Wednesday, October 14, 2009

தியாகராஜ கிருதி - ஓ ராம ஓ ராம - ராகம் ஆரபி4 - O Rama O Rama - Raga Arabhi

பல்லவி
ஓ ராம ஓ ராம ஓங்கார தா4
ஓ ராம ஓ ராம ஒனரிஞ்சு ப்ரேம

சரணம்
சரணம் 1
நா மேலுனந்த3ரு நவ்வுடகாயெ-
நேமனி தாளுது3னிக தே3வ ராய (ஓ)


சரணம் 2
நன்னேசினந்து3கு நயமேமி கலிகே3
நின்னே நெர நம்மிதி நீவே நா ஸலிக3 (ஓ)


சரணம் 3
நீகே தகி3யுன்னானு நிஜமு நா மாட
ஸாகேத ராம ரக்ஷண சேயீ பூட (ஓ)


சரணம் 4
4ர லோன ரக்ஷகுலு லேரு தே3
மரசிதே வெரசிதே மாகேமி தோ3வ (ஓ)


சரணம் 5
ஈ ஜன்மமெந்து3கு எவரு தனகேல
ராஜீவ நேத்ர த3ய ரானிதி3 மேலா (ஓ)


சரணம் 6
ஹ்ரு23யமு சலுவைதே முத3மு நீ பாலு
ஸு-த3யாளுட3வைதே ஸுக2மு நீவேலு (ஓ)


சரணம் 7
ஆத்மகையொகடைன ஆஸிஞ்ச லேது3
பரமாத்ம நீகனி பல்க மனஸேல ராது3 (ஓ)


சரணம் 8
நீரைன பாலைன நீகேயனுகொண்டி
தீரைன சக்கனி 1தே3வதனுகொண்டி (ஓ)


சரணம் 9
நீகாஸிஞ்சிதி கானி நிமிஷமு மான
ஏகமை நன்னேலுகோகுண்டேயான (ஓ)


சரணம் 10
நீ கண்டே தொ3ரகுனா நிருபம கா3த்ர
பராகேல ஸ்ரீ த்யாக3ராஜுனி மித்ர (ஓ)


பொருள் - சுருக்கம்
  • ஓ இராமா! ஓங்காரத்துள்ளுறையே! தேவர் தலைவா! சாகேத இராமா! தேவா! கமலக்கண்ணா! பரம்பொருளே! தியாகராசனின் நண்பனே!

    • கனிவு கொள்வாய்

    • எனது சிறப்பினை யாவரும் நகைக்கலாயினர்; என்னவென்று தாளுவேன் இனி?

    • என்னைத் துன்புறுத்தியதற்குப் பயனென்ன கிடைத்தது? உன்னையே மிக்கு நம்பினேன்; நீயே எனது காவல்;

    • உனக்கே தகுந்துள்ளேன்; உண்மையெனது சொல்; காப்பா யிவ்வேளை;

    • புவியில் காப்போரிலர்; மறந்தாலோ, திகைத்தாலோ எமக்கென்ன வழி?

    • இப்பிறவி யெதற்கு? எவரும் எனக்கேன்? தயை வாராதது மேலோ?

    • (எனது) இதயம் குளிர்ந்தால், களிப்பு உனதாகும்; (நீ) நல்ல தயாளனாகினால், சுகமாகும்; நீ(யென்னை) ஆள்வாய்;

    • எனக்காக ஒன்றையும் விழைந்திலேன்; உனக்கெனப் பகர மனதேன் வாராதோ?

    • நீராகிலும், பாலாகிலும் உனக்கேயென்றெண்ணினேன்; முடிவான, இனிய, தேவனெனக் கொண்டேன்;

    • உனக்காசைப்பட்டேன்; எனவே, நிமிடமும் பிரியேன்; (என்னுடன்) ஒன்றி என்னையாளாவிடில், (உன்மீது) ஆணை;

    • உன்னிலும் கிடைக்குமோ ஈடற்ற மாட்சிமை? அசட்டையேன்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஓ ராம/ ஓ ராம/ ஓங்கார/ தா4ம/
ஓ இராமா/ ஓ இராமா/ ஓங்காரத்து/ உள்ளுறையே/

ஓ ராம/ ஓ ராம/ ஒனரிஞ்சு/ ப்ரேம/
ஓ இராமா/ ஓ இராமா/ கொள்வாய்/ கனிவு/


சரணம்
சரணம் 1
நா/ மேலுனு/-அந்த3ரு/ நவ்வுடகு-ஆயெனு/-
எனது/ சிறப்பினை/ யாவரும்/ நகைக்கலாயினர்/

ஏமி-அனி/ தாளுது3னு/-இக/ தே3வ/ ராய/ (ஓ)
என்னவென்று/ தாளுவேன்/ இனி/ தேவர்/ தலைவா/


சரணம் 2
நன்னு/-ஏசின-அந்து3கு/ நயமு/-ஏமி/ கலிகே3/
என்னை/ துன்புறுத்தியதற்கு/ பயன்/ என்ன/ கிடைத்தது/

நின்னே/ நெர/ நம்மிதி/ நீவே/ நா/ ஸலிக3/ (ஓ)
உன்னையே/ மிக்கு/ நம்பினேன்/ நீயே/ எனது/ காவல்/


சரணம் 3
நீகே/ தகி3/-உன்னானு/ நிஜமு/ நா/ மாட/
உனக்கே/ தகுந்து/ உள்ளேன்/ உண்மை/ எனது/ சொல்/

ஸாகேத/ ராம/ ரக்ஷண சே/-ஈ/ பூட/ (ஓ)
சாகேத/ இராமா/ காப்பாய்/ இந்த/ வேளை/


சரணம் 4
4ர லோன/ ரக்ஷகுலு/ லேரு/ தே3வ/
புவியில்/ காப்போர்/ இலர்/ தேவா/

மரசிதே/ வெரசிதே/ மாகு/-ஏமி/ தோ3வ/ (ஓ)
மறந்தாலோ/ திகைத்தாலோ/ எமக்கு/ என்ன/ வழி/


சரணம் 5
ஈ/ ஜன்மமு/-எந்து3கு/ எவரு/ தனகு/-ஏல/
இந்த/ பிறவி/ எதற்கு/ எவரும்/ எனக்கு/ ஏன்/

ராஜீவ/ நேத்ர/ த3ய/ ரானிதி3/ மேலா/ (ஓ)
கமல/ கண்ணா/ தயை/ வாராதது/ மேலோ/


சரணம் 6
ஹ்ரு23யமு/ சலுவ-ஐதே/ முத3மு/ நீ பாலு/
(எனது) இதயம்/ குளிர்ந்தால்/ களிப்பு/ உனதாகும்/

ஸு-த3யாளுட3வு/-ஐதே/ ஸுக2மு/ நீவு/-ஏலு/ (ஓ)
(நீ) நல்ல தயாளன்/ ஆகினால்/ சுகமாகும்/ நீ/ (யென்னை) ஆள்வாய்/


சரணம் 7
ஆத்மகை/-ஒகடைன/ ஆஸிஞ்ச லேது3/
எனக்காக/ ஒன்றையும்/ விழைந்திலேன்/

பரமாத்ம/ நீகு/-அனி/ பல்க/ மனஸு/-ஏல/ ராது3/ (ஓ)
பரம்பொருளே/ உனக்கு/ என/ பகர/ மனது/ ஏன்/ வாராதோ/


சரணம் 8
நீரைன/ பாலைன/ நீகே/-அனுகொண்டி/
நீராகிலும்/ பாலாகிலும்/ உனக்கே/ என்றெண்ணினேன்/

தீரைன/ சக்கனி/ தே3வத/-அனுகொண்டி/ (ஓ)
முடிவான/ இனிய/ தேவன்/ எனக் கொண்டேன்/


சரணம் 9
நீகு/-ஆஸிஞ்சிதி/ கானி/ நிமிஷமு/ மான/
உனக்கு/ ஆசைப்பட்டேன்/ எனவே/ நிமிடமும்/ பிரியேன்/

ஏகமை/ நன்னு/-ஏலுகோக-உண்டே/-ஆன/ (ஓ)
(என்னுடன்) ஒன்றி/ என்னை/ ஆளாவிடில்/ (உன்மீது) ஆணை/


சரணம் 10
நீ கண்டே/ தொ3ரகுனா/ நிருபம/ கா3த்ர/
உன்னிலும்/ கிடைக்குமோ/ ஈடற்ற/ மாட்சிமை/

பராகு/-ஏல/ ஸ்ரீ த்யாக3ராஜுனி/ மித்ர/ (ஓ)
அசட்டை/ ஏன்/ ஸ்ரீ தியாகராசனின்/ நண்பனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தே3வதனுகொண்டி - தே3வ கனுகொண்டி : இவ்விடத்தில் 'தே3வதனுகொண்டி' என்பதே பொருந்தும்.

மேற்கோள்கள்

விளக்கம்
சிறப்பு - இது கேலிச் சொல்லாகும்
உனக்கென - உனது சேவைக்கென
முடிவான தேவன் - பரம்பொருள்

Top


Updated on 14 Oct 2009

No comments: