Sunday, October 4, 2009

தியாகராஜ கிருதி - ஸுந்த3ரேஸ்1வருனி - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Sundaresvaruni - Raga Sankarabharanam

பல்லவி
ஸுந்த3ரேஸ்1வருனி ஜூசி
ஸுருல ஜூட3 மனஸு வச்சுனா

அனுபல்லவி
அந்த3மு க3ல வர காஸி1கி ஸமானமைன
1கோ3புரமந்து3 வெலயு மா (ஸு)

சரணம்
சரணம் 1
சரணமுலனு ப3ங்கா3ரு நூபுரமுலு
கரமுல ரவ கங்கண யுக3முலு ஸ்ரீ-
கர முக2முன கஸ்தூரி திலகமு
மெரயுசுனுண்டு3 லாவண்யமு க3ல (ஸு)


சரணம் 2
ஒகசோ ப்3ரஹ்மாதி3 ஸுருலு
ஒகசோ நிர்ஜர வார தருணுலு
ஒகசோ தும்பு3ரு நாரதா3து3லு
ஒகசோ ப4க்துலெல்ல பாடு3 (ஸு)


சரணம் 3
2ராஜ ராஜுனிகி செலிகாட3யின
ராஜ ஸே12ருனி கோ3புர நிலயுனி
ராஜஸ கு3ண ரஹிதுனி 3ஸ்ரீ த்யாக3-
ராஜ
பூஜிதுனி ரஜத கி3ரீஸு1னி (ஸு)


பொருள் - சுருக்கம்
  • சுந்தரேசனைக் கண்டபின், வானோரைக் காண மனது வருமோ?

  • எழிலுடைத்த, புனித காசிக்கு ஈடான, கோபுரத்தினில் ஒளிரும் சுந்தரேசனை


    • திருவடிகளிற் பொற்சிலம்புகளும்,

    • கரங்களில் வைர கங்கணச் சோடும்,

    • செழிப்பு அருளும் முகத்தினில் கத்தூரித் திலகமும்

    • மிளிர்ந்துகொண்டிருக்கும், எழிலுடைத்த சுந்தரேசனை


    • ஒரு பக்கம் பிரமன் முதலான சுரர்களும்,

    • ஒரு பக்கம் மூப்பற்றோரின் நடன மங்கையரும்,

    • ஒரு பக்கம் தும்புரு, நாரதாதியரும்,

    • ஒரு பக்கம் தொண்டர்கள் யாவரும் பாடும் சுந்தரேசனை


    • குபேரனுக்கு நெருங்கிய நண்பனாகிய பிறையணிவோனை,

    • கோபுரத்தினில் நிலைபெற்றோனை,

    • இராசத குணமற்றோனை,

    • தியாகராசன் தொழும் மேலோனை,

    • பனிமலை யீசனை,


  • எமது சுந்தரேசனைக் கண்டபின் வானோரைக் காண மனது வருமோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுந்த3ரேஸ்1வருனி/ ஜூசி/
சுந்தரேசனை/ கண்டபின்/

ஸுருல/ ஜூட3/ மனஸு/ வச்சுனா/
வானோரை/ காண/ மனது/ வருமோ/


அனுபல்லவி
அந்த3மு/ க3ல/ வர/ காஸி1கி/ ஸமானமைன/
எழில்/ உடைத்த/ புனித/ காசிக்கு/ ஈடான/

கோ3புரமு-அந்து3/ வெலயு/ மா/ (ஸு)
கோபுரத்தினில்/ ஒளிரும்/ எமது/ சுந்தரேசனை...


சரணம்
சரணம் 1
சரணமுலனு/ ப3ங்கா3ரு/ நூபுரமுலு/
திருவடிகளிற்/ பொற்/ சிலம்புகளும்/

கரமுல/ ரவ/ கங்கண/ யுக3முலு/ ஸ்ரீ/-
கரங்களில்/ வைர/ கங்கண/ சோடும்/ செழிப்பு/

கர/ முக2முன/ கஸ்தூரி/ திலகமு/
அருளும்/ முகத்தினில்/ கத்தூரி/ திலகமும்/

மெரயுசுனு/-உண்டு3/ லாவண்யமு/ க3ல/ (ஸு)
மிளிர்ந்துகொண்டு/ இருக்கும்/ எழில்/ உடைத்த/ சுந்தரேசனை...


சரணம் 2
ஒகசோ/ ப்3ரஹ்மா/-ஆதி3/ ஸுருலு/
ஒரு பக்கம்/ பிரமன்/ முதலான/ சுரர்களும்/

ஒகசோ/ நிர்ஜர/ வார/ தருணுலு/
ஒரு பக்கம்/ மூப்பற்றோரின்/ நடன/ மங்கையரும்/

ஒகசோ/ தும்பு3ரு/ நாரத3-ஆது3லு/
ஒரு பக்கம்/ தும்புரு/ நாரதாதியரும்/

ஒகசோ/ ப4க்துலு/-எல்ல/ பாடு3/ (ஸு)
ஒரு பக்கம்/ தொண்டர்கள்/ யாவரும்/ பாடும்/ சுந்தரேசனை...


சரணம் 3
ராஜ ராஜுனிகி/ செலிகாடு3-அயின/
குபேரனுக்கு/ நெருங்கிய நண்பனாகிய/

ராஜ/ ஸே12ருனி/ கோ3புர/ நிலயுனி/
பிறை/ அணிவோனை/ கோபுரத்தினில்/ நிலைபெற்றோனை/

ராஜஸ/ கு3ண/ ரஹிதுனி/ ஸ்ரீ/
இராசத/ குணம்/ அற்றோனை/ மேலோன்/

த்யாக3ராஜ/ பூஜிதுனி/ ரஜத/ கி3ரி/-ஈஸு1னி/ (ஸு)
தியாகராசன்/ தொழுவோனை/ பனி (வெள்ளி)/ மலை/ ஈசனை/ சுந்தரேசனை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸ்ரீ த்யாக3ராஜ - த்யாக3ராஜ.

Top

மேற்கோள்கள்
1 - கோ3புரமந்து3 - கோபுரம் - இன்றைய கோவூர் - கோவூர் தல புராணம்

Top

விளக்கம்
2 - ராஜ ராஜுனிகி - புத்தகங்களில், இச்சொல்லுக்கு, 'குபேரனுக்கு' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஸம்ஸ்கிருத அகராதியின்படி, 'மஹாராஜ' என்ற சொல்லுக்கு 'குபேரன்' என்று ஒரு பொருளும் உண்டு. அதனை (மஹாராஜ), தியாகராஜர் 'ராஜ ராஜ' என்று மாற்றியிருக்கலாம். ஆனால் 'ராஜ ராஜ' என்ற சொல்லுக்கு, 'குபேரன்' என்று நேரிடையான பொருள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஸுந்தரேசன் - கோவூர் சிவனின் பெயர்
மூப்பற்றோர் - வானோர்
பனிமலையீசன் - சிவன்

Top


Updated on 04 Oct 2009

No comments: