மாடாட3வேமி நாதோ 1மாது4ர்ய பூர்ணாத4ர
அனுபல்லவி
ஸாடி தொ3ரகனி ராம ஸ்வாமி மதி3 ரஞ்ஜில்ல (மா)
சரணம்
எது3ரெது3ரு ஜூசியெந்து3 கானக நா
ஹ்ரு2த3யமுனகெந்தோ ஹிதவு லேக
ஸத3யுட3 நேனுண்ட3க3 ஸமுக2மு தொ3ரிகிதே
நீரத3 வர்ண ஸ்ரீ த்யாக3ராஜார்சித முத்3து3க3 (மா)
பொருள் - சுருக்கம்
மதுரம் நிறை இதழ்களோனே! ஈடு கிடைக்காத இராம சுவாமி! கருணையுள்ளத்தோனே! முகில் வண்ணா! தியாகராசனால் தொழப்பெற்றோனே!
- உள்ளம் களிக்கப் பேசமாட்டாயோ என்னுடன்?
- எதிர்பார்த்து, எதிர்பார்த்து, எங்கும் காணாது,
- எனது உள்ளத்திற்கு மிக்கு அமைதியின்றி நானிருக்க,
- (உனது) சமுகம் கிடைத்தால்,
- எதிர்பார்த்து, எதிர்பார்த்து, எங்கும் காணாது,
- இனிதாகப் பேசமாட்டாயோ என்னுடன்?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மாட-ஆட3வேமி/ நாதோ/ மாது4ர்ய/ பூர்ண/-அத4ர/
பேசமாட்டாயோ/ என்னுடன்/ மதுரம்/ நிறை/ இதழ்களோனே/
அனுபல்லவி
ஸாடி/ தொ3ரகனி/ ராம/ ஸ்வாமி/ மதி3/ ரஞ்ஜில்ல/ (மா)
ஈடு/ கிடைக்காத/ இராம/ சுவாமி/ உள்ளம்/ களிக்க/ பேசமாட்டாயோ...
சரணம்
எது3ரு/-எது3ரு/ ஜூசி/-எந்து3/ கானக/ நா/
எதிர்(பார்த்து)/ எதிர்/ பார்த்து/ எங்கும்/ காணாது/ எனது/
ஹ்ரு2த3யமுனகு/-எந்தோ/ ஹிதவு/ லேக/
உள்ளத்திற்கு/ மிக்கு/ அமைதி/ யின்றி/
ஸத3யுட3/ நேனு/-உண்ட3க3/ ஸமுக2மு/ தொ3ரிகிதே/
கருணையுள்ளத்தோனே/ நான்/ இருக்க/ (உனது) சமுகம்/ கிடைத்தால்/
நீரத3/ வர்ண/ ஸ்ரீ த்யாக3ராஜ/-அர்சித/ முத்3து3க3/ (மா)
முகில்/ வண்ணா/ ஸ்ரீ தியாகராசனால்/ தொழப்பெற்றோனே/ இனிதாக/ பேசமாட்டாயோ...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - மாது4ர்ய பூர்ணாத4ர - மதுரம் நிறை இதழ்களோனே - சில புத்தகங்களில் இதற்கு 'மதுரமான சொல்லோனே' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருள், விளக்கத்தில் பொருந்தும். ஆனால், பாடலின் சொற்களினால் நேரிடையாக அத்தகைய பொருள் கொள்ளவியலாது.
Top
Updated on 27 Dec 2009
No comments:
Post a Comment