Monday, December 28, 2009

தியாகராஜ கிருதி - லாலியூக3வே - ராகம் நீலாம்ப3ரி - Laaliyugave - Raga Nilambari

பல்லவி
லாலியூக3வே மா பாலி 1தை3வமா

அனுபல்லவி
லாலியூக3வே நுனு கா3லி 2திண்டி3 பான்பு பைனி (லா)

சரணம்
பம்மின வேடு3க மீர தம்முலதோனு
கம்மனி விடெ3மொஸகு3யா ஜனகாத்மஜதோனு
பொ3ம்ம தே3வர தண்ட்3ரி பூ4மீஸு1ல தோட3னு
3ஸம்மதமுன த்யாக3ராஜு ஸன்னுதி ஸேயக3 (லா)


பொருள் - சுருக்கம்
எமைக் காக்கும் தெய்வமே! பிரம தேவனை ஈன்றோனே!
  • தாலாடுவாய்;
  • தாலாடுவாய்; காற்றுண்போனின் மெதுவான அணை மீது தாலாடுவாய்;
    • களிக்கும் வேடிக்கை மிக, பின்னோருடனும்,
    • மணக்கும் வீடிகையளிக்கும் அந்த சனகன் மகளுடனும்,
    • புவியாள்வோருடனும்,
    • மனதார, தியாகராசன் (உன்னை) போற்றி செய்ய,

  • தாலாடுவாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லாலி-ஊக3வே/ மா/ பாலி/ தை3வமா/
தாலாடுவாய்/ எமை/ காக்கும்/ தெய்வமே/


அனுபல்லவி
லாலி-ஊக3வே/ நுனு/ கா3லி/ திண்டி3/ பான்பு/ பைனி/ (லா)
தாலாடுவாய்/ மெதுவான/ காற்று/ உண்போனின்/ அணை/ மீது/ தாலாடுவாய்...


சரணம்
பம்மின/ வேடு3க/ மீர/ தம்முலதோனு/
களிக்கும்/ வேடிக்கை/ மிக/ பின்னோருடனும்/

கம்மனி/ விடெ3மு/-ஒஸகு3/-ஆ/ ஜனக/-ஆத்மஜதோனு/
மணக்கும்/ வீடிகை/ யளிக்கும்/ அந்த/ சனகன்/ மகளுடனும்/

பொ3ம்ம/ தே3வர/ தண்ட்3ரி/ பூ4மி/-ஈஸு1ல தோட3னு/
பிரம/ தேவனை/ ஈன்றோனே/ புவி/ ஆள்வோருடனும்/

ஸம்மதமுன/ த்யாக3ராஜு/ ஸன்னுதி/ ஸேயக3/ (லா)
மனதார/ தியாகராசன்/ (உன்னை) போற்றி/ செய்ய/ தாலாடுவாய்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

1 - தை3வமா - தை3வமா ராம.

2 - திண்டி3 - தி3ண்டி3 - தி3ண்டு3 : 'கா3லி' (காற்று) என்ற சொல்லுடன், 'திண்டி3' என்பதே பொருந்தும்.

சில புத்தகங்களில், ஒரு சரணம் இரண்டாகப் பிரித்து (முதலிரு வரிகள் ஒரு சரணமாகவும், பின்னிரு வரிகள் இரண்டாவது சரணமாகவும்) கொடுக்கப்பட்டுள்ளது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - ஸம்மதமுன - மனதார - இச்சொல் 'தியாகராஜு'-உடனோ அல்லது பல்லவியுடனோ இணைக்கலாம்.

காற்றுண்போன் - அரவு - சேடன்

பின்னோர் - தம்பியர்

வீடிகை - வெற்றிலை தாம்பூலம்

பிரம தேவன் - பிரமன்

Top

No comments: