ஸீதா கல்யாண வைபோ4க3மே
ராம கல்யாண வைபோ4க3மே
சரணம்
சரணம் 1
பவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்ர
ரவி ஸோம வர நேத்ர ரமணீய கா3த்ர (ஸீதா)
சரணம் 2
ப4க்த ஜன பரிபால ப4ரித ஸ1ர ஜால
பு4க்தி முக்தித3 லீல பூ4-தே3வ பால (ஸீதா)
சரணம் 3
பாமராஸுர பீ4ம 1பரிபூர்ண காம
ஸ்1யாம ஜக3த3பி4ராம ஸாகேத தா4ம (ஸீதா)
சரணம் 4
ஸர்வ லோகாதா4ர 2ஸமரைக வீர
3க3ர்வ மானவ தூ3ர கனகாக3 தீ4ர (ஸீதா)
சரணம் 5
நிக3மாக3ம விஹார நிருபம ஸ1ரீர
நக3 த4ராக4 விதா3ர நத லோகாதா4ர (ஸீதா)
சரணம் 6
பரமேஸ1 நுத கீ3த ப4வ ஜலதி4 போத
தரணி குல ஸஞ்ஜாத த்யாக3ராஜ நுத (ஸீதா)
பொருள் - சுருக்கம்
- சீதையின் திருமண வைபோகமே!
- இராமனின் திருமண வைபோகமே!
- வாயு மைந்தன் துதிக்கும்,
- புனித சரிதமுடைய,
- பரிதி, மதிகளை உயர் கண்களாயுடைய,
- இனிய உருவமுடைய,
- தொண்டர்களைப் பேணும்,
- நிறைந்த அம்புகளுடைய,
- இம்மை, மறுமை திருவிளையாடலாக அருளும்,
- அந்தணரைக் காக்கும்,
- தீயோர், அரக்கருக்கு அச்சமூட்டும்,
- இச்சித்தவை அடையப்பெறும்,
- கரு நீல வண்ண,
- உலகிற்கு மகிழ்வூட்டும்,
- சாகேத நகருறை,
- பல்லுலக ஆதாரமான,
- களத்தினில் தனியொரு வீரனாகிய,
- செருக்குடை மனிதரினின்று விலகிய,
- பொன் மலை நிகர் தீரனாகிய,
- மறைகள், ஆகமங்களில் உறையும்,
- ஒப்பற்ற உடலுடை,
- (மந்தர) மலை சுமந்த,
- பாவங்களைக் களையும்,
- பணிந்தோருக்கு ஆதாரமான,
- பரமேசன் போற்றிப் பாடும்,
- பிறவிக் கடலின் கலமாகிய,
- பரிதி குலத்தில் சிறக்கத் தோன்றிய,
- தியாகராசன் போற்றும்
- இராமனின் திருமண வைபோகமே!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸீதா/ கல்யாண/ வைபோ4க3மே/
சீதையின்/ திருமண/ வைபோகமே/
ராம/ கல்யாண/ வைபோ4க3மே/
இராமனின்/ திருமண/ வைபோகமே/
சரணம்
சரணம் 1
பவனஜ/ ஸ்துதி பாத்ர/ பாவன/ சரித்ர/
வாயு மைந்தன்/ துதிக்கும்/ புனித/ சரிதமுடைய/
ரவி/ ஸோம/ வர/ நேத்ர/ ரமணீய/ கா3த்ர/ (ஸீதா)
பரிதி/ மதிகளை/ உயர்/ கண்களாயுடைய/ இனிய/ உருவமுடைய/ இராமனின்...
சரணம் 2
ப4க்த ஜன/ பரிபால/ ப4ரித/ ஸ1ர/ ஜால/
தொண்டர்களை/ பேணும்/ நிறைந்த/ அம்புகளுடைய/
பு4க்தி/ முக்தித3/ லீல/ பூ4-தே3வ/ பால/ (ஸீதா)
இம்மை/ மறுமை அருளும்/ திருவிளையாடலாக/ அந்தணரை/ காக்கும்/ இராமனின்...
சரணம் 3
பாமர/-அஸுர/ பீ4ம/ பரிபூர்ண/ காம/
தீயோர்/ அரக்கருக்கு/ அச்சமூட்டும்/ அடையப்பெறும்/ இச்சித்தவை/
ஸ்1யாம/ ஜக3த்/-அபி4ராம/ ஸாகேத/ தா4ம/ (ஸீதா)
கரு நீல வண்ண/ உலகிற்கு/ மகிழ்வூட்டும்/ சாகேத நகர்/ உறை/ இராமனின்...
சரணம் 4
ஸர்வ லோக/-ஆதா4ர/ ஸமர/-ஏக/ வீர/
பல்லுலக/ ஆதாரமான/ களத்தினில்/ தனியொரு/ வீரனாகிய/
க3ர்வ/ மானவ/ தூ3ர/ கனக/-அக3/ தீ4ர/ (ஸீதா)
செருக்குடை/ மனிதரினின்று/ விலகிய/ பொன்/ மலை/ (நிகர்) தீரனாகிய/ இராமனின்...
சரணம் 5
நிக3ம/-ஆக3ம/ விஹார/ நிருபம/ ஸ1ரீர/
மறைகள்/ ஆகமங்களில்/ உறையும்/ ஒப்பற்ற/ உடலுடை/
நக3/ த4ர/-அக4/ விதா3ர/ நத லோக/-ஆதா4ர/ (ஸீதா)
மலை/ சுமந்த/ பாவங்களை/ களையும்/ பணிந்தோருக்கு/ ஆதாரமான/ இராமனின்...
சரணம் 6
பரம-ஈஸ1/ நுத/ கீ3த/ ப4வ/ ஜலதி4/ போத/
பரமேசன்/ போற்றி/ பாடும்/ பிறவி/ கடலின்/ கலமாகிய/
தரணி/ குல/ ஸஞ்ஜாத/ த்யாக3ராஜ/ நுத/ (ஸீதா)
பரிதி/ குலத்தில்/ சிறக்கத் தோன்றிய/ தியாகராசன்/ போற்றும்/ இராமனின்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் இப்பாடலின் ராகம் 'குறஞ்சி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
2 - ஸமரைக வீர - ஸமரைக தீ4ர : அந்த சரணத்திலேயே, அடுத்த வரியினில், 'தீ4ர' திரும்பவும் வருவதனால், இங்கு 'வீர' ஏற்கப்பட்டது.
3 - க3ர்வ மானவ - க3ர்வ மானஸ : எல்லா புத்தகங்களிலும், 'க3ர்வ மானவ' (செருக்குடைத்த மானவர்) என்ற பொருளே கொள்ளப்பட்டுள்ளதால், 'க3ர்வ மானவ' ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
1 - பரிபூர்ண காம - இச்சித்தது நிறைவுறும். கீதையில், கண்ணன் கூறுவது (3-வது அத்தியாயம், 22-வது செய்யுள்) -
"பார்த்தா! எனக்கு முவ்வுலகத்திலும், இயற்றப்படவேண்டிய கடமைகளோ, நான் அடையாதவையோ, இனி அடையவேண்டியவையோ, சிறிதும் இல்லை. ஆயினும், நான் பணிகளைத் தொடர்ந்து செய்கின்றேன்." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)
Top
விளக்கம்
வைபோகம் - பெரும் சீர் சிறப்பு
பொன் மலை - மேரு மலை
மலை சுமந்த - மந்தர மலை
பிறவிக் கடலின் கலம் - பிறவிக் கடலினைக் கடத்துவிக்கும் கலம்
Top
Updated on 02 Oct 2009
2 comments:
அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 3 ல் பரிபூர்ண காம என்பதற்கு இச்சித்தது நிறைவுறும் என்று பொருள் கொடுத்துள்ளீர். யார் இச்சித்ததுஎன்ற சந்தேகம் எழ வாய்ப்பிருக்கிறது. ஆங்கிலத்தில் who accomplishes His desires என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொடுத்துள்ள கீதை (3-22) படி இச்சித்ததெல்லாம் அடையப்பெற்றோன் என்று தானே பொருள்.
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
நீங்கள் கூறியபடி திருத்தியுள்ளேன்.
வணக்கம்.
வே. கோவிந்தன்.
Post a Comment