Saturday, March 27, 2010

தியாகராஜ கிருதி - ஸ்ரீ காந்த நீயெட3 - ராகம் ப3வ ப்ரிய - Sri Kaanta Niyeda - Raga Bhava Priya

பல்லவி
ஸ்ரீ காந்த நீயெட3 13லாதிப3
2செலங்க3 3லேதா3 வாதா3

அனுபல்லவி
4பாகாரி நுத நீவாரி
3லாப3லமுனு தெலியக3 லேதா3 (ஸ்ரீ)

சரணம்
5காக தை3த்யுனேக 61ரமுனனேய
கஞ்ஜஜாஸ்த்ரமை பரக3 லேதா3
7ஸ்ரீ கர த்3விஜுலை தா3ரினெருக3 லேனி
சிந்த நீகு தோசதே3மி த்யாக3ராஜ நுத (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
  • மா மணாளா!
  • இந்திரனால் போற்றப் பெற்றோனே!
  • சீரருள்வோனே! தியாராகராசன் போற்றும் மா மணாளா!

    • உன்னிடம் 'பலை அதிபலை' எனும் மந்திரங்கள் திகழவில்லையா?
    • வாதா?

    • உன்னவர்களின் ஆற்றலும், ஆற்றல்கேடும் (உனக்குத்) தெரியவில்லையா?

    • காக்கையரக்கனை நோக்கி ஓர் புல்லினை எறிய, (அது) பிரமாத்திரமாகி ஒளிரவில்லையா?
    • அந்தணராகியும், நெறி யறியாத கவலை, உனக்குத் தோன்றாததேன்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/ காந்த/ நீயெட3/ ப3ல/-அதிப3ல/
மா/ மணாளா/ உன்னிடம்/ 'பலை/ அதிபலை/

செலங்க3 லேதா3/ வாதா3/
(எனும் மந்திரங்கள்) திகழவில்லையா/ வாதா/


அனுபல்லவி
பாக/-அரி/ நுத/ நீவாரி/
பாகாசுரனின்/ பகைவன் (இந்திரனால்)/ போற்றப் பெற்றோனே/ உன்னவர்களின்/

3ல/-அப3லமுனு/ தெலியக3 லேதா3/ (ஸ்ரீ)
ஆற்றலும்/ ஆற்றல்கேடும்/(உனக்குத்) தெரியவில்லையா/


சரணம்
காக/ தை3த்யுனு/-ஏக/ ஸ1ரமுனனு/-ஏய/
காக்கை/ அரக்கனை (நோக்கி)/ ஓர்/ புல்லினை/ எறிய/ (அது)

கஞ்ஜஜ/-அஸ்த்ரமை/ பரக3 லேதா3/
பிரம/ அத்திரமாகி/ ஒளிரவில்லையா/

ஸ்ரீ/ கர/ த்3விஜுலை/ தா3ரினி/-எருக3 லேனி/
சீர்/ அருள்வோனே/ அந்தணராகியும்/ நெறி/ அறியாத/

சிந்த/ நீகு/ தோசது3/-ஏமி/ த்யாக3ராஜ/ நுத/ (ஸ்ரீ)
கவலை/ உனக்கு/ தோன்றாதது/ ஏன்/ தியாராகராசன்/ போற்றும்/ மா மணாளா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - செலங்க3 - செலங்க33 - செலக3ங்க3.

3 - லேதா3 - லேதே3மி.

7 - ஸ்ரீ கர த்3விஜுலை - ஸ்ரீ கராத்3விஜுலை : 'ஸ்ரீ கராத்3விஜுலை' என்பது சரியானால், 'ஸ்ரீ+கர+அத்3விஜுலை' என்று பிரிக்கப்படும். 'அத்3விஜுலை' என்பதற்கு, 'அந்தணத்திற்கு மாறுபட்டு' என்று பொருள் கொள்ளப்படும். இரண்டிலும் பொருளில் ஏதும் வேறுபாடில்லை.

Top

மேற்கோள்கள்
1 - 3லாதிப3 - பலை அதிபலை - விசுவாமித்திர முனிவர், இராமனுக்கும், இலக்குவனுக்கும் புகட்டிய, பசி, தாகம், களைப்பு ஆகியவற்றினை வெல்லும் திறமையளிக்கும், இரு மந்திரங்கள். வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 22 நோக்கவும்.

4 - பாகாரி - பாகாசுரனின் பகைவன் - இந்திரன். பாற்கடலிலிருந்து அமுதம் கடைந்தபின், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் தீராத பகைமை மூண்டது. அவர்களின் போரில், இந்திரன், பாகாசுரனைக் கொன்றான். (பாகவத புராணம், 8-வது புத்தகம், 10-வது அத்தியாயம் நோக்கவும்.)

5 - காக தை3த்யு - காக்கையரக்கன் - சீதையின் தனங்களை, உணவுக்கென கொத்திய காக்கையரக்கன். வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், அத்தியாயம் 38 நோக்கவும்

Top

6 - 1ரமுனனேய - 'ஸ1ரமு' என்பதற்கு, 'நாணல் புல்' என்றும், 'அம்பு' என்று பொருளாகும். ராமாயணத்தில், மேற்கூறியபடி (செய்யுள் 29) இதைப்பற்றி கூறப்பட்டது -

"(ராமன்) ஒரு தெர்ப்பையினை, தனது இருக்கையினின்று உருவி, பிரமாத்திரத்தினை, செபித்து, ஏவினான்;
அது, ஊழிக்கால நெருப்பு போன்று சுடர்விட்டுக்கொண்டு, காக்கையினை நோக்கி விரைந்தது."
(மேற்கூறிய வலைத்தளத்தில், 'செய்யுள் 30' என்று கொடுக்கப்பட்டுள்ளது.)

Top

விளக்கம்
7 - த்3விஜுலை - 'த்3விஜ' என்ற சொல், 'பறவை'யினையும், 'அந்தணரை'யும் குறிக்கும். ராமாயணத்தில், 'காக்கை' என்பதற்கு 'த்3விஜ' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தியாகராஜர், இவ்விடத்தில், அந்த சொல்லை (த்3விஜ), 'அந்தணரை'க் குறிக்கப் பயன்படுத்துகின்றார். இச்சொல்லினை, சிலேடையாக பயன்படுத்தி, 'நெறி அறியாத அந்தணர்களை நீ கண்டுகொள்ளாதுள்ளாய்' என்று இராமனை கேலி செய்கின்றார்.

புல் - தெர்ப்பை
நெறி - அந்தணத்துவம்

Top


Updated on 27 Mar 2010

No comments: