Saturday, December 26, 2009

தியாகராஜ கிருதி - நீகே த3ய ராக - ராகம் நீலாம்ப3ரி - Neeke Daya Raaka - Raga Nilambari

பல்லவி
நீகே த3ய ராக நே ஜேயு பனுலெல்ல நெரவேருனா ராம

அனுபல்லவி
1ஏகோபிஞ்சக 2நேனு நீவனு 3ஞானிகேலாகு3
ஸுக2மிச்சுனே ஓ ராக4வ (நீ)

சரணம்
சரணம் 1
மனஸு நில்வனி வாரு மாயா ஜாலமு ஜேஸி
மரி முக்தி கொனனௌனே
கனு ஸம்ஞகு ரானி காந்தனு ப3லிமினி
கரமிட3 வஸ1மௌனே 4ஓ ராக4 (நீ)


சரணம் 2
வாடி3க லேனி வித்3யல சேத ஸப4லோன
வாதி3ஞ்ச போனௌனே
சாடி3 வின்ன மாட 5மதி3னி நில்வ லேனி
6ஸரஸுனி விதமௌனே ஓ ராக4வ (நீ)


சரணம் 3
மெப்புலகை ப3ஹு த4ர்மமு 7ஜேஸிதே
மிகு3ல ப்3ரோவ தகு3னே
தப்பு மாடலு காது3 தாரக நாம
ஸ்ரீ த்யாக3ராஜுனி பைனி ஓ ராக4வ (நீ)


பொருள் - சுருக்கம்
இராமா! ஓ இராகவா! தாரக நாமத்தோனே!
  • உனக்கே தயை வாராது நான் செய்யும் பணிகளெல்லாம் நிறைவேறுமா?
  • ஏகோபிக்காது, 'நான் நீ' யெனும் ஞானிக்கு எங்ஙனம் சுகம் தருமே?

    • மனது நில்லாதவர்கள் செப்பிடுவித்தைகள் செய்து எப்படியும் முத்தி பெறுதலாகுமே;
    • கண் சைகையினுக்கு வாராத பெண்ணை, வலுவில் கரமிட வயப்படலாகுமே;
    • பழக்கமற்ற வித்தைகளுடன், அவையில் வாதிக்க, செல்லத்தகுமே;
    • கோள் கேட்ட சொற்கள், உள்ளத்தினில் நில்லாத பண்புடைத்தோன் விதமாகுமே;
    • (பிறர்) மெச்சுதற்காக மிக்கு கொடையளித்தால் (இறைவன்) மிக்கு காக்கத் தகுமே;


  • தவறான சொற்களன்று;
  • தியாகராசன் மீது உனக்கே தயை வாராது நான் செய்யும் பணிகளெல்லாம் நிறைவேறுமா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீகே/ த3ய/ ராக/ நே/ ஜேயு/ பனுலு/-எல்ல/ நெரவேருனா/ ராம/
உனக்கே/ தயை/ வாராது/ நான்/ செய்யும்/ பணிகள்/ எல்லாம்/ நிறைவேறுமா/ இராமா/


அனுபல்லவி
ஏகோபிஞ்சக/ நேனு/ நீவு/-அனு/ ஞானிகி/-ஏலாகு3/
ஏகோபிக்காது/ 'நான்/ நீ/' யெனும்/ ஞானிக்கு/ எங்ஙனம்/

ஸுக2மு/-இச்சுனே/ ஓ ராக4வ/ (நீ)
சுகம்/ தருமே/ ஓ இராகவா/


சரணம்
சரணம் 1
மனஸு/ நில்வனி வாரு/ மாயா ஜாலமு/ ஜேஸி/
மனது/ நில்லாதவர்கள்/ செப்பிடுவித்தைகள்/ செய்து/

மரி/ முக்தி/ கொனனு/-ஔனே/
எப்படியும்/ முத்தி/ பெறுதல்/ ஆகுமே/

கனு/ ஸம்ஞகு/ ரானி/ காந்தனு/ ப3லிமினி/
கண்/ சைகையினுக்கு/ வாராத/ பெண்ணை/ வலுவில்/

கரமு/-இட3/ வஸ1மு/-ஔனே/ ஓ ராக4வ/ (நீ)
கரம்/ இட/ வயப்படல்/ ஆகுமே/ ஓ இராகவா/


சரணம் 2
வாடி3க/ லேனி/ வித்3யல சேத/ ஸப4லோன/
பழக்கம்/ அற்ற/ வித்தைகளுடன்/ அவையில்/

வாதி3ஞ்ச/ போனு-ஔனே/
வாதிக்க/ செல்லத்தகுமே/

சாடி3/ வின்ன/ மாட/ மதி3னி/ நில்வ லேனி/
கோள்/ கேட்ட/ சொற்கள்/ உள்ளத்தினில்/ நில்லாத/

ஸரஸுனி/ விதமு/-ஔனே/ ஓ ராக4வ/ (நீ)
பண்புடைத்தோன்/ விதம்/ ஆகுமே/ ஓ இராகவா/


சரணம் 3
மெப்புலகை/ ப3ஹு/ த4ர்மமு/ ஜேஸிதே/
(பிறர்) மெச்சுதற்காக/ மிக்கு/ கொடை/ அளித்தால்/

மிகு3ல/ ப்3ரோவ/ தகு3னே/
(இறைவன்) மிக்கு/ காக்க/ தகுமே/

தப்பு/ மாடலு/ காது3/ தாரக/ நாம/
தவறான/ சொற்கள்/ அன்று/ தாரக/ நாமத்தோனே/

ஸ்ரீ த்யாக3ராஜுனி/ பைனி/ ஓ ராக4வ/ (நீ)
ஸ்ரீ தியாகராசன்/ மீது/ ஓ இராகவா/ உனக்கே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - ஓ ராக4 - இச்சொல் புத்தகங்களில் ஒரே சீராகக் கொடுக்கப்படவில்லை.

5 - மதி3னி நில்வ லேனி - மதி3னி நில்ப லேனி.

7 - ஜேஸிதே - ஜேஸின : இவ்விடத்தில் 'ஜேஸிதே' என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஏகோபிஞ்சக - ஏகோபித்தல் - இறைவனுடன் ஒன்றுதல். இது, சம்ஸ்கிருதம் சொல், 'ஏகீப4வ' மற்றும் தெலுங்கு 'ஏகீப4விஞ்சு' என்ற சொல்லின் பேச்சு வழக்குத் திரிபு (colloquial usage) என்று கருதுகின்றேன்.

Top

2 - நேனு நீவனு - 'நான் நீ' - தத்துவச் சொல் : புத்தகங்களில் இதற்கு 'நான்', 'நீ' என்று அகங்காரத்தினைக் குறிப்பிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதற்குமுன் வரும், 'ஏகோபிஞ்சக' என்ற சொல்லினை நோக்குகையில், இது 'அஹம் ப்3ரஹ்மாஸ்மி' (நான் பிரமமே) அல்லது 'ஹம்ஸ' (நான் அவனே) என்ற 'மகா வாக்கியங்களை'க் குறிக்கும் என்று கருதுகின்றேன். இந்த கீர்த்தனை, முன்னிலையில் (second person) உள்ளது. எனவே 'ஹம்ஸ' (நான் அவனே) என்பது 'நான் நீயே' (நேனு நீவு) ('அவன்' என்பதற்கு பதிலாக, 'நீ') என்று கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியன்றேல், 'ஏகோபிஞ்சக' (இறைவனுடன் ஒன்றாது) என்ற சொற்கள் இங்கு இல்லாமலே பொருள் நிறைவுபெறும்.

மகாவாக்கியங்களின் நோக்கத்தினை நேரிடையாக உணராது (ஏகோபிஞ்சக) (aparOksha jnAna), 'நான் அவனே' என்று வாயால் சொன்னால், அவன் ஞானியாக முடியாது என்று தியாகராஜர் கூறுகின்றார். இதனைத்தான் முதலாவது சரணத்தில், 'செப்பிடு வித்தைகள் செய்து முத்தி பெறலாகுமே' என்று கேலி செய்கின்றார்.

மகா வாக்கியங்களைத் திரும்பத் திரும்ப உருவேற்றி, அவ்விதமே ஆதல் - ப்4ரமர-கீட ந்யாயம் எனப்படும். அதாவது, குளவி, எங்கிருந்தோ (தன்னினம் அல்லாத) புழுவினைக் கொண்டு வந்து, அதனைக் கொட்டிக் கொட்டி, தன்னினமாக ஆக்குதல் போன்று.

Top

3 - ஞானி - இச்சொல் இவ்விடத்தில் கேலியாகவோ அல்லது கிண்டலாகவோ கொள்ளலாம்.

6 - ஸரஸுனி - 'ஸரஸுடு3' என்ற தெலுங்கு சொல்லுக்கு, 'பண்புடைத்தவன்', 'நல்ல ரசனைகளுடையவன்' என்றும், பேச்சு வழக்கில், 'காமுகன்' என்றும் பொருட்களுண்டு. ஆனால், இவ்விடத்தில், 'பண்புடைத்தவன்' என்ற பொருளே பொருந்தும். ஏனெனில், 'காமுகன்' போன்ற நடத்தை கெட்டவர்கள், 'கோள் சொல்லுதல்', 'கோள் கேட்டல்' ஆகியவற்றில் ஈடுபடுவதில் வியப்பில்லை. ஆனால், பண்புடைத்தவன் அங்ஙனம் செய்யமாட்டான். அப்படி, கோள் கேட்க நேர்ந்தாலும், அதனை பரப்பாது, தன்னுடன் நிறுத்திக்கொள்வான். இதனைத்தான், தியாகராஜர் இங்கு குறிப்பிடுகின்றார்.

மனது நில்லாதவர் - மனத்தினை அடக்காதவர்

வாதிக்க செல்லத்தகுமே - வாதிக்க முடியும் என

தாரக நாமம் - 'இராமா' எனும் நாமம் பிறவிக் கடலைத் தாண்டுவிப்பது

Top


Updated on 27 Dec 2009

No comments: