Showing posts with label Chandra Jyoti Raga. Show all posts
Showing posts with label Chandra Jyoti Raga. Show all posts

Wednesday, March 24, 2010

தியாகராஜ கிருதி - ஸ1ஸி1 வத3ன - ராகம் சந்த்3ர ஜ்யோதி - Sasi Vadana - Raga Chandra Jyoti

பல்லவி
1ஸி1 வத3ன ப4க்த ஜனாவன
1ங்கர நே தாள க3லனா

அனுபல்லவி
பஸி-தனமந்தே3 முனி யாக3முன நீ
பா3ஹு 1பராக்ரமமுனெருக3னா ராகா (ஸ1)

சரணம்
தி3ன தி3னமௌபாஸன ஜப தப
த்4யானமனு யாக3மு வேள மனஸுன புட்டின
423ம்பு3னி தோட3னு 3மாரீசுனி
பனி செரசின
யா த்யாக3ராஜார்சித (ஸ1)


பொருள் - சுருக்கம்
மதி வதனத்தோனே! தொண்டர்களைக் காப்போனே! மங்களமருள்வோனே! முழுமதி வதனத்தோனே! தியாகராசன் தொழும் மதி வதனத்தோனே!

  • நான் தாளவியலுமோ?
  • சிறு வயதிலேயே முனிவனின் வேள்வியினிலுனது கை வலிமையினை நானறியேனா?

    • தினந்தினமும் ஔபாசனை, செபம், தவம், தியானம் எனும் வேள்விகளின் போழ்து, (என்) மனத்தினில் எழுந்த பெரும் செருக்கினுடன், மாரீசனின் பணி முடித்தாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
1ஸி1/ வத3ன/ ப4க்த ஜன/-அவன/
மதி/ வதனத்தோனே/ தொண்டர்களை/ காப்போனே/

1ங்கர/ நே/ தாள/ க3லனா/
மங்களமருள்வோனே/ நான்/ தாள/ இயலுமோ/


அனுபல்லவி
பஸி/-தனமு-அந்தே3/ முனி/ யாக3முன/ நீ/
சிறு/ வயதிலேயே/ முனிவனின்/ வேள்வியினில்/ உனது/

பா3ஹு/ பராக்ரமமுனு/-எருக3னா/ ராகா/ (ஸ1)
கை/ வலிமையினை/ (நான்) அறியேனா/ முழு/ மதி...


சரணம்
தி3ன தி3னமு/-ஔபாஸன/ ஜப/ தப/
தினந்தினமும்/ ஔபாசனை/ செபம்/ தவம்/

த்4யானமு/-அனு/ யாக3மு/ வேள/ மனஸுன/ புட்டின/
தியானம்/ எனும்/ வேள்விகளின்/ போழ்து/ (என்) மனத்தினில்/ எழுந்த/

4ன/ ட3ம்பு3னி தோட3னு/ மாரீசுனி/
பெரும்/ செருக்கினுடன்/ மாரீசனின்/

பனி/ செரசின/-ஆ/ த்யாக3ராஜ/-அர்சித/ (ஸ1)
பணி/ முடித்த/ அந்த/ தியாகராசன்/ தொழும்/ மதி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பராக்ரமமுனெருக3னா - பராக்ரமமுனனெருக3னா.

2 - 3ம்பு3னி - ட3ம்பு4னி - த3ம்பு4னி : இவ்விடத்தில், இச்சொல்லுக்கு 'செருக்கு' என்று பொருளாகும். ஸம்ஸ்கிருதத்தின் 'த3ம்ப4' என்ற சொல் திரிந்து, 'ட3ம்பு3', 'ட3ம்ப3மு', 'ட3ம்ப3ரமு', 'த3ம்ப4மு', 'த3ம்பீ3கமு' என்று தெலுங்கில் வழங்கும்.

'ட3ம்பு3னி' என்பது சரியென்றால், தியாகராஜர் 'ட3ம்ப3' என்ற தெலுங்கு சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம். 'த3ம்பு4னி' என்பது சரியென்றால், அவர் 'த3ம்ப4' என்ற ஸம்ஸ்கிருத சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் 'ட3ம்பு4னி' என்பது தவறாகும். எனவே 'ட3ம்பு3னி' என்ற சொல் ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
3 - மாரீசுனி பனி செரசின - மாரீசனின் பணி முடித்த - மாரீசனின் செருக்கினையொழித்தது போன்று. (வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 38-வது அத்தியாயத்தில்) மாரீசன், ராவணனிடம், ராமனைப் பற்றிக் கூறுவது -

"அறியாமையினாலும், கருவத்தினாலும், ராகவனை சிறுவன் என்று கருதி,
விசுவாமித்திரரின் வேதிகையினை நோக்கி, வெகு வேகமாகப் பாய்ந்தேன்.
அவ்வமயம், அவனால், பகைவனைக் கொல்லும் திறமை வாய்ந்த கூரிய அம்பெய்யப்பட்டது.
அதனால் அடிக்கப்பட்டு, 100 யோஜனை தூரம் (800 மைல்கள்) கடலில் தள்ளப்பட்டேன்.
இவ்விதம், என்னைக் கொல்ல விரும்பாத அவ்வீரனால், நான் காக்கப்பட்டேன்.
ராமனின் அம்பு வேகத்தினால் நான் நினைவிழந்து, ஆழ்கடலில் வீழ்ந்தேன்.
நினைவு திரும்பிய பின்னர், இலங்கையை நோக்கிப் புறப்பட்டேன்."

Top

விளக்கம்
முனிவன் - விசுவாமித்திரர்.
ஔபாசனை - அந்தணர்கள் இயற்றும் அன்றாட வேள்வி

Top


Updated on 24 Mar 2010

Tuesday, March 23, 2010

தியாகராஜ கிருதி - பா3கா3யெனய்ய - ராகம் சந்த்3ர ஜ்யோதி - Baagaayenayya - Raga Chandra JyOti

பல்லவி
பா3கா3யெனய்ய நீ மாயலெந்தோ
1ப்3ரஹ்மகைன கொனியாட3 தரமா

அனுபல்லவி
2கா3ருட3முனுயொனரிஞ்சுசுனு
3நே காத3னுசு பல்குடயு (பா3)

சரணம்
அல நாடு3 கௌரவுலனணசமன
4அலரி தோ3ஸமனு 5நருனி ஜூசி 6பாப
2லமு நீகு தனகு லேத3னி
சக்கக3
பாலனமு ஸேய லேதா3 த்யாக3ராஜ நுத (பா3)


பொருள் - சுருக்கம்
அய்யா, தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • ரொம்ப நல்லாயிருக்கு, உனது மாயைகள்!
  • பிரமனுக்காகிலும் புரிந்துகொள்ளத் தரமா?

  • இந்த கருடமந்திரத்தினை விதித்துவிட்டு, (சொல்வது) 'நானல்ல' என்றும் சொல்கின்றாய்;

    • அந்த நாள், கௌரவர்களை (நீ) அடக்கச் சொல்ல,
    • சண்டை பாவமெனும் நரனை நோக்கி,
    • 'பாவத்தின் பயன் உனக்கும் எனக்குமில்லை' யென, நன்றாக விளக்கவில்லையா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பா3கு3-ஆயெனு/-அய்ய/ நீ/ மாயலு/-எந்தோ/
நல்லாயிருக்கு/ அய்யா/ உனது/ மாயைகள்/ ரொம்ப/

ப்3ரஹ்மகு/-ஐன/ கொனியாட3/ தரமா/
பிரமனுக்கு/ ஆகிலும்/ புரிந்துகொள்ள/ தரமா/


அனுபல்லவி
ஈ/ கா3ருட3முனு/-ஒனரிஞ்சுசுனு/
இந்த/ கருடமந்திரத்தினை/ விதித்துவிட்டு/

நே/ காது3/-அனுசு/ பல்குடயு/ (பா3)
(சொல்வது) 'நான்/ அல்ல/ என்றும்/ சொல்கின்றாய்/


சரணம்
அல/ நாடு3/ கௌரவுலனு/-அணசு/-அன/
அந்த/ நாள்/ கௌரவர்களை/ (நீ) அடக்க/ சொல்ல/

அலரி/ தோ3ஸமு/-அனு/ நருனி/ ஜூசி/ பாப/
சண்டை/ பாவம்/ எனும்/ நரனை/ நோக்கி/ 'பாவத்தின்/

2லமு/ நீகு/ தனகு/ லேது3/-அனி/ சக்கக3/
பயன்/ உனக்கும்/ எனக்கும்/ இல்லை/ யென/ நன்றாக/

பாலனமு ஸேய லேதா3/ த்யாக3ராஜ/ நுத/ (பா3)
விளக்கவில்லையா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - கா3ருட3முனு - ‘கருட மந்திரம்’ - அரவின் விடமிறக்கும் மந்திரம் - மருமமான சொற்களென

3 - நே காது3 - நானல்ல - கீதையில் கண்ணன் கூறுவது (10-வது அத்தியாயம் 37-வது செய்யுள்) -

"வ்ருஷ்ணிகளில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் தனஞ்சயன் (அருச்சுனன்);
முனிவர்களில் நான் வியாசர்; கவிகளில் உஷனஸ்."

'வ்ருஷ்ணி' என்பது கண்ணன் பிறந்த குலம். நோக்கம் என்னவென்றால், "வ்ருஷ்ணி குலத்தினில் நான் பிறந்தாலும், நீயும் நானே; எனவே, நான் நானல்ல; அதுபோன்றே, நீயும் நீயல்ல. (அனைத்துயிர்களிலும் உள்ளியங்கும் ஆன்மா ஒன்றேயென.)

Top

4 - அலரி தோ3ஸமு - சண்டை பாவம் - கீதையில் (முதல் அத்தியாயம், செய்யுட்கள் 28 மற்றும் 45) -

"கண்ணா! போருக்குத் தயாராக நிற்கும், என்னுடைய சுற்றத்தினரைக் கண்டு,
எனதுடல் தளர்கின்றது; நா வறள்கின்றது;"
"அரச போகத்தின் பேராசையினால், சுற்றத்தினரையும் கொன்று,
ஐயகோ! யாம் பெரும் பாவம் செய்யத் துணிந்துள்ளோம்."

5 - நருனி - நரன் - அருச்சுனன் - அருச்சுனனும், கண்ணனும் முற்பிறவியில் நர-நாராயண எனும் இருடிகளாவர்.

கண்ணன் உபதேசித்த கீதை கிருஷ்ண - அர்ஜுன உரையாடல் என்றும், நர - நாராயண உரையாடல் என்றும் கூறப்படும்.

நர - நாராயண இருடிகளைப் பற்றி அறிய பாகவத புராணம், 12-வது புத்தகம், 8-வது அத்தியாயம் நோக்கவும்.

Top

6 - பாப ப2லமு நீகு தனகு லேத3 - பாவத்தின் பயன் உனக்கும் எனக்கும் இல்லை. இது குறித்து கீதையில் கண்ணன் கூறுவது (இரண்டாவது அத்தியாயம், 19-வது செய்யுள்) -

"யார் இதனை (ஆன்மாவை) 'கொல்பவன்' என்றும், 'கொல்லப்படுபவன்' என்றும் கருதுகின்றனரோ,
அவர் அறியார்; இஃது கொல்வதுமில்லை; கொல்லப்படுவதுமில்லை."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் கீதையின் (அனைத்து) ஆங்கில மொழிபெயர்ப்புகளின் தமிழாக்கம்)

Top

விளக்கம்
1 - ப்3ரஹ்மகைன கொனியாட3 - கண்ணன் கீதையில் கூறும் மொழிகளைப் புரிந்துகொள்ள பிரமனாலும் இயலுமா என்று தியாகராஜர் வியக்கின்றார்.

2 - கா3ருட3முனு - கருட மந்திரம் - சரணத்தில் கூறப்பட்டதனைக் குறிக்கும். சரணத்தினைப் படித்த பின்னரே அனுபல்லவிக்குப் பொருள் கொள்ள இயலும்.

Top

4 - அலரி - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தில், இதற்கு 'நடுங்கினான்' என்றும், இன்னொரு புத்தகத்தில், 'தயங்கினான்' என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்குச் சொல் 'அலரு' அல்லது 'அலரி' என்பதற்கு அத்தகைய பொருளேதும் இல்லை. எதுகை - மோனையினை நோக்குகையில் 'அல' என்று தொடங்கும் சொல் பொருந்தலாம்.

'அலரி' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'மலர்தல்' என்று பொருளாகும். 'அலர்தல்' என்ற தமிழச்சொல்லுக்கும் அத்தகைய பொருளே. ஆனால், 'அலறு' என்று தமிழ்ச் சொல்லுக்கும், 'அத3ரு' என்ற தெலுங்கு சொல்லுக்கும், 'நடுங்குதல்' என்று பொருளாகும். 'அல்லரி' என்ற தெலுங்கு சொல்லுக்கு, 'சண்டை' என்று பொருளாகும்.

எனவே, 'அலறு' என்ற தமிழ்ச்சொல்லைத் தியாகராஜர் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது 'அத3ரி' என்று தெலுங்கு சொல், தவறாக, 'அலரி' என்று கொடுக்கப்பட்டிருக்கலாம்.

இங்கு, தெலுங்கு சொல் 'அல்லரி' (சண்டை) என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

Top


Updated on 23 Mar 2010