Saturday, January 2, 2010

தியாகராஜ கிருதி - பலுகவேமி நா தை3வமா - ராகம் பூர்ண சந்த்3ரிக - Palukavemi Naa Daivama - Raga Purna Chandrika

பல்லவி
பலுகவேமி நா தை3வமா
பருலு நவ்வேதி3 ந்யாயமா

அனுபல்லவி
அலுக3 காரணமேமிரா ராம
1நீவாடி3ஞ்சினட்லுயாடி3ன நாதோ (ப)

சரணம்
தல்லி தண்ட்3ரி ப4க்தினொஸகி3 ரக்ஷிஞ்சிரி
தக்கின வாரலெந்தோ ஹிம்ஸிஞ்சிரி
தெலிஸியூரகுண்டே3தி3யென்னாள்ளுரா
தே3வாதி3 தே3வ த்யாக3ராஜுனிதோ (ப)


பொருள் - சுருக்கம்
எனதிறைவா! இராமா! வானோர் தலைவா!
  • பேசமாட்டாயோ?
  • பிறர் நகைத்தல் நியாயமா?

    • சினமுறக் காரணமென்னவய்யா?
    • நீ ஆட்டிவைத்தபடி ஆடின என்னுடன் பேசமாட்டாயோ?

    • தாய் தந்தையர், பக்தியை அருளி, காத்தனர்;
    • மற்றவர்கள் (என்னை) மிக்கு துன்புறுத்தினர்;
    • தெரிந்தும், சும்மாயிருப்பது எத்தனை நாளைக்கய்யா?


  • தியாகராசனிடம் பேசமாட்டாயோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பலுகவு-ஏமி/ நா/ தை3வமா/
பேசமாட்டாயோ/ எனது/ இறைவா/

பருலு/ நவ்வேதி3/ ந்யாயமா/
பிறர்/ நகைத்தல்/ நியாயமா/


அனுபல்லவி
அலுக3/ காரணமு/-ஏமிரா/ ராம/
சினமுற/ காரணம்/ என்னவய்யா/ இராமா/

நீவு/-ஆடி3ஞ்சின/-அட்லு/-ஆடி3ன/ நாதோ/ (ப)
நீ/ ஆட்டிவைத்தபடி/ ஆடின/ என்னுடன்/ பேசமாட்டாயோ...


சரணம்
தல்லி/ தண்ட்3ரி/ ப4க்தினி/-ஒஸகி3/ ரக்ஷிஞ்சிரி/
தாய்/ தந்தையர்/ பக்தியை/ அருளி/ காத்தனர்/

தக்கின வாரலு/-எந்தோ/ ஹிம்ஸிஞ்சிரி/
மற்றவர்கள்/ (என்னை) மிக்கு/ துன்புறுத்தினர்/

தெலிஸி/-ஊரக/-உண்டே3தி3/-என்னாள்ளுரா/
தெரிந்தும்/ சும்மா/ இருப்பது/ எத்தனை நாளைக்கய்யா/

தே3வ-ஆதி3/ தே3வ/ த்யாக3ராஜுனிதோ/ (ப)
வானோர்/ தலைவா/ தியாகராசனிடம்/ பேசமாட்டாயோ...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஆடி3ஞ்சினட்லு - ஆடி3ஞ்சினடு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்



Updated on 02 Jan 2010

No comments: