Saturday, October 10, 2009

தியாகராஜ கிருதி - அடு3கு3 வரமுல - ராகம் ஆரபி4 - Adugu Varamula - Raga Arabhi - Prahlada Bhakti Vijayam

பல்லவி
அடு3கு3 1வரமுலனிச்செத3னு

அனுபல்லவி
2அடு33டு3கு3கு நின்னே தலசுசுன்னானு
அத்3பு4தமைன ப4க்திகி ஸொக்கினானு (அ)

சரணம்
சரணம் 1
4ன கனகமுலு என்னைன நீகு
தா3ர புத்ருலு ஸொக3ஸைன இண்ட்3
சனுவுனனொஸகு3து3 ஸம்ஸ1யமேல
தனுவு சிக்கக3னேல தா3னவ பா3ல (அ)


சரணம் 2
அக்ரம த3னுஜுல கொட்டி நீ
ஆபத3லனு தல மெட்டி
விக்ரமமுன ப3ஹு விக்2யாதிகா3 விதி4
1க்ராது33பட்டமுலனொஸகெ33னு (அ)


சரணம் 3
வாஜி க3ஜாந்தோ3ளிகமுலு நீகு
வரமைன மணி பூ4ஷணமுலு
ராஜிக3னொஸக3க ரவ தாள லேனு 4வர த்யாக3-
ராஜாப்துட3
நேனு (அ)


பொருள் - சுருக்கம்
(இச்சொற்கள் பிரகலாதனுக்கு அரி பகர்வதென)

  • தானவச் சிறுவா! உயர் தியாகராசனின் நண்பா!

    • கேட்கும் வரங்களை நானளித்தேன்;

    • அடிக்கடி உன்னையே நினைந்துள்ளேன்; அற்புதமான (உனது) பத்திக்குச் சொக்கினேன்;

    • செல்வம், பொன், மனைவி, மக்கள், சொகுசான வீடுகள் எவ்வளவாயினும் உனக்குப் பரிவுடன் அளிப்பேன், ஐயமேன்? உடல் இளைப்பதெதற்கு?

    • முறைகெட்ட தானவரை யழித்து, உனது இடுக்கண்களைக் களைந்து, வெற்றியுடனும், மிக்குப் புகழுடனும், பிரமன், இந்திராதியரின் பட்டங்களையளித்தேன்;

    • குதிரைகள், யானைகள், பல்லக்குகள், சிறந்த மணிகளாலான அணிகலன்கள், உனக்கு சம்மதத்துடன் அளிக்காது, சிறிதும் தாளேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அடு3கு3/ வரமுலனு/-இச்செத3னு/
கேட்கும்/ வரங்களை/ யளித்தேன்/


அனுபல்லவி
அடு3கு3-அடு3கு3கு/ நின்னே/ தலசுசு/-உன்னானு/
அடிக்கடி/ உன்னையே/ நினைந்து/ உள்ளேன்/

அத்3பு4தமைன/ ப4க்திகி/ ஸொக்கினானு/ (அ)
அற்புதமான/ (உனது) பத்திக்கு/ சொக்கினேன்/


சரணம்
சரணம் 1
4ன/ கனகமுலு/ என்னைன/ நீகு/
செல்வம்/ பொன்/ எவ்வளவாயினும்/ உனக்கு/

தா3ர/ புத்ருலு/ ஸொக3ஸைன/ இண்ட்3ல/
மனைவி/ மக்கள்/ சொகுசான/ வீடுகளை/

சனுவுனனு/-ஒஸகு3து3/ ஸம்ஸ1யமு/-ஏல/
பரிவுடன்/ அளிப்பேன்/ ஐயம்/ ஏன்/

தனுவு/ சிக்கக3னு/-ஏல/ தா3னவ/ பா3ல/ (அ)
உடல்/ இளைப்பது/ எதற்கு/ தானவ/ சிறுவா/


சரணம் 2
அக்ரம/ த3னுஜுல/ கொட்டி/ நீ/
முறைகெட்ட/ தானவரை/ யழித்து/ உனது/

ஆபத3லனு/ தல மெட்டி/
இடுக்கண்களை/ களைந்து/

விக்ரமமுன/ ப3ஹு/ விக்2யாதிகா3/ விதி4/
வெற்றியுடனும்/ மிக்கு/ புகழுடனும்/ பிரமன்/

1க்ர-ஆது3ல/ பட்டமுலனு/-ஒஸகெ33னு/ (அ)
இந்திராதியரின்/ பட்டங்களை/ யளித்தேன்/


சரணம் 3
வாஜி/ க3ஜ/-ஆந்தோ3ளிகமுலு/ நீகு/
குதிரைகள்/ யானைகள்/ பல்லக்குகள்/ உனக்கு/

வரமைன/ மணி/ பூ4ஷணமுலு/
சிறந்த/ மணிகளாலான/ அணிகலன்கள்/

ராஜிக3னு/-ஒஸக3க/ ரவ/ தாள லேனு/ வர/
சம்மதத்துடன்/ அளிக்காது/ சிறிதும்/ தாளேன்/ உயர்/

த்யாக3ராஜ/-ஆப்துட3/ நேனு/ (அ)
தியாகராசனின்/ நண்பா/ நான்/ கேட்கும்....


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - அடு33டு3கு3கு - அடு33டு3கு3 : இவ்விடத்தில், 'அடு33டு3கு3கு' என்பதே பொருந்தும்.

4 - த்யாக3ராஜாப்துட3 - த்யாக3ராஜாப்துடு3 : இந்த கீர்த்தனை, பிரகலாதனை நோக்கி, இறைவன் கூறுவதாக உள்ளமையால், 'த்யாக3ராஜாப்துட3' - (தியாகராஜனின் நண்பா!) என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - இச்செத3னு மற்றும் 3 - ஒஸகெ33னு - அளித்தேன். இறைவன் நினைத்தது நிகழும். அதனால் அவனுக்கு 'ஸத்ய ஸங்கல்ப' என்று பெயராகும். எனவே, இச்சொற்கள் நிகழ்காலத்தில் அமைந்துள்ளன.

4 - வர த்யாக3ராஜாப்துட3 - 'வர' என்ற சொல் பிரகலாதனைக் குறிப்பதாகவோ, தியாகராஜரைக் குறிப்பதாகவோ கொள்ளலாம்.

இப்பாடல் பிரகலாத பக்தி விஜயம் என்ற நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில் இறைவன் பிரகலாதனை வரங்களளித்து சோதிப்பதாக தியாகராஜர் சித்திரிக்கின்றார்.

தானவர் - அரக்கர்

Top


Updated on 10 Oct 2009

No comments: