Monday, September 7, 2009

தியாகராஜ கிருதி - பரிபாலய தா3ஸ1ரதே2 - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Paripaalaya Dasarathe - Raga Sankarabharanam

பல்லவி
பரிபாலய தா31ரதே2 ராம மாம்
பரிபாலய தா31ரதே2

சரணம்
சரணம் 1
1கபட நாடக ஸூத்ர தா4
கனக படாவ்ரு2த லோகாதா4ர மாம் (ப)<


சரணம் 2
அபரிமிதானந்த3 போ34 ராம
அபஹ்ரு2த ஸ்1ரித ப4வ பா34 மாம் (ப)


சரணம் 3
மார கோடி நிப4 தே3
ஸு-குமார பாலித வைதே3ஹ மாம் (ப)


சரணம் 4
1ர ஜிதாஸ1ர ஸர்வஸ்வ ராம
1ரணாக3தாப்த ஸர்வஸ்வ மாம் (ப)


சரணம் 5
பாமர ஜன க3ண தூ3
பூ4பாமர நிசயாதா4ர மாம் (ப)


சரணம் 6
பவனஜ த்4ரு2த பாத3 கமல
ஹ்ரு2த்-தாப வன குடா2ர வினுத மாம் (ப)


சரணம் 7
ராஜாதி4ராஜ வேஷ த்யாக3-
ராஜ பூஜித ம்ரு2து3 பா4ஷ மாம் (ப)


பொருள் - சுருக்கம்
  • தசரதன் மைந்தா!

  • இராமா!

  • வஞ்ச நாடகப் பாவைக்கூத்தா!

  • பொன்னாடையணிவோனே!

  • உலகத்திற்கு ஆதாரமே!

  • அளவற்ற இன்பத்தின் உணர்வூட்டுவோனே!

  • அண்டியோர் பிறவித் தொல்லைகளைக் களைவோனே!

  • கோடி மதனர்கள் நிகருடலுடை அழகிய இளைஞனே!

  • வைதேகியைக் காத்தோனே!

  • அம்புகளால் அரக்கருடைமை யாவும் வென்றோனே!

  • சரணடைந்தோருக்கும், இனியோருக்கும் யாவுமானவனே!

  • தீய மக்கள் கூட்டத்தினின்றும் விலகியோனே!

  • புவியாள்வோருக்கும் வானோர்களுக்கும் ஆதாரமே!(அல்லது)

  • புவியாள்வோனே! வானோர்களுக்கு ஆதாரமே!

  • வாயு மைந்தன் பற்றும் திருவடித் தாமரையோனே!

  • உள்ள வெம்மைக் காட்டினையழிக்கும் கோடரியே!

  • போற்றப் பெற்றோனே!

  • பேரரசனாய் வேடமணிந்தோனே!

  • தியாகராசனால் தொழப் பெற்றோனே!

  • மென்சொல்லோனே!

    • காப்பாயென்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரிபாலய/ தா31ரதே2/ ராம/ மாம்/
காப்பாய்/ தசரதன் மைந்தா/ இராமா/ என்னை/

பரிபாலய/ தா31ரதே2/
காப்பாய்/ தசரதன் மைந்தா/


சரணம்
சரணம் 1
கபட/ நாடக/ ஸூத்ர தா4ர/
வஞ்ச/ நாடக/ பாவைக்கூத்தா/

கனக/ பட/-ஆவ்ரு2த/ லோக/-ஆதா4ர/ மாம்/ (ப)
பொன்/ ஆடை/ அணிவோனே/ உலகத்திற்கு (மக்களுக்கு)/ ஆதாரமே/ என்னை/...


சரணம் 2
அபரிமித/-ஆனந்த3/ போ34/ ராம/
அளவற்ற/ இன்பத்தின்/ உணர்வூட்டுவோனே/ இராமா/

அபஹ்ரு2த/ ஸ்1ரித/ ப4வ/ பா34/ மாம்/ (ப)
களைவோனே/ அண்டியோர்/ பிறவி/ தொல்லைகளை/ என்னை/...


சரணம் 3
மார/ கோடி/ நிப4/ தே3ஹ/
மதனர்கள்/ கோடி/ நிகர்/ உடலுடை/

ஸு-குமார/ பாலித/ வைதே3ஹ/ மாம்/ (ப)
அழகிய இளைஞனே/ காத்தோனே/ வைதேகியை/ என்னை/...


சரணம் 4
1ர/ ஜித/-ஆஸ1ர/ ஸர்வஸ்வ/ ராம/
அம்புகளால்/ வென்றோனே/ அரக்கர்/ உடைமை யாவும்/ இராமா/

1ரண/-ஆக3த/-ஆப்த/ ஸர்வஸ்வ/ மாம்/ (ப)
சரண்/ அடைந்தோருக்கும்/ இனியோருக்கும்/ யாவுமானவனே/ என்னை/...


சரணம் 5
பாமர/ ஜன/ க3ண/ தூ3ர/
தீய/ மக்கள்/ கூட்டத்தினின்றும்/ விலகியோனே/

பூ4/-ப/-அமர நிசய/-ஆதா4ர/ மாம்/ (ப)
புவி/ ஆள்வோருக்கும்/ வானோர்களுக்கும்/ ஆதாரமே/(அல்லது)
புவி/ ஆள்வோனே/ வானோர்களுக்கு/ ஆதாரமே/ என்னை/...


சரணம் 6
பவனஜ/ த்4ரு2த/ பாத3/ கமல/
வாயு மைந்தன்/ பற்றும்/ திருவடி/ தாமரையோனே/

ஹ்ரு2த்/-தாப/ வன/ குடா2ர/ வினுத/ மாம்/ (ப)
உள்ள/ வெம்மை/ காட்டினை (யழிக்கும்)/ கோடரியே/ போற்றப் பெற்றோனே/ என்னை/...


சரணம் 7
ராஜ-அதி4ராஜ/ வேஷ/
பேரரசனாய்/ வேடமணிந்தோனே/

த்யாக3ராஜ/ பூஜித/ ம்ரு2து3/ பா4ஷ/ மாம்/ (ப)
தியாகராசனால்/ தொழப் பெற்றோனே/ மென்/ சொல்லோனே/ என்னை/...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
ஒவ்வொரு சரணத்திலும் கடைசி சொல்லாகிய 'மாம்', சில புத்தகங்களில், சில சரணங்களில் கொடுக்கப்படவில்லை. ஒரே சீராக இருப்பதற்காக, அனைத்து சரணங்களிலும், இச்சொல், இங்கு ஏற்கப்பட்டுள்ளது.

Top

மேற்கோள்கள்
1 - கபட நாடக ஸூத்ர தா4 - வஞ்ச நாடகப் பாவைக்கூத்தன் - உலகமொரு நாடக மேடையாகவும், நாமெல்லாம் பாவைகளாகவும், இறைவன் பாவைக் கூத்தனாகவும்

ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழல்களையும், இறைவன் ஏதும் நோக்கமின்றி நடத்துகின்றான். ஆயினும், இறைவனுடைய அவதாரங்களில், அவனுடைய சில செயல்கள், மேலெழுந்தவாரியாக நோக்குகையில், வஞ்சமானவை என்று கூறத்தோன்றும். உதாரணமாக, மோகினியாக அவதரித்து அசுரர்களுக்கு அமிழ்து கிடைக்காமற் செய்தது (பாகவத புராணம், 8-வது புத்தகம், 12-வது அத்தியாயம்), வாமனராக அவதரித்து பலி சக்கரவர்த்தியின் தலைமீது மூன்றாவது அடி ஊன்றியது, முசுகுந்தனுக்கு மறைந்திருந்து அருளியது (பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 50) ஆகியவை. அதனால்தான், இறைவனை 'வஞ்ச நாடகப் பாவைக்கூத்தன்' என்கிறார் தியாகராஜர்.

வாமனாவதாரம் பற்றிய வைணவப் பெருந்தகை தேசிகனின் 'தெஹலீஸ ஸ்துதி' நோக்கவும்.

முசுகுந்தன் ராமனுடைய மூதாதையரில் ஒருவனாகும். முசுகுந்தன் கதைச் சுருக்கம் நோக்கவும்.

முசுகுந்தன் சிவத்தொண்டனென்றும் கூறப்படும். விடங்கத் தலங்களைப் பற்றிய விவரம் நோக்கவும். - திருவாரூர் ஓர் விடங்கத்தலமாகும்.

பாகவத புராணம்

Top

விளக்கம்
வைதேகி - சீதை

Top


Updated on 07 Sep 2009

No comments: