Wednesday, September 2, 2009

தியாகராஜ கிருதி - ஏ வித4முலனைன - ராகம் ஸ1ங்கராப4ரணம் - E Vidhamulanaina - Raga Sankarabharanam

பல்லவி
ஏ வித4முலனைன கானி
1நன்னேலுகொன மனஸு ராதா3 ராம

அனுபல்லவி
பா4விஞ்சி ஜூசுபட்ல நீவே
ப்3ரோவ வலெனு கானி வேரெவ்வரு (ஏ)

சரணம்
சரணம் 1
பாவன ரூப பராத்பர 2நீ பாத3
ஸேவனு 3கோரிதியீ பூ4-ஸுருலனு
நீ வலெ கருணா நிதி4யை ப்3ரோசின
தே3வதலெவருரா ராம (ஏ)


சரணம் 2
தீ3ன த3யாபர மூர்திவி நீவனி
நே நெர நம்மிதிரா அதி3 கா3கனு
தா3னவ க3ர்வ விதா3ரண நேனு
ஸதா3 நினு வேடி3திரா ராம (ஏ)


சரணம் 3
4ஸாக்ஷாத்காரமு நீவே நீது3
5கடாக்ஷமு லேகயெவரு ப்3ரதிகிரி ஜக3த்-
ஸாக்ஷியைன 6ஜீவனஜ3ளாய-
தாக்ஷ த்யாக3ராஜ பக்ஷ இபு(டே3)


பொருள் - சுருக்கம்
இராமா! புனித உருவத்தோனே! பராபரனே! அரக்கர்களின் செருக்கினை அடக்கியோனே! பல்லுலக சாட்சியாகிய, தாமரையிதழ் நிகர் நீண்ட கண்களோனே! தியாகராசனின் பக்கமிருப்பவனே!
  • இப்போழ்து எவ்விதமாயினும் என்னை யாண்டுகொள்ள மனது வாராதோ?

  • உணர்ந்து பார்க்கையில், நீயே காக்கவேண்டுமேயன்றி, வேறு யார்?

  • உனது திருவடி சேவையினைக் கோரினேன்;

  • இவ்வந்தணர்களை உன்னைப் போன்று, கருணைக் கடலாகி, காத்த கடவுளர்கள் எவரய்யா?

  • எளியோருக்கு மிக்கு கருணை புரியும் கடவுள் நீயென நான் மிக்கு நம்பினேனய்யா; அஃதன்றி,

  • நான் எப்போழ்தும் உன்னை வேண்டினேனய்யா;

  • கண்ணெதிரில் தோன்றுபவன் நீயே;

  • உனது கடைக்கண் பார்வையின்றி யார் பிழைத்தனர்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏ/ வித4முலனு/-ஐன கானி/
எந்த/ விதம்/ ஆயினும்/

நன்னு/-ஏலுகொன/ மனஸு/ ராதா3/ ராம/
என்னை/ ஆண்டுகொள்ள/ மனது/ வாராதோ/ இராமா/


அனுபல்லவி
பா4விஞ்சி/ ஜூசுபட்ல/ நீவே/
உணர்ந்து/ பார்க்கையில்/ நீயே/

ப்3ரோவ/ வலெனு/ கானி/ வேரு/-எவ்வரு/ (ஏ)
காக்க/ வேண்டுமே/ அன்றி/ வேறு/ யார்/


சரணம்
சரணம் 1
பாவன/ ரூப/ பராத்பர/ நீ/ பாத3/
புனித/ உருவத்தோனே/ பராபரனே/ உனது/ திருவடி/

ஸேவனு/ கோரிதி/-ஈ/ பூ4-ஸுருலனு/
சேவையினை/ கோரினேன்/ இந்த/ அந்தணர்களை/

நீ/ வலெ/ கருணா/ நிதி4யை/ ப்3ரோசின/
உன்னை/ போன்று/ கருணை/ கடலாகி/ காத்த/

தே3வதலு/-எவருரா/ ராம/ (ஏ)
கடவுளர்கள்/ எவரய்யா/ இராமா/


சரணம் 2
தீ3ன/ த3யாபர/ மூர்திவி/ நீவு/-அனி/
எளியோருக்கு/ மிக்கு கருணை புரியும்/ கடவுள்/ நீ/ என/

நே/ நெர/ நம்மிதிரா/ அதி3/ கா3கனு/
நான்/ மிக்கு/ நம்பினேனய்யா/ அஃது/ அன்றி/

தா3னவ/ க3ர்வ/ விதா3ரண/ நேனு/
அரக்கர்களின்/ செருக்கினை/ அடக்கியோனே/ நான்/

ஸதா3/ நினு/ வேடி3திரா/ ராம/ (ஏ)
எப்போழ்தும்/ உன்னை/ வேண்டினேனய்யா/ இராமா/


சரணம் 3
ஸாக்ஷாத்காரமு/ நீவே/ நீது3/
கண்ணெதிரில் தோன்றுபவன்/ நீயே/ உனது/

கடாக்ஷமு/ லேக/-எவரு/ ப்3ரதிகிரி/ ஜக3த்/-
கடைக்கண் பார்வை/ இன்றி/ யார்/ பிழைத்தனர்/ பல்லுலக/

ஸாக்ஷியைன/ ஜீவனஜ/ த3ள/-ஆயத/-
சாட்சியாகிய/ தாமரை/ இதழ் (நிகர்)/ நீண்ட/

அக்ஷ/ த்யாக3ராஜ/ பக்ஷ/ இபுடு3/(ஏ)
கண்களோனே/ தியாகராசனின்/ பக்கமிருப்பவனே/ இப்போழ்து/ எவ்விதமாயினும்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஏலுகொன மனஸு ராதா3 - ஏலுகோ மனஸு ராதா3 : 'ஏலுகொன மனஸு ராதா3' என்பதே சரியாகும்.

2 - நீ பாத3 - நீ பத3.

3 - கோரிதியீ - கோரிதியே - கோரிதிர : 'கோரிதியீ' என்பது மிக்கு பொருந்தும்.

4 - ஸாக்ஷாத்காரமு - ஸாக்ஷாத்காரமுனு.

5 - கடாக்ஷமு லேகயெவரு - கடாக்ஷமு லேகெவரு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
6 - ஜீவனஜ - 'ஜீவன' என்ற சொல்லுக்கு 'நீர்' என்றும் பொருளாகும். 'ஜீவனஜ' என்பதற்கு 'நீரில் தோன்றும்' அதாவது 'தாமரை' எனப் பொருளாகும்.

Top


Updated on 03 Sep 2009

No comments: