Thursday, February 4, 2010

தியாகராஜ கிருதி - நீகெவரி போ34ன - ராகம் ஸு1த்34 ஸாவேரி- Nikevari Bodhana - Raga Suddha Saveri

பல்லவி
நீகெவரி போ34

அனுபல்லவி
ஸாகேத ராம ஸன்-முனி ஸ்தோம (நீ)

சரணம்
கலகலமனி நாதோ பலுககுன்னாவு
தலபு வேரைனதி3 த்யாக3ராஜ வினுத (நீ)


பொருள் - சுருக்கம்
சாகேத இராமா! நன்முனிவரால் போற்றப் பெற்றோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • உனக்கு யாருடைய தூண்டுதல்?
    • கலகலவென்று என்னுடன் பேசாமலுள்ளாய்;
    • எண்ணம் மாறுபட்டுள்ளது;

  • உனக்கு யாருடைய தூண்டுதல்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீகு/-எவரி/ போ34ன/
உனக்கு/ யாருடைய/ தூண்டுதல்/


அனுபல்லவி
ஸாகேத/ ராம/ ஸன்-முனி/ ஸ்தோம/ (நீ)
சாகேத/ இராமா/ நன்முனிவரால்/ போற்றப் பெற்றோனே/


சரணம்
கலகலமு-அனி/ நாதோ/ பலுகக/-உன்னாவு/
கலகலவென்று/ என்னுடன்/ பேசாமல்/ உள்ளாய்/

தலபு/ வேரு-ஐனதி3/ த்யாக3ராஜ/ வினுத/ (நீ)
எண்ணம்/ மாறுபட்டுள்ளது/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
Top


Updated on 05 Feb 2010

No comments: