி பனி செரசின - மாரீசனின் பணி முடித்த - மாரீசனின் செருக்கினையொழித்தது போன்று. (வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 38-வது அத்தியாயத்தில்) மாரீசன், ராவணனிடம், ராமனைப் பற்றிக் கூறுவது -

"அறியாமையினாலும், கருவத்தினாலும், ராகவனை சிறுவன் என்று கருதி,
விசுவாமித்திரரின் வேதிகையினை நோக்கி, வெகு வேகமாகப் பாய்ந்தேன்.
அவ்வமயம், அவனால், பகைவனைக் கொல்லும் திறமை வாய்ந்த கூரிய அம்பெய்யப்பட்டது.
அதனால் அடிக்கப்பட்டு, 100 யோஜனை தூரம் (800 மைல்கள்) கடலில் தள்ளப்பட்டேன்.
இவ்விதம், என்னைக் கொல்ல விரும்பாத அவ்வீரனால், நான் காக்கப்பட்டேன்.
ராமனின் அம்பு வேகத்தினால் நான் நினைவிழந்து, ஆழ்கடலில் வீழ்ந்தேன்.
நினைவு திரும்பிய பின்னர், இலங்கையை நோக்கிப் புறப்பட்டேன்."

Top

விளக்கம்
முனிவன் - விசுவாமித்திரர்.
ஔபாசனை - அந்தணர்கள் இயற்றும் அன்றாட வேள்வி

Top


Updated on 24 Mar 2010

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே.
“செபம், தவம், தியானம் எனும் வேள்விகளின் போழ்து, மனத்தினில் எழுந்த பெரும் செருக்கினுடன், பணி முடித்தாய்.” என்று பொருள் கொடுத்துள்ளீர்.
செருக்கு எழுந்தது முனிவர்கள் மனத்திலா, மாரீசன் மனத்திலா, இராமன் மனத்திலா அல்லது தியாகராஜர் மனத்திலா என்று சந்தேகம் எழ வாய்ப்புள்ளது.
நான் புரிந்துகொண்டது பின் வருமாறு. ”முனிவர்கள் தவம் செய்யும் போது மாரீசனை அவன் மனத்திலெழுந்த செருக்கோடு பணி முடித்தாய் (அம்பெய்து 100 யோஜனை தூரம் தள்ளினாய்)”
நீங்கள் எடுத்துக்காட்டாய்க் கொடுத்துள்ள வால்மீகியின் ஸ்லொகமும் மாரீசனின் அறியாமையையும் கருவத்தையும் (செருக்கு) தானே குறிப்பிடுகின்றன.
தியாகராஜரின் மனத்தினில் என்று எடுத்துக்கொண்டால்
”தினந்தினமும் ஔபாசனை, செபம், தவம், தியானம் எனும் வேள்விகளின் போழ்து, (என்) மனத்தினில் எழுந்த பெரும் செருக்கினுனை, மாரீசனின் பணி முடித்தது போல் அழித்தாய்.” என்று அர்த்தமா?
ஜம்ப3ம் என்பது செருக்கையும் ட3ம்பம் என்பது தற்புகழ்ச்சி /விலையுயர்ந்த ஆடைகளை அணியும் விருப்பம் (showmanship) எனும் பொருள்களைத் தமிழில் தருகின்றன. தெலுங்கிலும் அப்படியேவா?

நன்றி
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

கீர்த்தனையின் நோக்கத்தின்படி, தியாகராஜர் தன்னுடைய செருக்கினைப் பற்றித்தான் குறிப்பிடுகின்றார் என்று நான் கருதினதனால் 'என்' என்ற சொல்லை நான் சேர்க்கவில்லை. ஆயினும் உங்கள் ஐயத்திற்கிணங்கி, 'என்' என்ற சொல்லினை சேர்த்துள்ளேன்.

'ட3ம்ப3ம்', 'த3ம்ப4ம்' என்ற தெலுங்கு சொற்களின் பொருள் நோக்கவும்.

'ஜம்பம்' என்ற சொல், தெலுங்கில் இருப்பதாகத் தெரியவில்லை. அது 'த3ம்ப4ம்', 'ட3ம்ப3ம்' என்ற சொற்களே, தமிழில் மருவி அங்ஙனம் பேச்சு வழக்கிலுள்ளது என்று நம்புகின்றேன்.

வணக்கம்
கோவிந்தன்.