Thursday, September 3, 2009

தியாகராஜ கிருதி - க3த மோஹாஸ்1ரித - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Gata Mohaasrita - Raga Sankarabharanam

பல்லவி
3த மோஹாஸ்1ரித 1பாலாத்3பு4த ஸீதா ரமண

சரணம்
சரணம் 1
4வ ஸாரஸ ப4வ மானஸ ப4வனாமர வினுத (க3த)


சரணம் 2
4வ தாரக ஸவ பாலன 24வதா31ர ஹரண (க3த)


சரணம் 3
வினதாஜ க3மன ராக4வ முனி பூஜித சரண (க3த)


சரணம் 4
1த கோடி சரித மானவ 3மத பே43க த3மன (க3த)


சரணம் 5
கர ஸோ1பி4த ஸ1ர பாப திமிர பா4ஸ்கர ஸுகு3ண (க3த)


சரணம் 6
1ரஜானன கருணாகர வர வாரண ஸ1ரண (க3த)


சரணம் 7
நத மானஸ ஹித கர பாலித த்யாக3ராஜ (க3த)


பொருள் - சுருக்கம்
  • மயக்கம் அகன்றவனே!

  • அண்டியோரைக் காப்போனே!

  • அற்புதமானவனே!

  • சீதைக் கேள்வனே!


  • சிவன், மலரோனின் இதயத்துறையே!

  • வானோரால் போற்றப் பெற்றோனே!


  • பிறவிக் கடலைத் தாண்டுவிப்போனே!

  • வேள்வி காப்போனே!

  • பிறவியறுப்போனே!

  • அரக்கரையழிப்போனே!


  • வினதை மைந்தன் மீது வரும் இராகவா!

  • முனிவரால் தொழப்பெற்றத் திருவடியோனே!


  • நூறு கோடி சரிதங்களுடை மானவனே!

  • மத வேறுபாடு செய்வோரை யழிப்போனே!


  • கரங்களில் சிறக்கும் அம்புகளோனே!

  • பாவ இருள் போக்கும் பகலவனே!

  • நற்பண்புகளோனே!


  • கமல வதனத்தோனே!

  • கருணாகரனே!

  • உயர் கரியின் புகலே!


  • பணிந்தோர் மனத்திற்கு இனிது செய்வோனே!

  • தியாகராசனைப் பேணுவோனே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3த/ மோஹ/-ஆஸ்1ரித/ பால/-அத்3பு4த/ ஸீதா/ ரமண/
அகன்றவனே/ மயக்கம்/ அண்டியோரை/ காப்போனே/ அற்புதமானவனே/ சீதை/ கேள்வனே/


சரணம்
சரணம் 1
4வ/ ஸாரஸ ப4வ/ மானஸ/ ப4வன/-அமர/ வினுத/ (க3த)
சிவன்/ மலரோனின்/ இதயத்து/ உறையே/ வானோரால்/ போற்றப் பெற்றோனே/


சரணம் 2
4வ/ தாரக/ ஸவ/ பாலன/ ப4வத3/-ஆஸ1ர/ ஹரண/ (க3த)
பிறவிக் கடலை/ தாண்டுவிப்போனே/ வேள்வி/ காப்போனே/ பிறவியறுப்போனே/ அரக்கரை/ அழிப்போனே/


சரணம் 3
வினதாஜ/ க3மன/ ராக4வ/ முனி/ பூஜித/ சரண/ (க3த)
வினதை மைந்தன் (மீது)/ வரும்/ இராகவா/ முனிவரால்/ தொழப்பெற்ற/ திருவடியோனே/


சரணம் 4
1த/ கோடி/ சரித/ மானவ/ மத/ பே43க/ த3மன/ (க3த)
நூறு/ கோடி/ சரிதங்களுடை/ மானவனே/ மத/ வேறுபாடு செய்வோரை/ யழிப்போனே/


சரணம் 5
கர/ ஸோ1பி4த/ ஸ1ர/ பாப/ திமிர/ பா4ஸ்கர/ ஸுகு3ண/ (க3த)
கரங்களில்/ சிறக்கும்/ அம்புகளோனே/ பாவ/ இருள்/ போக்கும்/ பகலவனே/ நற்பண்புகளோனே/


சரணம் 6
1ரஜ/-ஆனன/ கருணாகர/ வர/ வாரண/ ஸ1ரண/ (க3த)
கமல/ வதனத்தோனே/ கருணாகரனே/ உயர்/ கரியின்/ புகலே/


சரணம் 7
நத/ மானஸ/ ஹித/ கர/ பாலித/ த்யாக3ராஜ/ (க3த)
பணிந்தோர்/ மனத்திற்கு/ இனிது/ செய்வோனே/ பேணுவோனே/ தியாகராசனை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - 4வதா31ர ஹரண - ப4வ ஆஸ1ர ஹரண : 'ப4வதா31ர ஹரண' என்பதனை 'ப4வ+த3+ஆஸ1ர+ஹரண' என்று பிரிக்கலாம். இவ்விரண்டு வேறுபாடுகளில் எது சரியென்று தெரியவில்லை. 'ஆஸ1ர ஹரண' என்பதற்கு 'அரக்கரை அழிப்போன்' என்று பொருளாகும். ஆனால் 'ப4வத3' என்பதற்கு என்ன பொருள் என விளங்கவில்லை.

'ப4வ ஆஸ1ர ஹரண' என்பதற்கும் சரிவர பொருள் விளங்கவில்லை. 'பிறவிக்கடலெனும் அரக்கரை அழிப்போனே' என்று பொருள் கொள்ளலாம்.

ஸம்ஸ்கிருத அகராதியின்படி 'த3' என்ற சொல்லுக்கு 'அருள்வோன்' என்று பொருளாகும். அத்துடன், 'அறுப்பபோன்' என்றும் பொருள் உண்டு. எனவே, இவ்விடத்தில் 'த3'-வுக்கு 'அறுப்போன்' என்று பொருள் கொண்டு 'ப4வத3' என்பதனை 'பிறவியறுப்போன்' என்று மொழிபெயர்க்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
3 - மத - மதங்கள் - சைவம் வைணவம் முதலான அறு மதங்கள்

விளக்கம்
1 - அத்3பு4த ஸீதா ரமண - அற்புதமானவனே! சீதைக் கேள்வனே! - 'அற்புதமான சீதைக் கேள்வனே' என்றும் கொள்ளலாம்.

வினதை மைந்தன் - கருடன்

கரி - கஜேந்திரன்

Top


Updated on 03 Sep 2009

No comments: