Thursday, February 4, 2010

தியாகராஜ கிருதி - தா3ரினி தெலுஸுகொண்டி - ராகம் ஸு1த்34 ஸாவேரி - Daarini Telusukonti - Raga Suddha Saveri

பல்லவி
1தா3ரினி தெலுஸுகொண்டி த்ரிபுர
ஸுந்த3ரி நின்னே ஸ1ரணண்டி

அனுபல்லவி
மாருனி ஜனகுடை3ன மா த31ரத2
குமாருனி ஸோத3ரி த3யா-பரி மோக்ஷ (தா3)

சரணம்
சரணம் 1
அம்ப3 த்ரி-ஜக3தீ3ஸ்1வரி முக2 ஜித விது4
பி3ம்ப3 ஆதி3 புரமுன நெலகொன்ன
கனகாம்ப3ரி நம்மின வாரிகபீ4ஷ்ட
வரம்பு3லொஸகு3 தீ3ன லோக ரக்ஷகி
அம்பு3ஜ ப4வ புருஹூத ஸநந்த3
2தும்பு3ரு நாரது3லந்த3ரு நீது3
பத3ம்பு3னு கோரி ஸதா3
நித்யானந்தா3ம்பு3தி4லோனோலலாடு3சுண்டே3 (தா3)


சரணம் 2
3மஹதை3ஸ்1வர்யமொஸகி3 தொலி கர்ம
3ஹனமுனு கொட்டி ப்3ரோசு தல்லி
கு3ஹ க3ஜ முக2 ஜனனி அருண பங்கே-
ருஹ நயனே யோகி3 ஹ்ரு2த்ஸத3னே
துஹினாசல தனயா நீ சக்கனி
மஹிமாதிஸ1யம்முல சேதனு ஈ
மஹிலோ முனி க3ணமுலு ப்ரக்ரு2தி
விரஹிதுலை நித்யானந்து3லைன (தா3)


சரணம் 3
ராஜித மணி க3ண பூ4ஷணி மத33
ராஜ க3மனி லோக ஸ1ங்கரி 43னுஜ
ராஜ கு3ருனி வாஸர
ஸேவ
தனகே ஜன்ம ப2லமோ கனுகொ3ண்டினி
ஆ-ஜன்மமு பெத்33லு தம மதி3லோ
நீ ஜபமே முக்தி மார்க3மனுகொன
ராஜ ஸே12ருண்ட3கு3 ஸ்ரீ 5த்யாக3ராஜ
மனோ-ஹரி கௌ3ரி பராத்பரி (தா3)


பொருள் - சுருக்கம்
  • திரிபுர சுந்தரி!
  • மாரனையீன்ற எமது தசரத குமாரனின் சோதரியே! மிக்கு இரக்கமுடையவளே!
  • அம்மா, மூவுலகினுக்கும் தலைவியே! மதி பிம்பத்தினை வெல்லும் முகத்தினளே! ஆதி புரத்தினில் நிலைபெற்ற, பொன்னாடை யணிபவளே! நம்பினோருக்கு, விரும்பிய வரங்களளிக்கும், எளியோரைக் காப்பவளே!
  • பெரும் செல்வமளித்து, முன்வினையெனும் அடவியினையழித்துக் காக்கும் தாயே! முருகன், யானை முகத்தோனையீன்றவளே! செந்தாமரைக் கண்ணினளே! யோகியர் இதயத்துறையே! பனிமலையின் மகளே!
  • ஒளிரும் மணிகளாலான நகையணிபவளே! மத களிற்றின் நடையினளே! உலகிற்கு நன்மையருள்பவளே! பிறையணிவோனாகிய தியாகராசனின் உள்ளம் கவர்ந்தவளே! கௌரியே! பராபரியே!

  • முத்தி நெறியினையறிந்துகொண்டேன்;
  • உன்னையே சரணடைந்தேன்;

    • மலரோன், இந்திரன், சனந்தனர், தும்புரு, நாரதர் ஆகியோர் யாவரும், உனது திருவடியினைக் கோரி, எவ்வமயமும் அழிவற்ற, ஆனந்தக் கடலினில் களித்திருக்கும் நெறியினையறிந்துகொண்டேன்;
    • உனது சிறந்த, அதிசயமான, மகிமைகளினால், இப் புவியில், முனிவர்கள், இயற்கையின் பற்றொழித்து, அழிவற்ற ஆனந்தமுடைத்தோராகிய நெறியினையறிந்துகொண்டேன்;
    • வெள்ளிக்கிழமை சேவையினை, எனக்கு எப்பிறவியின் பயனாகவோ, கண்டுகொண்டேன்;
    • வாழ்நாள் முழுதும், சான்றோர் தமதுள்ளத்தினில், உனது செபமே முத்திப் பாதையென்று கொள்ள, (முத்தி) நெறியினையறிந்துகொண்டேன்;


  • உன்னையே சரணடைந்தேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தா3ரினி/ தெலுஸுகொண்டி/ த்ரிபுர/
நெறியினை/ அறிந்துகொண்டேன்/ திரிபுர/

ஸுந்த3ரி/ நின்னே/ ஸ1ரணு/-அண்டி/
சுந்தரி/ உன்னையே/ சரண்/ அடைந்தேன்/


அனுபல்லவி
மாருனி/ ஜனகுடை3ன/ மா/ த31ரத2/
மாரனை/ ஈன்ற/ எமது/ தசரத/

குமாருனி/ ஸோத3ரி/ த3யா-பரி/ மோக்ஷ/ (தா3)
குமாரனின்/ சோதரியே/ மிக்கு இரக்கமுடையவளே/ முத்தி/ நெறியினை...


சரணம்
சரணம் 1
அம்ப3/ த்ரி-ஜக3த்/-ஈஸ்1வரி/ முக2/ ஜித/ விது4/
அம்மா/ மூவுலகினுக்கும்/ தலைவியே/ முகம்/ வெல்லும்/ மதி/

பி3ம்ப3/ ஆதி3/ புரமுன/ நெலகொன்ன/
பிம்பத்தினை/ ஆதி/ புரத்தினில்/ நிலைபெற்ற/

கனக/-அம்ப3ரி/ நம்மின வாரிகி/-அபீ4ஷ்ட/
பொன்/ ஆடை அணிபவளே/ நம்பினோருக்கு/ விரும்பிய/

வரம்பு3லு/-ஒஸகு3/ தீ3ன லோக/ ரக்ஷகி/
வரங்கள்/ அளிக்கும்/ எளியோரை/ காப்பவளே/

அம்பு3ஜ ப4வ/ புருஹூத/ ஸநந்த3ன/
மலரோன்/ இந்திரன்/ சனந்தனர்/

தும்பு3ரு/ நாரது3லு/-அந்த3ரு/ நீது3/
தும்புரு/ நாரதர் ஆகியோர்/ யாவரும்/ உனது/

பத3ம்பு3னு/ கோரி/ ஸதா3/ நித்ய/-ஆனந்த3-/
திருவடியினை/ கோரி/ எவ்வமயமும்/ அழிவற்ற/ ஆனந்த/

அம்பு3தி4லோன/-ஓலலாடு3சு/-உண்டே3/ (தா3)
கடலினில்/ களித்து/ இருக்கும்/ நெறியினை...


சரணம் 2
மஹத்/-ஐஸ்1வர்யமு/-ஒஸகி3/ தொலி/ கர்ம/
பெரும்/ செல்வம்/ அளித்து/ முன்/ வினையெனும்/

3ஹனமுனு/ கொட்டி/ ப்3ரோசு/ தல்லி/
அடவியினை/ அழித்து/ காக்கும்/ தாயே/

கு3ஹ/ க3ஜ/ முக2/ ஜனனி/
முருகன்/ யானை/ முகத்தோனை/ ஈன்றவளே/

அருண பங்கே-ருஹ/ நயனே/ யோகி3/ ஹ்ரு2த்/-ஸத3னே/
செந்தாமரை/ கண்ணினளே/ யோகியர்/ இதயத்து/ உறையே/

துஹின/-அசல/ தனயா/ நீ/ சக்கனி/
பனி/ மலையின்/ மகளே/ உனது/ சிறந்த/

மஹிம/-அதிஸ1யம்முல சேதனு/ ஈ/
மகிமைகளின்/ அதிசயத்தினால்/ இந்த/

மஹிலோ/ முனி க3ணமுலு/ ப்ரக்ரு2தி/
புவியில்/ முனிவர்கள்/ இயற்கையின்/

விரஹிதுலை/ நித்ய/-ஆனந்து3லைன/ (தா3)
பற்றொழித்து/ அழிவற்ற/ ஆனந்தமுடைத்தோராகிய/ நெறியினை...


சரணம் 3
ராஜித/ மணி க3ண/ பூ4ஷணி/ மத3/ க3ஜ/
ஒளிரும்/ மணிகளாலான/ நகையணிபவளே/ மத/ களிறு/

ராஜ/ க3மனி/ லோக/ ஸ1ங்கரி/
அரசன்/ நடையினளே/ உலகிற்கு/ நன்மையருள்பவளே/

3னுஜ/ ராஜ/ கு3ருனி/ வாஸர/ ஸேவ/
அரக்கர்/ அரச/ குரு (வெள்ளி)/ கிழமை/ சேவையினை/

தனகு/-ஏ/ ஜன்ம/ ப2லமோ/ கனுகொ3ண்டினி/
எனக்கு/ எந்த/ பிறவியின்/ பயனாகவோ/ கண்டுகொண்டேன்/

ஆ-ஜன்மமு/ பெத்33லு/ தம/ மதி3லோ/
வாழ்நாள் முழுதும்/ சான்றோர்/ தமது/ உள்ளத்தினில்/

நீ/ ஜபமே/ முக்தி/ மார்க3மு/-அனுகொன/
உனது/ செபமே/ முத்தி/ பாதை/ என்று கொள்ள/

ராஜ/ ஸே12ருண்ட3கு3/ ஸ்ரீ த்யாக3ராஜ/
பிறை/ அணிவோனாகிய/ ஸ்ரீ தியாகராசனின்/

மனோ/-ஹரி/ கௌ3ரி/ பராத்பரி/ (தா3)
உள்ளம்/ கவர்ந்தவளே/ கௌரியே/ பராபரியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தா3ரினி - த3ரினி : அனுபல்லவியினையும், அனைத்து சரணங்களையும் பல்லவியுடன் இணைக்கையில், இச்சொல்லுக்கு 'நெறி்' அல்லது 'பாதை' என்று பொருள் படும். 'த3ரி' என்ற சொல்லுக்கு அத்தகைய பொருளில்லை. எனவே, சங்கதி பாடுவதற்காக, 'தா3ரினி' என்ற சொல்லினை 'த3ரினி' என்று மாற்றப்பட்டுள்ளது என்று கருதுகின்றேன்.

Top

மேற்கோள்கள்
2 - தும்பு3ரு - கந்தருவரின் மன்னன் - வானோரின் பாணன்.

3 - ஐஸ்1வர்ய - அட்ட ஐசுவரியம் - எண்வகைச் செல்வம் - அடிமை, இராசாங்கம், சுற்றம், நெல், பொன், மக்கள், மணி, வாகனம் ஆகியவை. அணிமா முதலான எண் சித்திகளையும் ஐசுவரியங்களாகக் கருதப்படும்.

5 - த்யாக3ராஜ - இவ்விடத்தில் திருவொற்றியூர் சிவனைக் குறிக்கும்.

Top

விளக்கம்
இப்பாடல், சென்னையை அடுத்த, திருவொற்றியூர், தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் எனப்படும், 'திரிபுர சுந்தரி'யினைக் குறித்து பாடப்பெற்றது.

4 - 3னுஜ ராஜ கு3ருனி வாஸர - 'வெள்ளி' எனப்படும் 'சுக்கிரன்', அரக்கரின் அரச குரு ஆவார். எனவே, 'வெள்ளிக் கிழமை' என்பதற்கு, தியாகராஜர், 'த3னுஜ ராஜ கு3ருனி வாஸர' - அரக்கரின் அரச குருவின் கிழமை - என்று கூறுகின்றார்.

Top

தசரத குமாரன் - இராமன்
ஆதி புரம் - சென்னையை யடுத்த திருவொற்றியூர்
அடவி - காடு
பனிமலை - இமயமலை
இயற்கை - ஐம்பூதங்கள் - பரம்பொருளின் வெளிப்படைத் தோற்றம்
பிறையணிவோன் - சிவன்
தியாகராசன் - திருவொற்றியூர் இறைவனின் பெயர்

Top


Updated on 04 Feb 2010

No comments: