Saturday, October 3, 2009

தியாகராஜ கிருதி - ஸீதா பதி காவவய்ய - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Sita Pati Kaavavayya - Raga Sankarabharanam

பல்லவி
ஸீதா பதி காவவய்ய

சரணம்
caraNam 1
நதாக4 ஹரண வினதா ஸுத க3மன
1க்ரு2தாபராதி4 ஸுக்ரு2தம்பெ3ருக3னே (ஸீதா)


caraNam 2
ஸதா33திஜ ஹித ஸதா3ஸி1வ ப்ரிய
முதா3ன மனுபுமு தா3னவ ஹர (ஸீதா)


caraNam 3
4ராவன து4ரந்த4ராஜ ப4
ஸாக3ரார்தி ஹர த்யாக3ராஜ வினுத (ஸீதா)


பொருள் - சுருக்கம்
  • சீதை மணாளா!

  • பணிவோர் பாவம் களைவோனே! வினதை மைந்தன் மீது வருவோனே!

  • வாயு மைந்தனுக்கினியோனே! சதாசிவனுக்குப் பிரியமானவனே! அரக்கரையழித்தோனே!

  • புவியினைக் காக்கும் பொறுப்புடையோனே! பிறவாதவனே! பிறவிக் கடல் துயர் களைவோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

    • குற்றவாளியாகினேன், நற்செயல்கள் (என்னவென்று) அறியாமலே.

    • காப்பாயய்யா.

    • மகிழ்வுடன் பேணுவாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸீதா/ பதி/ காவு/-அய்ய/
சீதை/ மணாளா/ காப்பாய்/ அய்யா/


சரணம்
caraNam 1
நத/-அக4/ ஹரண/ வினதா/ ஸுத/ க3மன/
பணிவோர்/ பாவம்/ களைவோனே/ வினதை/ மைந்தன்/ (மீது) வருவோனே/

க்ரு2த/-அபராதி4/ ஸுக்ரு2தம்பு3/-எருக3னே/ (ஸீதா)
ஆகினேன்/ குற்றவாளி/ நற்செயல்கள்/ (என்னவென்று) அறியாமலே/


caraNam 2
ஸதா33திஜ/ ஹித/ ஸதா3ஸி1வ/ ப்ரிய/
வாயு மைந்தனுக்கு/ இனியோனே/ சதாசிவனுக்கு/ பிரியமானவனே/

முதா3ன/ மனுபுமு/ தா3னவ/ ஹர/ (ஸீதா)
மகிழ்வுடன்/ பேணுவாய்/ அரக்கரை/ அழித்தோனே/


caraNam 3
4ர/-அவன/ து4ரந்த4ர/-அஜ/ ப4வ/
புவியினை/ காக்கும்/ பொறுப்புடையோனே/ பிறவாதவனே/ பிறவி/

ஸாக3ர/-ஆர்தி/ ஹர/ த்யாக3ராஜ/ வினுத/ (ஸீதா)
கடல்/ துயர்/ களைவோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - க்ரு2தாபராதி4 - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு 'நான் குற்றம் செய்தேன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருள் கொள்ள, 'க்ரு2தாபராத4' என்று இருக்கவேண்டுமெனக் கருதுகின்றேன். எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளதால், 'க்ரு2தாபராதி4' இங்கும் ஏற்கப்பட்டது. ஆயின், 'குற்றவாளி ஆகினேன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

வினதை மைந்தன் - கருடன்

Top


Updated on 04 Oct 2009

No comments: