Tuesday, December 29, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ராம ராம ராம - ராகம் நீலாம்ப3ரி - Sri Rama Rama Rama - Raga Nilambari

பல்லவி
ஸ்ரீ ராம ராம ராம ஸ்ரீ மானஸாப்3தி4 ஸோம
1நாராயணாப்த காம நளினாக்ஷ பவ்வளிஞ்சு

சரணம்
சரணம் 1
2பல்லவாத4ர வரேண்ய பாபேப4 ஸிம்ஹ த4ன்ய
மல்லிகா தல்பமந்து3 மா-த4வ பவ்வளிஞ்சு (ஸ்ரீ)


சரணம் 2
தா4ரா த4ராப4 தே3ஹ தாராதி4பானன ஸதா3
நீ ராக கோரியுண்டி ஸ்ரீ ராம பவ்வளிஞ்சு (ஸ்ரீ)


சரணம் 3
ஜனக ராஜிண்ட புட்டி ஜானகி செட்ட பட்டி
கனகமௌ ஸுரடி பட்டி காசினதி3 பவ்வளிஞ்சு (ஸ்ரீ)


சரணம் 4
வர்ணிம்ப தரமு கானி ஸ்வர்ணம்பு3 மேனு 3ஸீதா
பூர்ணமௌ ப4க்திதோனு பூஜிஞ்சு பவ்வளிஞ்சு (ஸ்ரீ)


சரணம் 5
ஆஸு1கா31ன ஸு-ஸ1யன அம்போ4ஜ பத்ர நயன
4ஆஸ1தோ த்யாக3ராஜு 5அர்சிஞ்ச பவ்வளிஞ்சு (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
இராமா! இலக்குமி உள்ளக் கடலின் மதியே! நாராயணா! எண்ணியவை அடைவோனே! கமலக்கண்ணா! மொட்டிதழ்களோனே! தலைசிறந்தோனே! பாவக் கரிக்கு சிங்கமே! மங்களமானவனே! மாதவா! மழைமுகில் நிகருடலோனே! தாரையரசன் வதனத்தோனே! காற்றுண்போன் நல்லணையோனே! தாமரையிதழ்க் கண்ணா!

  • பள்ளிகொள்வாய்;
  • மல்லிகைப் படுக்கையினில், பள்ளிகொள்வாய்;
  • எவ்வமயமும், உனது வரவையே கோரியிருந்தேன்; பள்ளிகொள்வாய்;
  • சனக மன்னனின் இல்லத்தினில் பிறந்து, சானகி, (உனது) கைப் பற்றி, தங்கத்தாலான விசிறி பிடித்து, காத்துள்ளனள்; பள்ளிகொள்வாய்;
  • வருணிக்க இயலாத, பொன்மேனியுடை சீதை, முழுமையான பக்தியுடன் தொழுகின்றனள்; பள்ளிகொள்வாய்
  • ஆசையுடன், தியாகராசன் அருச்சிக்க, பள்ளிகொள்வாய்.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ராம/ ராம/ ஸ்ரீ/ மானஸ/-அப்3தி4/ ஸோம/
ஸ்ரீ ராமா/ இராமா/ இராமா/ இலக்குமி/உள்ள/ கடலின்/ மதியே/

நாராயண/-ஆப்த/ காம/ நளின/-அக்ஷ/ பவ்வளிஞ்சு/
நாராயணா/ அடைவோனே/ எண்ணியவை/ கமல/ கண்ணா/ பள்ளிகொள்வாய்/


சரணம்
சரணம் 1
பல்லவ/-அத4ர/ வரேண்ய/ பாப/-இப4/ ஸிம்ஹ/ த4ன்ய/
மொட்டு/ இதழ்களோனே/ தலைசிறந்தோனே/ பாவ/ கரிக்கு/ சிங்கமே/ மங்களமானவனே/

மல்லிகா/ தல்பமு-அந்து3/ மா-த4வ/ பவ்வளிஞ்சு/ (ஸ்ரீ)
மல்லிகை/ படுக்கையினில்/ மாதவா/ பள்ளிகொள்வாய்/


சரணம் 2
தா4ரா த4ர/-ஆப4/ தே3ஹ/ தாரா/-அதி4ப/-ஆனன/ ஸதா3/
மழை முகில்/ நிகர்/ உடலோனே/ தாரை/ அரசன்/ வதனத்தோனே/ எவ்வமயமும்/

நீ/ ராக/ கோரி/-உண்டி/ ஸ்ரீ ராம/ பவ்வளிஞ்சு/ (ஸ்ரீ)
உனது/ வரவையே/ கோரி/ இருந்தேன்/ ஸ்ரீ ராமா/ பள்ளிகொள்வாய்/


சரணம் 3
ஜனக/ ராஜு/-இண்ட புட்டி ஜானகி செட்ட பட்டி
சனக/ மன்னனின்/ இல்லத்தினில்/ பிறந்து/ சானகி/ (உனது) கை/ பற்றி/

கனகமௌ/ ஸுரடி/ பட்டி/ காசினதி3/ பவ்வளிஞ்சு/ (ஸ்ரீ)
தங்கத்தாலான/ விசிறி/ பிடித்து/ காத்துள்ளனள்/ பள்ளிகொள்வாய்/


சரணம் 4
வர்ணிம்ப/ தரமு கானி/ ஸ்வர்ணம்பு3/ மேனு/ ஸீதா/
வருணிக்க/ இயலாத/ பொன்/ மேனியுடை/ சீதை/

பூர்ணமௌ/ ப4க்திதோனு/ பூஜிஞ்சு/ பவ்வளிஞ்சு/ (ஸ்ரீ)
முழுமையான/ பக்தியுடன்/ தொழுகின்றனள்/ பள்ளிகொள்வாய்/


சரணம் 5
ஆஸு13/-அஸ1ன/ ஸு-ஸ1யன/ அம்போ4ஜ/ பத்ர/ நயன/
காற்று/ உண்போன்/ நல்லணையோனே/ தாமரை/ இதழ்/ கண்ணா/

ஆஸ1தோ/ த்யாக3ராஜு/ அர்சிஞ்ச/ பவ்வளிஞ்சு/ (ஸ்ரீ)
ஆசையுடன்/ தியாகராசன்/ அருச்சிக்க/ பள்ளிகொள்வாய்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், ராகத்தின் பெயர் 'கோ3பிகா வஸந்தம்' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

3 - ஸீதா - ஸீத.

4 - ஆஸ1தோ - ஆஸதோ : எதுகை-மோனையினை நோக்குகையில் 'ஆஸ1தோ' என்பதே பொருந்தும் எனக் கருதுகின்றேன்.

5 - அர்சிஞ்ச - அர்சிஞ்சு.

Top

மேற்கோள்கள்
1 - ஆப்த காம - எண்ணியவை அடைவோனே - இறைவன் எண்ணியவை அடையப்பெறும். விஷ்ணு ஸஹஸ்ரநாமம் - 'காமீ' (653) மற்றும் 'ஸித்34 ஸங்கல்ப' (253) என்ற போற்றிகளின் பொருள் நோக்கவும்.

Top

விளக்கம்
2 - பல்லவாத4ர வரேண்ய - 'மொட்டிதழ்களோனே', 'தலைசிறந்தோனே' என இரண்டு போற்றிகளாகவோ அல்லது 'மொட்டிதழோரால் (பெண்டிரால்) வேண்டப்படுவோன்' என்று ஒரு போற்றியாகவோ பொருள் கொள்ளலாம். ஆனால், பின் கொடுக்கப்பட்டுள்ள போற்றி, இந்த கீர்த்தனையில் பொருந்தாது என்பதனாலும், பரம்பரையாக, (புத்தகங்களில் உள்ளபடி) முன்னர் கூறிய இரண்டு போற்றிகளே பொருளாக ஏற்கப்பட்டுள்ளமையால், அங்ஙனமே பொருள் கொள்ளப்பட்டது.

பாவக் கரிக்கு சிங்கமே - பாவமெனும் கரிகளை வெல்லும் சிங்கம.
தாரையரசன் - மதி
காற்றுண்போன் - அரவு - சேடன்

Top


Updated on 29 Dec 2009

3 comments:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 4 ல் ‘வருணிக்க/ தரம்/ அற்ற/ பொன்/ மேனியுடை/ சீதை/’ என்பது எதிர்மறையான பொருள் போல் ஒலிக்கிறது. தரமு கானி என்பதனை இயலாத என்று கூறுவது நன்று என எண்ணுகிறேன்.
வணக்கம்
கோவிந்தசாமி

Govindaswamy said...
This comment has been removed by a blog administrator.
V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
தவறினை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. வருணிக்கத் தரமற்ற என்பதற்கு பதிலாக வருணிக்க இயலாத என்று மாற்றியுள்ளேன்.
நன்றி,
வணக்கம்
வே கோவிந்தன்